Thursday, October 20, 2011

ஏக்கம்... (மணமாகாத பெண்ணின்)



பெற்றோர் எனக்காக வைத்திட்ட
பெயர் ஒன்றுமட்டுமே வாழ்வில்...

என்னை அழைக்க நானே
எனக்குள் இட்டுக்கொள்வது எத்தனையோ?

இந்நாள்வரை அதிலெதுவுமே நிரந்தரமாய்
இல்லாமல் எல்லாமே கா(ல)த்தோடு...

மணமகன் ஒவ்வொருவரின் ஜாதகம்
மனைக்கு வரும்போதும் மாறிக்கொண்டே...

அவனுடைய பெயருக்கு பின்னால் - சேர்த்து
இவளுடைய பெயரை எண்ணிக்கொண்டே...

3 comments:

SURYAJEEVA said...

super...
நல்லா இருக்குங்க

Ranioye said...

arumai vasan!

Unknown said...

பாபம் பெண்மை அழுகிறதே-நல்
பரிவுள் ஆழமாய் விழுகிறதே
தாபம் அவளுள்எழுகிறதோ-அதை
தனிக்க ஏங்கி அழுகிறதோ

கருத்துள் பூத்த கவிதை!

புலவர் சா இராமாநுசம்