Thursday, May 28, 2009

என் பாட்டுடை தலைவன்

எண்ணிருந்தால் எத்தகையோ
சுயவாழ்கை வாழ்ந்துஇருக்கலாம்
எண்ணியது என்னவோ
பொதுவாழ்க்கை! எங்குஇருக்கிறாய் இன்று...



இதயத்தில் தமிழினம் என்போருக்கு
சமஉரிமை வேண்டும் என்ற உணர்வைகொண்டாய்
இலங்கையில் தமிழீழம் என்றதொரு
சட்டம் வேண்டும் என்று உரக்கசொன்னாய் ...



உன்வழி தவறு என்று
எண்ணுபவர்கள் ஏராளம்
காட்டும்வழி நன்று என்று
கண்டார்கள் போர்களம்
வெற்றியும் அமைதியும் என்று
ஆசைகள்மனதில் தாராளம்
ஈழம்வென்று கொடிநாட்டி
படுத்திடுவோம் அமர்க்களம்... நினைவிற்கொண்டு...



நாம் அழிந்தாலும்
நாள்தோறும் இரத்தம் சிந்தினாலும்
நம்மினம் அழியாமல்
நல்லதொரு வாழ்கை அமைந்திட



மரணம் என்று(ம்) தெரிந்தும்
பயந்திடாமல் பலலட்சம்பேர்
சரணம் என்று உன்னோடுசேர்ந்து
போராடியவர்கள் எத்தனையோபேர்...



கட்டாயம் சேரவேண்டும் என்ற
கட்டளையில்லை உன்னிடம் எப்பொழுதும்
நியாயம் பெறவேண்டும் உயிர்
தேவையில்லை வந்தவர்கள் அனைவரும்...



உயிர் தமிழுக்கு உடல் தமிழனுக்கு என்று(ம்)
உணர்ச்சிமட்டும் கொண்டவன் நான்
உணர்வோடு உள்ளதில்கொண்டு
உயிரை மாயித்து கொண்டவர்கள் எத்தனைபேர்...



பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன் கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?



மண்ணில் மறைந்து இருக்கிறாயோ?
மீண்டு வந்துவிடு இங்கு - ஒருவேளை
மண்ணில் மறைந்து இறந்திருந்தால்
மீண்டும் பிறந்திடு மீட்பதற்கு எங்களை...

Friday, May 22, 2009

என் பாட்டுடை தலைவன்






Thursday, May 7, 2009

கண்ணீர்அஞ்சலி

நண்பா!

அவள்பேசிய ஒன்றிரண்டு சொற்கள்
நீவாழ்க்கையில் சேர்த்திட சொத்துக்கள்...
அவள்எழுதிய ஒன்றிரண்டு வாக்கியம்
உன்வாழ்க்கையில் நிகரில்லா காவியம்...
அதுநினைவில் நிற்கும் ஓவியம்
உன்நெஞ்சில் என்றும் உயிரோவியம்.

அவளைஅடைவது நீகொண்ட இலட்சியம் - நீ
இல்லாமல்போனது அவள்செய்திட்ட துரதிஷ்டம்...
நிழல்கள் நிஜங்களின் எச்சம் - அவள்
நினைவொன்றே உன்நெஞ்சில் மிச்சம்.
உன்காதலுக்கு நல்மருந்து பரிவு என்றாய்
உன்மரணத்திற்கு தரமறந்தது அன்பா?

அவளை கண்ணீர்சிந்தாமல் காப்பதற்கு
உன்னின் செந்நீர்சிந்தியாவது காப்பேன்என்றாய்.
கூறியதுபடியே செய்துவிட்டாய்
உன்இன்னுயிரை நீர்த்துவிட்டாய்
அவளிடம் கண்ணீரை கண்டாயோ?
இனிஎப்படி அவள்கண்ணீர் துடைப்பாய்?

நண்பா!!!

சங்கீதம் மொழிகள்அற்றது
சந்தேகம் உடலைகுடித்தது
அவள் சம்மதம் அளித்தால்
சிந்தனை சங்கமிக்கும்என்றாய்
அவள் சம்மதம்தர மறுத்தாளோ
மரணத்தை சங்கமித்துவிட்டாய்...

உனக்கு தெரியாமல் பிறப்புநேர்ந்தது என்றாய்
தெரியாமலே இறப்பும் நேர்ந்திருக்க கூடாதா?
சுட்டுவிழியால் சுட்டெரித்தால்
சுழலில் கலந்திடுவேன் என்றாய் .
பதிலில் மௌனத்தை காட்டியிருந்தால்
பல்லாண்டு வாழ்ந்துஇருப்பாய்.

கண்ணீராய் சொல்லாமல் சொன்னாளோ
உன்மெய்தனை செல்லரிக்க வைத்தாளோ.
உயிர்கீற்று உன்னைவிட்டு பிரிந்தாலும்
காதல்காற்று உள்ளத்தைவிட்டு பிரிவதில்லை
காதலுக்காக நீசிந்திய செந்நீருக்கு
உன்ஆத்மா சாந்திக்காக என் கண்ணீர்துளிகள்...