Saturday, January 30, 2010

ஏய் பெண்ணே...

என்வாழ்கையில்...
என்னை சீண்டி விளையாடிட
வருவாய் என்று ஏங்கிருந்தேனடி!
என்னை தீண்டி கொன்றிட
வருவாய் என்று நினைக்கவில்லையடி.
அதனாலோ...
சீறிவரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்றார்களோ?

Friday, January 29, 2010தோழா / தோழி...

காதலெனும் போர்வையில் சிக்கிக்கொண்டு
உன்னைநீயே எதற்கும் உருகுலைத்துகொள்ளாதே...

உன்னதமான இலட்சியங்களை உள்ளத்தில்கொண்டு
உன்னைநீயே எப்பொழுதும் வாழவைத்துக்கொள்...

Thursday, January 28, 2010

என் பிராணகாற்றே!!!


காற்றே! என்சுவாச காற்றே !!!
பொதிகைமலையிலிருந்து வீசும் சாரல் காற்றும்!
வடக்கிலிருந்து வீசும் வாடை காற்றும்!
தெற்கிலிருந்து வீசும் தென்றல் காற்றும்!

கோடைக்காலத்தில் வீசும் அதிகாலை காற்றும்!
வசந்தகாலத்தில் வீசும் ஆடி காற்றும்!
மழைகாலத்தில் வீசும் தூறல் காற்றும்!
முன்வாசலில் வீசும் வேப்பமர காற்றும்!
தோட்டத்தில் வீசும் செடிகொடியின் பூங்காற்றும்!
தோப்பில் வீசும் தென்னமர ஓசைகாற்றும்!

ஆற்றங்கரையில் வீசும் ஈரமான காற்றும்!
மயிலிறகு வீசும் இதமான காற்றும்!
இயற்கையாய் வீசும் இன்றைய செயற்கைகாற்றும்!
என்மேனி வருடியும் உணரவில்லையேன் காற்றே?

அவள்மேனிதுணியை கலைத்து தழுவிவந்த காற்றும்!
அவள்கூந்தலை அசைத்து நழுவிவந்த காற்றும்!
அவள்நுரையீரலை அடைந்து உயிர்பெற்றுவந்த காற்றும்!
சற்றே அனலானாலும் என்பிராண காற்றானதாலோ?
என்முகத்தை தீண்டிய கேசத்தால், ஆடைநுனி காற்றால்
என்னையும், மற்றவற்றையும் மறந்தேன் - அதனாலோ?

Wednesday, January 27, 2010

பாவை நீயும் பூவோ?


நீ விரும்பும்
நான் வாங்கிதந்த
மல்லிகை மலருந்தன்
கூந்தலின் சரிவில்
சிக்கி மணந்து
வாசம் விட்டு
மாலை நேரத்தில்
வாடிபோனது அன்று...உந்தன் நினைவுக்காக
நீ சூடிவந்த
சிவப்புரோஜா பூவை
புத்தகத்தின் மத்தியில்
பாடம் செய்து
காத்து வைத்திருந்தேன்
அவற்றின் இதழ்களும்
காணாமல்போனது இன்று....


வாடாத மல்லியாம்
வாடாமல்லி பூவும்
வாடிவிட கண்டேன்
சிலமணி துளிகளில்...
வாடினாலும் வீசும்
வாசம்கொண்ட தாழம்பூவும்
வசந்தம் இருந்தும்
மணமற்றுபோனது ஏனோ?

Monday, January 25, 2010

திருமண வாழ்த்துமடல்

மணநாள்
27-01-10

காற்றின் ஒர்உருவமாய்
தென்றலாய் இவன்
இனிமையாய் உனக்கு
என்றென்றும்...
நிலவின் மறுபெயராய்
இந்துமதியாய் இவள்
குளுமையாய் உனக்கு
எப்பொழுதும்...


இனிமையும் குளுமையும்
சேர்ந்து நல்லறம்படைத்திட!
கார்மேகத்துடன் காற்றாய்
இணைந்து மழைப்போல!
நீலவானுடன் நிலவாய்
பிணைந்து இரவைப்போல!
கூடல்களுடன் சிறுஊடல்களும்
கலந்து இல்லறயமைந்திட!


காதல்மழையில் நனைந்தது
ஆண்டுகள் ஆறு
கல்யாணஉறவில் கைகோர்ந்து
ஆளனும் நூறு
கவிதையில் இல்லாதது
வழக்கத்தில் சொல்வது
மரபாய் வளர்ந்தது
வாழையெடிவாழையென வாழ்த்துவது.

அன்பு நெஞ்சம்,
தஞ்சை.வாசன்

Sunday, January 24, 2010

சுமையா? சுகமா?

உன்னை சுமக்கும்வலிமை
என்தோள்களுக்கு இல்லையென
நினைத்தாயோ?
உன்னை இதயத்திலும்
என்கண்களிலும் இல்லையில்லை
என்உடல் முழுவதும்
சுமந்தபடியே நொடிபொழுதும்
என்உலகையே சுற்றிசுற்றி
வலம்வந்து கொண்டிருப்பதை
அறியமாட்டாயோ?


உன்னை சுமந்து நடந்தபோது
உண்டாகிய வலியை விட
உன்னை மறக்க நினைக்கும்பொழுது
உண்டாகும் வேதனையை சொல்ல வார்த்தையில்லை...

சுமையை சுமக்கலாம்
சுமையே(நீ) இல்லாமல்
சுமக்கின்றேன் உன் நினைவை
சு(மை)வையாய் இதயத்தில்...

Saturday, January 23, 2010

கவிதையாய் எந்நிலையிலும் நீ!!! 


உன்னை தினமும்
பார்த்து ரசித்தை
நினைத்து ஒருகவிதை
வடிக்க விரும்பினேன் – ஆனால்
என்னை நீயும்
மறந்து வெறுத்ததை
நினைத்து ஒராயிரம்கவி
மனதில் எழுகின்றது – ஆனால்
அதனை சேமித்துவைக்க
இதயம் வெறுக்கின்றது.Thursday, January 21, 2010

சுகமும் நீயே என் சோகமும் நீயே


கோடையில் வற்றிவிடும்
நீரோடையை போல் சுகத்தையும்
 
என்றும் வற்றாத
நீர்கங்கையை போல் சோகத்தையும்

வறண்டு போகும்
என்நாக்கை போல் சுகத்தையும்
திரண்டு வரும்
என்தமிழை போல் சோகத்தையும்
தினம் உதிரும்
உன்நினைவை போல் சுகத்தையும்
என்றும் உதிராத
உன்கூந்தலை போல் சோகத்தையும்


காலத்தில் அழியும்
வனப்பை போல் சுகத்தையும்
தீயால் அழியாத
வடுவை போல் சோகத்தையும்

சுண்டினால் சிதறும்
இலைநுனியின் பனியைபோல் சுகத்தையும்
சிரித்தாலும் சிதறாத
இதழில்மறையும் பற்களைபோல் சோகத்தையும்ஏழைபசியை தீர்க்கும்
ஒருவேளை உணவைபோல் சுகத்தையும்
என்றென்றும் தீராத
ஒற்றுமை உணர்வைபோல் சோகத்தையும்

இதனைபோல் எத்தனையோ
அவளால் அடைந்தேன்

சுகத்தை சோகமாக்கிட
சோகத்தை சுகமாக்கிட
தூ(து)க்கத்தின் கன(நினை)வில்
அவள்வரவை கண்டேன்

Wednesday, January 20, 2010

என் இதழின் அசைவு


இறைவா!

தினம் ஒருபிறவி எடுக்கின்றேன்
இன்றைய பிறவியிலாவது 
அன்றுஅவள் என்னோடு
பேசிய பேச்சுக்கு உருவம்
தந்திட ஓர்வார்த்தை சொல்லமாட்டாளா
என்று ஏங்கி தவிக்கின்றேன்
இன்றாவது மோட்சம் கிடைக்குமா?

Tuesday, January 19, 2010


 
என்கண்ணீர் தடாகத்தில் நீமட்டும்
மகிழ்வாய் நீந்திகொண்டு உலாவர
என்மனது நீராய் அலைமோதுவது
நீந்தும் உனக்கு தெரியாதாயென்ன?
 விலக்கிவிட்டு முன்னே சென்றாலும் - நீ
 என்னை தொட்ட மயக்கத்தில்நான்.

கனவா? நினைவா?


நேற்றுவரை
நீண்டநாளாக
கனவாக ஒன்றை
நினைவாக்க
மனதுக்குள் பத்திரமாக
புதைத்திருந்தேன்...

இன்று
என்னையும்
அறிந்தே அது
எங்கோ
மற(றை)ந்து போனது
வாழ்வில்...

நாளையும்
கனவு கனவாகிருப்பின்
புதைந்து அல்லது
மற(றை)ந்து போனாலென்ன
நினைவு கேட்டது
என்னிடம்...

என்றாவது
நேற்றுவரை அவள்(கனவு)
நாளையென்பது நீ(நினைவு)
என்று வரும்வரை
இன்றும் போராடுவேன் - என்றேன்
பதிலுக்கு...

(என்னை அடைந்த குறுச்செய்தியிலிருந்து என்வரிகளும் கலந்து)

Saturday, January 16, 2010

தஞ்சை ஊர் சுற்றும் இனிய பயணம் ...

வாழ்கையின் துயரத்தை மறந்திட
இமயத்தின் உயரத்தை அடைந்திட
களிப்பில் சிலநாட்கள் வாழ்ந்திட
நண்பர்களே இவன் உங்களைநோக்கிட...


தஞ்சை தரணியில் மூன்றுநாட்கள்
சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்பயணம்...

Friday, January 15, 2010

காளானும் என்காதலும்...

நேற்று பெய்த கனமழையினால்
தோன்றிய காளான் போன்று
உன்பொய்யான வார்த்தை மோகத்தினால்
என்மனதில் விதைத்தேனடி காதலை. 
தூரத்திலிருந்து பார்க்கும் நம்கண்களுக்கு
அதன்வெளி வடிவம்மட்டும் காணும்
அருகில் உட்கார்ந்து ஆராயும்போதுதான்
உயிரும்உடலும் அதற்கும் இருப்பதுபுரியும்.

பிரிவென்பதை பற்றி நினைக்காமல்
இருக்கும்வரை எத்தனையோ சுகங்கள்
பிரிதலை கொண்டுவிட்டால் வாழ்கையில்
 உயிரேஉடலை உறிஞ்சும் சோகங்கள்.காளானின் குடைக்குள் ஒளிந்துகொண்டு
மழையை ரசிக்க நினைத்துபோல்
உன்னை மனதில் சுமந்துகொண்டு - வாழ்கையை
வாழவிரும்பியது தவறென்று உணர்ந்தேன்.

Thursday, January 14, 2010

வாழ்க உன் பெண்மை...

ந்திக்காமலே என்னை உன்னைப்பற்றி
சிந்திக்க வைத்தாயடி பெண்ணே
ல்யாணம் என்ற ஒற்றைச்சொல்லாலே
லாவகமாய் என்னுயிரை பறித்தாயடி கண்ணே
வாழ்க உன் பெண்மை.

வாழும் வழியை தரவில்லை
வலிக்கும் வேதனையை தந்தாயடி
விழியால் சொல்லவில்லை என்றாலும்
மொழியில்லாமல் மெளனத்தால் கொன்றாயடி
வாழ்க உன் பெண்மை.

வாளால் என்னை கொன்று
கூறாக்கி போட்டு இருந்தாலும்
புதைத்த மண்ணில் புல்லாய்
முளைத்து உயிர் பெற்றிருப்பேன்.

வார்த்தையால் என்னை வதைத்து
எனக்கு நானே கண்ணீர்
வடித்து அழுகின்ற, அழைக்கின்ற
நடைபிணமாக மாற்றி விட்டாயடி
வாழ்க உன் பெண்மை.

Saturday, January 9, 2010

பிரம்மச்சாரி ...
தனிமரம்
தோப்பாகாது
ஆனால்
அடையாள
சின்னமாய்
என்றென்றும்...

Thursday, January 7, 2010

வாழ்வோம் நட்புடன்

என் சோகத்தை
நான் சொல்லாமலே
என்னோடு  பகிர்ந்துகொள்ளும்
நண்பனைத்தான் தேடுகின்றேன் 
உன்னை நினைத்தேன் - இன்று
தவறை உணர்ந்தேன்.

நான் சொல்லாமலே
புரிந்துகொள்ளும் நிலையில்
நீயில்லை என்பதும்
நான் சொல்லியும்
பொருட்படுத்தாதது - என்தவறே
அதுவென்றும் உணர்ந்தேன்.

என்சுமையை உன்மேல் இறக்கவோ
உன்சுகத்தை நான்கெடுக்கவோ
விரும்பமில்லை ஆதலால்
உன்னிடம் சொல்லவுமில்லை
சொல்லகூடாது என்றுமில்லை - அதனால்தான்
என்னையும்மீறி உளறிவிட்டேன்.

என்னைப்பற்றி எதுவேண்டுமானாலும்
நீ நினைக்கெல்லாம், சொல்லலாம்
அதைப்பற்றி கவலைகள்
எனக்கில்லை என்றும்
மனநலம் குன்றியவனென்றோ - நான்
பாதிக்கபட்டவென்றோ புறங்கூறலாம்.

நாம்செய்யும் தவற்றைமறைக்க
அடுத்தவரை குறைகூறுவது
மனிதவாழ்கையில் இயல்பானது அதனால்
உன்னையிங்கு உவமையாக்கி
என்னையிங்கு உருவகபடுத்தி - நம்நட்பை
இழிவாய் எடுத்துகாட்ட விருப்பமில்லை.

வாழ்வோம் நட்புடன் 
வளர்வோம் ஒருமனதுடன்.

Tuesday, January 5, 2010

தலையணை...

என்வாழ்வில் இதுவரை
பழக்கத்தில் இல்லாத
புதிதாய் ஏனோஇன்று
என்கரங்கள் அவளில்லாமல்
உன்னையள்ளி கட்டியணைத்து
கொண்டு மகிழயெண்ணியது
நான் என்னையறியாமலே
நீயென்னை அறிந்ததனாளோ?

மஞ்சத்தின் மேலே
பஞ்சுபோன்ற அவள்
விரல்களால் என்
நெஞ்சத்தை வருடியும்
வாஞ்சைகளை அறிந்தும்
தஞ்சமாய் ஒன்றாகி
என்னை சுகபடுத்தியும்
தானும் சுகபடுவாள் – அவள்போல்
நீயில்லாவிடினும்
உன்னை என்மனம் தேடியதேனோ?

சுகத்தை தணித்துகொள்ள
உன்னை தேடவில்லை
எந்தன் நெஞ்சம்
என்றபோதினும் என்
சோகத்தை பகிர்ந்து
கண்ணீரை உறிஞ்சி
உன்னுள் உறையவைத்து
என்னை சொந்தமாக்கி
என்னையும் மெளனமாக்கி
உன்னுனோடு உறங்கவைத்து
என் இதயத்திற்கும்
ஆறுதல் தந்ததனாளோ?

Monday, January 4, 2010

என்ன இது ?

பள்ளிபருவத்தில்
பார்த்து பேசிபிரிவதையே
காதல் என்றிருந்தேன்

கல்லூரிபருவத்தில்
காதலென்றால்
பழகிபிரிவது என்றிருந்தேன்

இளம்பருவத்தில்
பருகிபிரிவதையே
காதல் என்றிருந்தேன்

வாலிபபருவத்தில்
இன்று என்னால்
நம் உணர்வை
காதலென்பதா? - இல்லை
வாழ்கையின் ஒத்திகையென்பதா – அல்ல
என்னவென்று சொல்லமுடியாமல்
எப்படிசொல்வதென்று தெரியாமல்
தவி(துடி)த்துக்கொண்டிருக்கின்றேன்.

Friday, January 1, 2010

என்னவளே!!!

வானத்தில்...

நள்ளிரவில் என்வீட்டு மாடியில்
நான் உன்னை நிலவாய்
நினைத்து ரசிக்க நினைத்தேன் - நிறமற்ற
வானவில்லாய் வந்து மறைந்தாயோ.

நண்பகலில் என்வீட்டு தோட்டத்தில்
நான் உன்னை சூரியனாய்
எண்ணி மயங்கிட நடித்தேன் - ஒளியற்ற
நட்சத்திரமாய் ஒளிந்து காணாதிருந்தாயோ.


வாழ்கையில்...

நதி என்னும் இதயநீரோடையில்
நான் உன்னை மீனாய்
விழியில் கண்டு பிடித்தேன் - உயிரற்ற
உடலாய் மிதந்து மூழ்கடித்தாயோ.

நல்லறம் என்னும் இல்லறத்தில்
நான் உன்னை மனைவியாய்
மனதில் கொண்டு வாழ்ந்தேன் – வெட்கமற்ற
மங்கையாய்  வாழ்ந்து வீழ்த்திசென்றாயோ.