Tuesday, December 28, 2010

வறுமையும்... பனியின் கொடுமையும்...

இவனது வீட்டுக்குள்
கொட்டியது
மழைக்காலத்தின் மழைநீர்
மட்டுமல்ல...
இப்பனிகாலத்தில் பனியும்
சொட்டிகொண்டு...

நிலவின் ஒளியோடு
ஓட்டின்மீது விழுந்த
பனித்துளி
காற்றில் கலந்து
வீட்டின் தரைமீது
நீர்த்துளியாய்...

Saturday, December 25, 2010

சுனாமியின் வேதனை (ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி)


கடலே!

ஆண்டுகள் ஆ(று)றாய்
ஓடி மறைந்திருந்தாலும்
உன்கரம் ஆகிய
அலைகளைபோல் ஓயாமல்...

உயிர்பிரிந்த சொந்தங்களின்
நினைவுகள் மனதிற்குள்
நெஞ்சில் இன்னும்
துயராய் நீங்காமல்...

பொறுமை கடலின்
பெரிது என்பார்கள்
நீயே
பொறுமையை இழந்தாயே...

உந்தன் வீட்டுக்குள்
எத்தனையோ முறை
உல்லாசமாய் சவாரி
செய்து இருக்கிறோம்

ஒரேயொரு முறைதான்
எங்கள்ஊருக்குள் பயணித்தாய்
அழையாமல் வந்தாய்
அலையோடு அடித்துசென்றாய்...

ஒருமுறை வந்துசென்றதே
நிறையானது எங்கள்மனது
குறையென்று மீண்டும்
வந்துவிடாதே எங்கள்வாழ்வில்...

சுனாமியால் இறந்தவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்....
உறவுகளை இழந்தவர்களுக்கு என் மனமார்ந்த ஆறுதல்கள்....

Friday, December 24, 2010

காதல் கடிதம் – தொடர்பதிவு அழைப்பு (இந்திராவிடமிருந்து)

என்னை தொடர்பதிவுக்கு அழைத்த என் இனிய தோழி இந்திராவிற்கும், என்னோடு இந்த தொடர்பதிவில் கலந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இப்பதிவினை படிக்கவிருக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் முதற்கண் நன்றி கலந்த வணக்கம்.... (எல்லாம் ஒரு ஐஸ் தான்) யாரும் பதிவ படித்துவிட்டு என்மேல கோப படக்கூடாது என்பதற்குதான்.

நானும் பிளாக் வைத்திருக்கேன் என காட்ட நினைத்து ஆரம்பித்த இந்த வலைபூவில் ஏதோ அப்பப்ப என் மனசுல தோன்றத / ஓடுறத வார்த்தையா இணைத்து வரிகளாக எழுத ஆரம்பித்ததுதான் இது.... (உனக்கு இது தேவையா அல்லது எங்களுக்கு இது தேவையானு மனதில் கேட்பது காதில் விழுகிறது) என்ன பண்ணுவது பத்துவரிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது நம் அரசியாரின் கட்டளை ஆயிற்றே... இப்படி ஏதாவது எழுதிதான் பத்துவரியை காட்ட முடியும்... அப்பதானே நம் அரசியார் மனம் மகிழ்வார். (ஏற்கனவே அவர்களிடம் மொக்கை சாமினு பேரு எடுத்து இருக்கிறேன்...) அது யாருக்கும் வெளியில் தெரியாத விசயம். இப்ப தெரிஞ்சு போச்சுனு யாரும் சந்தோஷ படவும்வேண்டாம்.
 
அது இருக்கட்டும்.... என்ன கொடுமை பாருங்க இந்தம்மாவ யாரும் தொடர்பதிவுக்கு கூப்பிடலனு நம்மை வம்புல மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்க ஆசையுடன்.... ( நம்மையும் வேற யாரும் இதுவரை கூப்பிடல என்பது வேற விசயம்). திரும்ப பழிவாங்காம விட்டுவிடுவோமா என்ன? 

சரி சரி... விசயத்துக்கு வருவோம்... இப்படியெல்லாம் நிறைய பதிவுகளை எழுத நினைத்தாலும் இதுவரை எழுதியது இல்லை... இனிமே முயற்சி செய்து பார்ப்போமே என்றுதான் இது.. இதுக்கு வரும் ஆதரவை பொருத்துதான்...(இதுவே எங்களால் தாங்க முடியல ... இனி தொடர்ந்தா? ஆளை விடுங்க ஐயா என்று புலம்புவது புரியுது) இது எல்லாம் அரசியலில் சாத(சதா)ரணம் அப்பா...

ஹலோ மேடம். எங்களை என்ன? அந்நியன் படத்தில் வரும் அம்பினு நினைச்சு கிட்டிங்களா? எங்க லவ்வருக்கு எழுதுறத உங்ககிட்ட காட்ட....

இது என் சார்பில் என்னுடைய காகிதமே எழுதிய பழைய காதல் கடிதம் ஒருமுறை சும்மா படிச்சி பாருங்க (எப்புடி இப்படியெல்லாமுனு யோசிகிறீங்க....) எதுவாயினும் பேசி தீர்த்துக்கொள்வோம்... பின்னூட்டத்தின் வழியே.... (அவசரபட்டு இனி இந்த பிளாக் வரவே கூடாதுனு நினைக்க மட்டும் கூடாது...) அப்புறம் நானும் அழுதுடுவேன்....

ஸ்டார்ட் மியூசிக்...


// கண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது ///

ஆரம்பம் மட்டும்தான் தடங்கல்.. அப்புறம் பின்னி பெடல் எடுப்போம்..... அதனால் இத மட்டும் அப்படியே காப்பி பண்ணி போட்டுகிறேன்


அன்பே!
// ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி//

- என்று நேரில் சொல்லமுடியாத காதலை கடிதத்தில் சொல்லிட்டோமில....

ஆருயிரே!
// நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?//

- என்று உன்னிடம் பதிலை கடிதத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்... (அடி வாங்காமால் தப்பிக்கதான்)

கண்ணே!
// கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை//

என்று உன்வருகைக்காக தினமும் வாடுகிறேன்.... (மூக்கு துடைத்து துடைத்து கைக்குட்டை நாறி போச்சு.. அதனாலதான் தொட மனசு வரல) 

காதலியே!
// காதல் கடிதம் தீட்டவே மேகமெல்லாம் காகிதம்....
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்...//

- என்று உன்னோடு கவிபாட ஆசையாய் ஏங்குகிறேன்... ( எழுத படிக்க தெரியாது அதனால தான் இதெல்லாம் முதலில் கேட்கிறோம்) கொண்டு வந்தா எழுதுவோம்....

// காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இதம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்//

- என்று காதலை காலம் முழுதும் உன்னோடு சுமந்திட எண்ணிகொண்டு.... ( எழுதிய எழுத்துகளை உச்சரித்தது உதடு, கடிதத்தை ஒட்ட பயன்படுத்தியது உதடு அதனால தான் அடுத்த உதவியை அங்கிருந்து பெற்றுக்கொண்டு...)


அப்பாடா ஒரு வழிய எப்படியோ பெருசா மொக்கையை போட்டாச்சு... (மனசுல அப்படி ஓர் நினைப்பு... ஏன்னா... இது நமக்கு புதுசு....) நானும் ஊருக்கு போறேன் ( சனி , ஞாயிறு மற்றும் திங்கள்)... எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டி இருக்கு... உங்க மனசுல இருக்கும் எல்லாத்தையும் கொட்டி தீர்த்து விடுங்க நான் இல்லாத பொழுதே....




இது சும்மா இப்ப என்மனதில் ஓடியது....


கண்ணம்மா....
எனக்குள் வரிகள்வராமல் போய்விடுகின்றன
உன்னைகாணும் பொழுதினில் மட்டுமல்ல
உன்னை எண்ணும் பொழுதினிலும் - அந்நொடியிலும்
உன்முகத்தை தவிரவேறொன்றும் தோன்றாமல்....

அன்று...
காதல் சிறையென்று தெரிந்திருந்தும்
உன்னோடு கால்பதிய சொர்க்கமாய்
மாறுமென நினைத்துமனதை இழந்தேன்
உன்னையும் என்இதயத்திற்குள் அடைத்தேன்.

இன்று...
என்வாழ்வில் உன்னை இழந்தபின்பு
என்னுயிர் சொர்க்கத்திற்கும் செல்லமுடியாமல்
இம்மண்ணிலும் வாழமுடியாமல் திரிசங்கின்
உடல்போல் உயிரோடு தவித்துக்கொண்டு.

ஒன்று....
என்னோடு நீசேர்ந்து நம்வாழ்வு
மண்ணில் சொர்க்கம் ஆகட்டும்
இல்லையெனில்
உனைவிட்டு நான்பிரிந்து என்வாழ்வு
விண்ணில் சொர்க்கம் அடையட்டும்....

Tuesday, December 21, 2010

என்னை மயக்கவில்லை....


பெண்ணே!!!

மேனியில் உடுத்தியிருந்த
ஆடையில் வரைந்தபூவும்
என்னை மயக்கவில்லை...

தலையில் சூடியிருந்த
கொடியில் மலர்ந்தபூவும்
என்னை மயக்கவில்லை...

முகத்தில் மலர்ந்திருந்த
உதட்டில் உதிராதபூவும்
என்னை மயக்கவில்லை...

தாவணிநுனியில் உனையறியாது
உரையாடும்போது பூப்போல்
தோற்றுவித்த கொசுவத்தில் - எனையறியாது
நான் மயங்கிபோனேன்...

Monday, December 20, 2010

இன்று நான் ரசித்த இயற்கை....

கார்மேகமாய் வானம் சூழ்ந்திருக்க
வளி(ழி)யேதும் கண்ணில் தென்படாதிருக்க
மீண்டும் இதுபோல் வாழ்வில்
நிகழுமாயென ஏக்கத்துடன் நடக்கவைத்தது
இன்று இயற்கை தன்எழிலில்
என்னை மட்டுமல்லாது பலரையும்....

தொடர்ந்து என்தேகத்தில்
தோலின்மீது விழுந்து
இதயத்தின் உட்புகுந்து
என்னை மயக்கியது
பனிச்சாரலா? அல்லது
மழைத்தூறலா?
என்றுத்தெரியாத அளவிலான
ரம்மியமாய் வானிலை...

பூமி முழுவதுமாய்
நனைந்திருக்கவில்லை
மழைத்தூறல் என்பதற்கு
காணும்பொருட்களும் மரங்களும்
ஆகாயமும் நானும்
சாலையில் நனைந்ததால்
பனிச்சாரல் என்றும் - இயற்கையை
கூறிமுடியாமல் ரசிக்க வைத்தது...

Sunday, December 19, 2010

அன்பின் மீது ஆசைதான்...


இதுவரை இருவரும் கண்டிராத
இடத்தில் உன்கைக்கோர்த்து பேசிடாத
புதுவிசயங்களை பேசிநடந்திட ஆசைதான்...

சிலநேரங்கள் உன்மடியினில் தலைசாய்த்தும்
சிலநேரங்கள் உன்தோள்மீது தலைசாய்ந்தும்
பொழுதுகளை பேசிகழித்திட ஆசைதான்...

அன்பின் வலிமையை காட்டிட
அன்பின் தன்மையை கூட்டிட
சிலதருணங்களில் முத்தம்தந்திட ஆசைதான்...

இன்றுமட்டுமல்ல என்றும் உன்னோடு
இருப்பேன் உனக்காக இருப்பேனென்று
சொல்லி கட்டியணைத்திட ஆசைதான்....

இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைதான்....

Saturday, December 18, 2010

கண்ணம்மா என் காதலி...


உன்பெயரினை அன்பாய்
உச்சரிக்கும்போதும் சொல்லில்
ஒருமுறை உதடுகளும்கூட
ஒட்டாமல் போவதனாலா...

உன்பெயரினை செல்லமாய்
மாற்றி அழைத்தேன்
இனிஇணைவது என்னுதடுகள் - மட்டுமில்லை
நம்உதடுகளாகவும் இருக்கட்டும்...

Friday, December 17, 2010

என்னை மயக்கிய நூலகமே...


நான் படித்துவிட்டு தூக்கிபோடும்
செய்தித்தாளகவோ சிறுகதை புத்தகமாகவோ
என்கையில் நீயில்லையடி பெண்ணே
சூடாக படித்துவிட்டு தூக்கியெறிய....

நான் கண்டெடுத்த நூலகம்நீ
என்றும்நான் உன்னுள் ஒன்றாய்
கலந்து இருக்க ஆசைப்பட்டுக்கொண்டு
என்னைநீ அறிந்துக்கொள்ளாமலா உன்வாழ்வில்...

நீநூலகம் என்றால் நான் நூல்களாய்
நீநூல்கள் என்றால் நான் பக்கங்களாய்
நீபக்கங்கள் என்றால் நான் எழுத்தாய்
நீஎழுத்து என்றால் நான் அதன்க(உ)ருவாய்

நூலகம் தேடிவாசல் வரைவந்தவன்
நூல்களை படித்துரசித்து சுவைத்திடதான்
ஏனோ சிறுதயக்கம் மனத்திற்குள் - நூலகத்திற்கே
புதுவாசகன் என்பதனாலோ இவன்வாழ்வில்...

Thursday, December 16, 2010

குளிரும்... நானும்...

 
அன்பே!
மென்மையான இப்பனிக்காலத்தில்
அதிகாலை இளங்குளிர்க்காற்றும்
என்னுடலை சிலிர்க்கவைக்கவில்லை
சிலநேரங்களில்!
உன் அ(ரவ)ணைப்பில் மெய்சிலிர்க்கிறேன்
பலநேரங்களில்!!
உன்நினைவில் மெய்மறக்கிறேன்
உன்பிரிவில்!!!
எப்பொழுதும் மெய்மறத்தும்போகிறேன்...

Wednesday, December 15, 2010

அன்பு... காதல்.... (உரையாடல்)



ஒருநாள் சந்திக்காமல் பேசாமல் மறுநாள் காதலன் காதலி சந்தித்துக்கொள்கிறார்கள்.


என்னைநேற்று முழுவதுமாய் மறந்துவிட்டாய்
ஒருமுறைக்கூட என்னை நினைக்கவில்லையே
நினைத்திருந்தால் நான் உண்ணும்போது
ஒருமுறையேனும் புரையேறிக்ககூடும் உன்நினைவால் என்றான்...

ஒருவேளை நீஉண்ணும்போது நினைத்திருந்தால்
அப்படியேதும் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம்
நான்தான் உன்னையே நினைத்திருந்தேனே
அதனால் என்னவோ நிகழாமல் என்றாள்...

அப்படியெனில் உனக்கு என்நினைவால்
மூன்றுவேளையும் நிகழ்ந்ததா என்றான்?
ஒற்றைச்சொல்லில் அவன்புருவம் உயர்ந்திட
இவளோ அப்படியொன்றும் ஏதுமில்லை என்றாள்...

உன்பிரிவால் நேற்று முமுவதும்
உணவே அருந்தவில்லை எனச்சொன்னாள்
தலைகுனிந்த நாண முகத்தோடு - இவனும்
தலைகுனிந்து நின்றான் வெட்கிபோன முகத்தோடு...

Tuesday, December 14, 2010

நானும் திருநங்கையும்...

அஞ்சுரூபாய் உனக்கு நான்கொடுத்தது
அழகென்று என்னை வர்ணிப்பதற்குஅல்ல
அசிங்கமாய் பேசிவிட கூடாதென்பதற்கு
தீண்டாமை என்னுள்ளத்தில் இல்லை - இருந்தாலும்
நீயென்னை தீண்டுவதை விரும்பாமலும்.

எந்தன் விழியிலும் மொழியிலும்
திருநங்கை நீயும் திருமங்கையாய்
மாறுவதாக சொன்னாய் வார்த்தையில்
கங்கையாய் என்னுள்ளமும் மாறியது - அந்நேரத்தில்
உன்னையும் என்தங்கையாய் மனமேற்றது.

Thursday, December 9, 2010

நான்... நிலா... நீ...


பெண்ணே!

கருமையான வானில்
வெண்ணிற மேகத்தில்
தொலைந்து போகும்
நிலவாய் சிலநாட்கள்...

மாதத்தில் ஒருமுறை
வானத்தில் முழுமையாய்
மறைந்து போகும்
நிலவாய் சிலநாட்கள்...

விண்ணில் தோன்றியும்
கண்ணில் உருவாய்
தெரியாமல் போகும்
நிலவாய் சிலநாட்கள்...

எத்தனையோ நாட்கள்
என்னில் இப்படிநான்
நிலவினை போல் - உன்னால்
காணாமல் போகிறேன்.

விட்டுவிலகிவிடு என்னை..


தினமும்
நீஅழைத்த மறுநொடியே
உன்னை அழைக்கிறேன்
நித்தம்
நீஅனுப்பும் அனைத்து
குறுஞ்செய்திக்கும் பதிலளிக்கிறேன்
இப்பொழுதே நானுனக்கு
அடிமையாகதான் இருக்கிறேன்..
ஆனால்
இந்த இரண்டையும்
நானாக செய்வதில்லை
என்கிற கோபமுட்டும்
உன்நெஞ்சில் இன்னும்
அதையும் நானேசெய்ய
ஆரம்பித்தால் ஆகிவிடுவேன்
பைத்தியமாய் உன்னால்...

உன்பாதை மாறட்டும்... பயணம் தொடரட்டும்...



அழைத்தாய் வந்தேன் அருகினில்
அமர்ந்தேன் எங்கோ அழைத்துசென்றாய்
எளிதாக வரும்வழியில் சொல்லிவிட்டாய்...

உன்இலகுரக வாகனத்தில் மட்டுமல்ல
உன்இளகிய மனத்திலும் என்றாய்
நான் வீற்றிருப்பது என்பதனை...

என்இல்லம் மட்டுமல்ல அடைக்கப்பட்ட
சாலையில் அமைந்து இருப்பது
என்இதயம் சேர்த்துதான் அடைக்கப்பட்டு
சோகத்தில் உடைந்து போயிருப்பது...

வாகனத்தில் இங்கேயே இறங்கிக்கொள்கிறேன்
இதயத்திலும் இங்கேயே இறக்கிவிட்டுவிடு
உந்தன் வாகனத்திற்கு என்சாலையில் வழியில்லை
உந்தன் மனத்திற்கு என்சோகத்தில் பங்குயில்லை...

வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் என்னிடமிருக்கு
உன்னை மணக்க எண்ணம் எனக்கில்லை
இன்றே பாதையை மாற்றிக்கொள் இனி(தாய்) - உன்வாழ்வில்
என்றும் பயணம் தொடரட்டும் வெற்றியோடு...

உ(எ)னக்காக...


எத்தனை கோயில்கள் பிரகாரமானாலும்
எத்தனை நாட்கள் வரவேண்டுமென்றாலும்
உனக்காகவும் நீவாழந்திட உன்நினைவாலும்
அங்கம் வலம்வந்திட நினைக்கும்நான்

உந்தன் அங்கமோடு ஒன்றிணைந்து
உந்தன் வீட்டுக்குள் உலாவர
எந்தன் மனதுக்குள் விரும்பாமல்
எப்படி தொலைந்து போகக்கூடும்?

Wednesday, December 8, 2010

வறுமை....


எந்தன் வீட்டுக்கண்ணாடி முன்நின்று
நான்பார்த்து சிரித்தாலும் அதில்
அழுவதைபோல் மட்டும் காட்டுகிறது
ரசமில்லாது மங்கிபோன மாற்றிடாத
அக்காலத்து கண்ணாடி என்பதனாலா?
அல்லது
வாழ்வில் அவளில்லாமல் வ(வெ)றுமையாய்
எந்தன் மனதும் மாறிப்போனதனாலா?

Tuesday, December 7, 2010

காலம் நம்மை மாற்றும்


பெண்ணே...
உன்னை சந்தித்த தருணங்களில்
விழியின் வழிபேசிய மொழியில்
உன்மனதை புரிந்துகொள்ளும் அவன்
இதழ்கள் உச்சரிக்கும் மொழியில்
பலநேரங்களில் முழுமையாக அவனுக்குள்
புரிந்துக்கொள்ள முடியாமல் திணறிபோகிறான்...

காரணம்?
நுனிநாக்கில் நீபேவது ஆங்கிலம்
அதனால் என்னவோ புரியவில்லை
என்றால்அது அலைபேசி வழியனுப்பிய
நகைச்சுவை குறுஞ்செய்தியாய் ஆகிவிடக்கூடும்...

ஆனால்!
செய்கைவழியும் செயல்வழியும் உந்தன்
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உணர்பவன்
உன்உள்ளத்தை புரிந்துக்கொள்ள முடியாமல்
உச்சரிக்கும் செந்தமிழிலும் குழம்பிபோகிறான்
உன்வாழ்வில் இனியில்லாமல் வாழபோகிறான்
தனக்குள்தானே தொலைத்து கொள்ள(ல்ல)போகிறான்

அதனால்!
கதிரவனைக் கண்ட பனிப்போல்
நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்...

Friday, December 3, 2010

இதழ்கள்

இதழ்மேல் இதழ்கள்சேர்ந்து
பூத்த பூவினை பார்த்து மயங்கினேன்..

இதழ்மேல் இதழ்நகர்ந்து
மலரும் மங்கை புன்னகையில் வீழ்ந்தேன்..

உன்னிதழ்மேல் என்னிதழ்சேர்த்து
கிடைக்கும் உணர்வில் ஏங்கி தவிக்கிறேன்.

Thursday, December 2, 2010

தவிப்பும்.... துடிப்பும்....


முதலில் உன்னோடு பேசதுடித்தேன்
முடியாமல் என்வாழ்வில் தவித்தேன்...
இப்போ உன்னோடு பேசாமலிருக்க
நினைத்தாலும் முடியாமல் துடிக்கிறேன்....

Wednesday, December 1, 2010

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு...


ஈழம் மண்ணில் இன்னும்
ஈரம் குன்றாமல் இன்றும்
காரணமறிவோரோ?
எத்தனையோ ஆனால் எதுவோ?

அறிவியலின் விந்தையல்ல
அழிவின் விளைவாய்…
ஆக்கத்தின் வித்தாய்
ஆரம்பத்தின் முளையாய்…

நாற்புறமும் நீரால் சூழ்ந்து
தீவாய் மிதக்கும் பூமியிது
என்பதனாலோ? - உண்மையாய்
இருக்கலாம் ஆனால் இல்லை…

எல்லா உறவுகளை இழந்து தவிக்கும்
எங்கள் நட்புகளின் கண்ணில் வழியும்
கண்ணீரோ? - இருந்தாலும்
இருக்கலாம் ஆனால் இல்லை…

எங்களுக்காக உயிரையும் கொடுத்து பிரிந்த
எங்கள் உறவுகளின் உடலில் பிறந்த
செந்நீரோ? - உருத்தலாய்
இருக்கலாம் ஆனால் உண்மை…

எந்தன் இனத்தவர் விட்டுசென்ற
காலடிகளின் தடமும் அழியாமல்
மனதிற்குள்ளும் அதற்கு அடையாளமாய்
கண்களின் முன்பும் நிழலாடிக்கொண்டு…

மண்ணில் புதைந்து போனவர்கள்
எத்தனையோ பேர் கண்ணில் தெரியாது
மண்ணை பிரிந்து போனவர்களும்
எத்தனையோ பேர் கணக்கில் வராது…

குண்டு துளைக்க முடியாத சட்டையிருக்கலாம்
குண்டுகள் துளைக்காமல் விட்டதில்லை எங்கள்வீட்டை
கண்களுக்கு முன்பு எத்தனையோ கொடூரம் - எனினும்
கணத்த இதயத்துடன் வாழ்ந்து(ம்) வருகின்றோம்…

விட்டுகொடுப்பவன் வாழ்வில்
என்றும் கெட்டு போவதில்லை
விட்டுபிரிந்தவர்கள் மீண்டும்
சேராமல் இருக்க போவதில்லை
இழந்த உயிர்கள்
வாழ்வில் மீண்டு(ம்) வரபோவதில்லை
இருக்கின்ற உயிர்கள்
துவண்டு போகாமலிருந்தால் போதும்

உறவுகள் இல்லாமல் நாங்கள்
வாழும் இவ்வாழ்கை துறவுகோலம்தான்
நாங்கள் வேண்டுவது திறவுகோலாய் - ஒன்றைமட்டும்
இதயத்திற்கு இதமளிக்கும் அன்புதான்…
 
உங்கள் வாழ்வில்
கண்ணில் கண்ணீரும்
மனதில் சோகமும்
கொள்ளா(ல்லா)மல் இருக்க
கண்ணில் செந்நீரும்
மனதில் தா(க்)கமும்
கொண்டு இக்கவியின்
வரிகளை வ(மு)டிக்கின்றேன்.

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு எழுதுகின்ற நேரம்
எழுந்தது என்னுள் எத்தனையோ பெரும்மூச்சு…

(ஈகரை என்னும் தளத்தில் நடந்த கவிதைப்போட்டிக்காக எழுதியது)