Monday, January 31, 2011

ஐவிரல் தீண்ட துடிக்குதடி...
கொண்ட காதலை
கவிதையாய் வடித்திட
கைகள் துடிக்கின்றது...

எழுதிடாமல் இருக்க
கைகளுக்கு விலங்கினை
பூட்டிட நினைக்கிறேன்...

அதனையும்மீறி எழுதுவதை
தடுக்க முடியாததால்
விரலினையே வெட்டிவிட
மனம் எண்ணுகிறது...

மீண்டும் ஒருமுறை
காதல் மலர்ந்தால்
உன்னை வர்ணித்து
எழுதிவிடாமல் போய்விடுமோ
என்று அஞ்சியே
செய்யாமல் போகிறேன்...

இருப்பினும் தற்போது
எழுதுவதை தடுக்க
என்கட்டை விரலினை
மடித்து கட்டிக்கொள்கிறேன்...

உன்மேனியை தீண்டிடாத
விரல்கள் என்றாலும்
காகிதத்தில் ஓவியமாய்
மீதியிருக்கும் நான்கு
விரல்களும் காதலை
சொல்லிக்கொண்டே இருக்கின்றது
அவ்வவ்வபோது என்னசெய்வேன்...Friday, January 21, 2011

நலம்வாழ எந்நாளும் என்வாழ்த்துகள்....உடல்நிலை சரியில்லாமலா?
உன்தேகம் நாட்கணக்கில்
கொதித்துக்கொண்டு நானறியேன்...
உன்நிலைகேட்டு என்னுடலில்
என்உதிரம் கொதிக்குதடி - என்னுள்ளத்தின்
அன்பினை நீயறிவாயோ?

நோய்தீர்க்கும் மருத்துவனாய்
நல்மருந்தாய் நானிருந்தால்
உன்னைகாண ஓடோடி
வந்திருப்பேன் இந்நேரம்
நோய்தரும் கிருமியாய் - நானிருப்பேன்
என்பதனாலோ காணவிரும்பாமல்...

Wednesday, January 19, 2011

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...ஆதியை பகலில் கண்டாலும் உன்ஞாபகம்
மதியை இரவில் கண்டாலும் உன்ஞாபகம்
ஆதிபராசக்தி அம்மனை கண்டாலும் உன்ஞாபகம்
ஆதிதாளத்தில் இசையை கேட்டாலும் உன்ஞாபகம்...

எங்கும் தமிழெழுத்தை கண்டாலும் உன்ஞாபகம்
எந்த(ன்) வலைப்பக்கத்தை கண்டாலும் உன்ஞாபகம்
எதை எழுதிடசற்று நினைத்தாலும் உன்ஞாபகம்
எதையும் எழுதகூடாதென நினைத்தாலும் உன்ஞாபகம்...

அன்பென்ற சொல் கேட்டாலும் உன்ஞாபகம்
அன்போடு யார் பேசினாலும் உன்ஞாபகம்
அன்பாய் உனைநான் நினைத்ததும் ஞாபகம் - எனைநான்
அன்பென்ற ஓர்வார்த்தையில் மறந்ததும் ஞாபகமே..

                                                                   ... ஞாபகங்கள் தொடரும்

Tuesday, January 18, 2011

உன்னாலே... உன்னாலே...

நானென்ன நவீனகால குந்திதேவியா?
உன்விரல்களும் என்னை தீண்டாமலே
பார்வைபட்டதுமே கருவினை இதயத்தில்சுமந்து - கவிதையாய்
பலகர்ணன்களை பெற்று எடுத்துக்கொண்டே...மந்திரங்களை உதடுகள் உச்சரிக்கதான் சக்திபெறும்
ஒலிக்காத உன்னுதட்டில் உயிர்பெறுகிறது என்தேகம்
மோகங்கள் பேசாமல் மெளனங்கள் பேசிக்கொண்டு - உன்பார்வையென்ன
காதல்ம(த)ந்திரமா? ஓயாமல் என்னுடலில் ஒலித்துக்கொண்டே...
காற்றுக்கும் பிடிக்கவில்லையோ நாம்பழகுவது
நம்மிடைபுகுந்து தொந்தரவு செய்துக்கொண்டு
இடைவெளியை குறைக்கசொல்லியா அவை? - பூமிதனில்
காற்றினையும் வென்றிடுவோம் கட்டியணைத்தே...

Monday, January 17, 2011

என் நிழலே நீயில்லாமல் நானா? ...


ஜோடிபறவைகள் போன்று
எப்பொழுதும் நாம்
ஒன்றாய் சேர்ந்து
வாழ்ந்திட நினைத்து
அன்று பேசியது
நினைவாய் இன்று
என்னருகில் நீயில்லாமல்
போனாலும்...
எந்தன் நிழலாய்
எனைவிட்டு பிரியாமல்
உந்தன் நினைவுகளாய்
இன்றும் என்னோடு
உடலோடும் உள்ளத்தோடும் - இணைந்து
உறவாடி மகிழ்வித்துக்கொண்டு...

Sunday, January 16, 2011

நீ எந்தன் மெளனமடி...


மெளனங்கள் இதயத்தோடு பேசியிருக்க
மென்மையாய் என்னருகினில் நீயிருக்க
வார்த்தைகள் உள்ளத்தோடு மறைந்திருக்க - உன்னோடு
வாழ்ந்திடும் இக்காலங்கள் சொர்க்கமடி...என்னருகினில் நீயிருக்கும் தருணம்
உலகத்தையே மறந்துபோகும் எனக்கு
உன்னோடு பேசுவதற்கு வார்த்தைமட்டும் - எங்கிருந்து
என்னுள் இக்கணம் தோன்றுமடி...


இதயம் எத்தனையோ சொல்வதற்கு துடித்தாலும்
இப்பொழுது நம்மில் இட(ம்மா)றிபோகும் இச்சமயம்
எப்பொழுதும் துடிக்கும் இதயமும்சற்றே செயலிழுந்து - வார்த்தைகள் எல்லாமே செயலாய் உன்னிடம் காட்டசொல்லுதடி...

Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்..


கட்டுகட்டாய் கரும்பு
அப்பா வாங்கிவர
துண்டு துண்டாய்
அம்மா வெட்டித்தர
மெல்ல மெல்ல
மென்று கடித்து
இன்பம் இன்பமாய்
நண்பர்களோடும் ஒன்றுகூடி
வெட்டிகதை பேசிக்கொண்டே
சுவைக்க சுவைக்க
உண்டகாலம் இன்று
எங்கோ போனதே...

புத்தம்புது மண்பானை
கடைதன்னில் வாங்கிவந்து
மஞ்சள்கொத்து கழுத்தில்கட்டி
திருநீரும் குங்குமமும்
உடல்முழுதும் பூசிவிட்டு
இல்லத்தின் முன்முற்றத்தில்
உறவினர்கள் சேர்ந்திருக்க
கதிரவனை காலத்தோடு
காண அழைத்து
புத்தரிசியும் வெல்லமும்
பாலும் ஒன்றாய்கலந்து
அடுப்பினில் பொங்கிடவே
வழிந்திடும் நேரத்தினிலே
ஓங்கும் மணியோசை
ஒருபுறம் ஒலித்திடவே
கூடியிருந்த கூட்டமும்
ஒன்றாய் மகிழ்வுடனே
பொங்கலோ பொங்கலென்று
குரலிட்ட காலமும்
எங்கோ போனதே...

நம்மை தாங்கும்
மண்ணிற்கும்
நாம் உண்ணும்
உணவிற்கும்
அதனை விளைவிக்கும்
உழவருக்கும்
உற்ற துணையிருக்கும்
உயிர்களுக்கும்
இருள்நீக்கி ஒளிதரும்
பகலவனுக்கும்
நன்றி சொல்லிடும்
நாட்களும்
உருமாறி எங்கோ
போனதே...

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வாழ்வில் தவிர்க்க
முடியாத ஒன்றாய்...
ஒன்றாய்கூடி பலநாள்
கொண்டாடி மகிழும்
திருநாட்களும் பண்டிகைகளும்
எங்கோ போனதே...


பொங்கல் திருநாளில்
பயன்படுத்தும்
ஒவ்வொரு பொருளும்
நம்வாழ்விற்கு
சொல்லித்தரும் தத்துவங்கள்
ஏராளமிருக்க
எல்லாமே மறைந்தும்
மறந்தும்
நம்மைவிட்டு எங்கோ
போனதே...

மீண்டு(ம்)தான் அந்தநாட்கள்
வாழ்வில் வருமோ?
அருகினில் அல்லாது
தொலைவினில் இருந்தாலும்
வாழ்த்திடும் நம்நெஞ்சம்
எதிர்கால சந்ததிகளின்
வாழ்வுவரை தொடர்ந்திடுமோ?
இன்னும்பல ஏக்கங்கள்
ஒருபுறம் இருந்தாலும்


கரும்பின் இன்சுவைபோல் வாழ்வு இனிக்கட்டும்
பொங்கும் பொங்கலைபோல் வாழ்வு சிறக்கட்டும்
ஆதவனின் ஒளிப்போல் வாழ்வு பிரகாசிக்கட்டும்
விளைந்திடும் நிலம்போல் வாழ்வு செழிக்கட்டும்
எல்லார் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்
இன்றுமட்டுமல்லாது என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம்...(அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்)

Thursday, January 13, 2011

முத்தே என் முத்தாரமே...


பெண்ணே நீயுமென்ன கடலா?
உன்னிரு கண்களென்ன முத்துசிப்பியா?
உன்கண்ணீர் துளிகளென்ன முத்தா?
உன்கன்னத்தில் விழுந்து தெரித்துக்கொண்டு - அதற்கு
என்அன்பினை தவிரவிலை இல்லையோ?.

முத்தாய் மாறிவிட காரணமென்னவோ?
முத்துசிப்பியில் துகளாய்புகுந்தது நானோ?
உன்னிதயத்தை அரித்துகொண்டு நீயறியாமலே
என்நினைவுகள் பன்மடங்காய் பெருகிகொண்டு - உன்மனதை
வன்மையாய் இறுகிவிட செய்துகொண்டோ?

என்னைநீ காணும் சமயத்திலும்
உன்னைநான் பிரியும் தருணத்திலும்
உன்னையறியாமல் ஆனந்தத்திலும் அழுகையிலும்
உன்னுடலுக்குள் உதிரமும் உருகிகொண்டோ? - மண்ணில்
உன்கண்ணீரை முத்தாய் சிந்திக்கொண்டோ?

நன்றி: வரிகளை எழுத தூண்டிய என் இனிய நண்பர் சாய் அவர்களுக்கு...

Wednesday, January 12, 2011

உன்னால் தானே வாழ்கிறேன்...சுருங்கி விரியும் இதயத்தால்
நான் இன்றும் வாழ்ந்துகொண்டு
அதில்!
தோன்றி மறையும் உன்நினைவுகளால்
ஓயாமல் நானும் துடித்துக்கொண்டு...

Monday, January 3, 2011

தண்ணீரில் மூழ்கும் ஓடம்...

தண்ணீரில் மூழ்கும் ஓடம்போலே கண்ணீரில் மூழ்குகின்றேனே
வாழ்வின் நிகழ்வுகளால் ஆனந்த கண்ணீரில் சிலநாட்கள்
ஆனந்தமில்லா கண்ணீரில் இனிவரும் எல்லா நாட்களுமோ?
வெறுமையின் கொடுமையில் வாழும் இவ்வாழ்வு வீண்தானோ?

எனக்கு உயிர்கொடுத்த தாயே என்னுயிரை கொல்கின்றாயே
உன்வயிற்றில் நான்பிறந்திட செய்த கர்மம் என்னவோ?
பூர்ண ஜென்ம பாவமோ? எப்படிநான் தொலைப்பேனோ?
இந்தமானிடர் வாழ்பூமியில் என்வாழ்வு இனி தேவைதானோ?

சிறுசிறு வார்த்தைகளால் அடிக்கடி கொல்லும் தாயே
சிலதுளி விடம்கொடுத்து முழுதாய் கொல்லாமல் போகின்றாயே
பெற்றெடுத்த பாவத்திற்கு கொன்று புண்ணியம் தேடிக்கொள்வாயோ?
நரகத்திலாவது நீயில்லாமல் மகிழ்வாய் நான் வாழ்ந்திடுவேனே...