Thursday, July 29, 2010

அதிகாலையும்... நானும்....


நேற்றைய இரவுக்குள்
நிலவின் சுடர்
பிரகாசமாய் இருந்திருந்தாலும்
கருப்புமையால் பூசப்பட்ட
ராத்திரிநேர நீலநிற
வானில் சாயங்கள்
கொஞ்ச கொஞ்சமாய்
வெளுக்க தொடங்கியது
அதிகாலை பொழுதும் - மெல்ல
தலைதூக்க தொடங்கியது....


பறவைகள் இரைதேட
உறைவிடம் விட்டு
விரைந்தோட எண்ணம்கொண்டு...
தான் செல்லும்முன்
தன் குஞ்சுகளுக்கு
விடைச்சொல்லி ஒருபுறமும்!
உறவுகளையும் தன்னுடன்
அழைத்து சென்றிட
மறுபுறமும்!! மரங்களின்
கிளைகள் மேலே
அமர்ந்தும் பறந்தும்
குரலின் ஒலியால் - வசியமாக்கும்
இசைபாடி கூடிட...


மெல்லிய காற்றும்
தென்றலாய் வீசிட
துணைக்கு கார்மேகங்களும்
கூட்டமாய் தவழ்ந்திட!
பனியின் சாரலோ?
இல்லை
மழையின் தூறலோ?
என்று
தெரியா வண்ணம்!!
புல்லின்நுனி மீதிருந்த
சிறு பனித்துளியை!
கையில் எடுத்து
வாயால் ஊத....
உளிக்கொண்டு கல்மீது
செதுக்கிட சிதறும்
துகள்களாய்!! நீரும்
சிதறி உருமாறினாலும்...
நீர்க்கனைகளாய் மெய்தனில்
உட்புகுந்து தலைதன்னை
சிலிர்க்க வைக்கும் - குளிராய்
உடலில் போர்த்தொடித்திட...

அச்செயலுக்கு உடலும்தலையும்
அனிச்சைச்செயலாய் தானாகவே
தந்தி அடித்திட...
கைகள் இரண்டும்
உரசி சூடேற்ற!
உதடுகள் இரண்டும்
உதறி தணிக்க !!
என்னையும் மறந்திட்ட - பொழுதினில்
பொழுதும் புலர்ந்தது...


இரவுநேர அலுவலகபணி
இனிதாய் முடித்து
புவனம் செல்ல
பேருந்தில் தூங்கியபடியே
பயணம் செய்தேன்
இயற்கையின் வனப்பை
ரசித்த மகிழ்வில்
இன்று ஏனோ
புதிதாய் கண்டதைப்போல்...
நாழிகையும் ஆறினை
தொடுவதற்கு ஆயுத்தமென
கைபேசியும் சினுங்க
கண்விழித்து பார்த்தேன் -  க(கொ)ண்டது
கனவாய் அல்லாது...

Wednesday, July 28, 2010

நீ எந்தன் வானம்...


உன் பெயரே
என் வானமானது...
காரணம்?
சூரியனும் சந்திரனும்
ஒன்றாய் இணைந்திருப்பதனால்...
மட்டுமில்லை
என்னருகில் நீயிருந்தால்!
உன்னால் சூரியனின்
ஒளிபோல் பிரகாசிக்கின்றேன்...
என்னருகில் நீயில்லாவிடினும்!!
உன்நினைவால் நிலவின்
குளிர்போல் மயங்குகின்றேன்...

Tuesday, July 27, 2010

உன் கூந்தல்...

உன் கூந்தலென்ன?
கருங்குழலா?
இல்லை!
நீர்சுழலா?
உன்னின் விரல்களே
சிக்கி தவித்துக்கொண்டு...
என்னின் மனமோ
பார்த்து பரிதவித்துக்கொண்டு...

Saturday, July 24, 2010

காதலன் கைகள்...

ஆறுதல்சொல்லி கண்ணீர்
துடைத்திட ஆயிரம்கைகள்
உன்னருகில் இருந்தாலும்...
உயிர்க்கொண்டு முந்திவரும்
சிலகோடி உயிரணுவில்
ஒன்றுமட்டும் கருப்பை
அடைந்து கருவாய்
உயிர்பெறும் செயலாய்
அவனின் கைகளை - மட்டுமே
நினைத்து இருப்பதேனோ?

Friday, July 23, 2010

எல்லாம் உன்னாலே...


உன்னின் விரிந்த நெற்றியில்
பரந்த எண்ணங்களை பார்க்கின்றேன்...
உன்னின் காந்த விழிகளினால்
ஏகாந்த உணர்வுகளை அடைகின்றேன்...
உன்னின் சிவந்த கன்னங்களில்
கவர்ந்த ரோஜாவினை ரசிக்கின்றேன்...
உன்னின் சாந்த மொழியினால்
சித்தாந்தம் வேதாந்தம் கேட்கின்றேன்...
உன்னின் மொத்த அழகினில் - எப்பொழுதும்
என்னை நானே மறக்கின்றேன்...

Thursday, July 22, 2010

குழந்தையும்... தெய்வமும்...


எங்களை யாரையும் நீ
கண்விழித்து பார்க்கவில்லை...
ஆனாலும்!
கொவ்வை செவ்விதழ் மெல்ல
அகன்றது உன்முகத்தில்...
இறைவன் உன்னை பார்க்க
நீயவனை பார்த்து
புன்முறுவல் தன்னை பூத்தாயென
பெரியோர்கள் கூறிட
இறைவனே எங்களுக்கு நீயென - உனைபார்த்து
ரசித்து மகிழ்கின்றோம்.

அன்பு...


தாய்மையின் மறுஉருவம் அன்பு!
காதலின் மறுபெயர் அன்பு!!
அன்பின் மறுவடிவம் முத்தம்
அவ்விரண்டும் அல்லாது நான்
உன்மீது பொழிந்த முத்தமழை
இவ்வுணர்வும் மறுவகை அன்புதானே...

Tuesday, July 20, 2010

முத்தமும்... நினைவும்...


மறக்க முடியாதது!
முதல் காதலும்
முதல் முத்தமும் என்றால்?
என்னால் உனக்கு அளித்ததை
என்னால் மட்டும் எப்படி - என்வாழ்வில்
மறந்து போக முடியும்?

Monday, July 19, 2010

லேசா... லேசா...


மயில்தோகை மெல்லியதென எண்ணினேன்!
மயிலிறகு அதனினும் மெல்லியதென உணர்ந்தேன்!!!

பூக்கள் மென்மையானதென எண்ணினேன்!
பூவிதழ்கள் அதனினும் மென்மையானதென உணர்ந்தேன்!!!

காற்று லேசானதென எண்ணினேன்!
காற்றுதுகள்கள் அதனினும் லேசானதென உணர்ந்தேன்!!!

இவையெல்லாம் என்மனதில் பாரமாய்!
இருகைகளில் உனைதூக்கிய பொழுதினில் எண்ணினேன்!!!

அதனினும் மெல்லியதாய் மென்மையாய்
லேசானதாய் என்மனதை இச்சமயமும் உணர்கின்றேன்.

Saturday, July 17, 2010

கனவாய் போகட்டும்...

இரத்தஉறவாய் இல்லாமல் போனாலும்
நண்பனின் பிறந்தகுழந்தை என்றானாலும்
இருகைகளிலே பூவாய்ஏந்தி முகம்வரை
அள்ளியணைத்து கன்னத்தில் முத்தமிட்டவன்
அவர்களின் சுற்றம் சூழ்ந்திருந்தாலும்
உள்ளத்தின் எண்ணமாய் என்னசொன்னாலும்
சிறுகவலையும் உள்ளத்தில் கொள்ளாது
கொஞ்சிடும் அன்பினை வெளிகாட்டியவன்.

இன்று!
அவனின் விரல்கள் மட்டும்தீண்டி
கைகள் தூக்க துடித்தும்
மனதின் அலைகள் தடுத்திட
தீண்டாமை எனும்பாவ செயல்போல்
எல்லை தாண்டா கடலென
வாரிமார்போடு அணைத்திடாது வந்ததேனோ?
யார் அறிவாரோ?
முதல்குரலென உன்அழுகையை நித்தம்
கேட்க இயலாது என்பதனாலோ?
இல்லை…
பிள்ளை மொழியினை அருகிலிருந்து
ரசிக்க இயலாது என்பதனாலோ?
இல்லை…
மார்பின் மீதேறி விளையாடிடாமல்
தொலைவில் இருப்பாய் என்பதனாலோ?
இல்லை…
விதவிதமான ஆடையும்பூவும் தினம்
அணிந்து காணயிலாது என்பதனாலோ?
இல்லை…
தோள்மீது அமர்த்தி உலாவர
காலம் அமைந்திடாது என்பதனாலோ?
இல்லை
ஆள்காட்டி விரலை இறுகபிடித்து
நடைபயிலும் நிலையிராது என்பதனாலோ?
அவன்!
இல்லை இல்லையென ஏராளமாய்
சொல்லிகொண்டு போகவேண்டும் என்பதனலோ?
இல்லை
விதியாய் வாழ்வில் இறைவன்
செய்திட்ட கோலம் என்பதனாலோ?
எதுவோ?
எதுவாயினும் அவனோடு புதைந்து
போகவேண்டும் வெறும் கனவுகளாக…

Friday, July 16, 2010

உன் அழகும்...உன் அன்பும்

கண்ணே!!!
என்இளமை முதல் இன்று
என்முதுமை வரை வாழ்வில்
என்கண்ணில் காண்கின்றேன் நித்தம்
எத்தனையோ பதுமை!
ஆயினும்...
உன்னை கண்டபின் உணர்ந்தேன்
உள்ளத்தின் உணர்வாய் உன்னைவிட
இறைவன் படைத்திட இனி - எதுவும்
இல்லை உலகில் புதுமை...

Thursday, July 15, 2010

குட்டி பாப்பாவிற்கு!!!

Funny Pictures

சொக்க தங்கமாய் மண்ணில் பிறந்தாய்!
பண்பின் அங்கமாய் மண்ணில் வளரவேண்டும்!!

மின்னும் வைரமாய் மண்ணில் பிறந்தாய்!
கனிதரும் மரமாய் மண்ணில் நிலைக்கவேண்டும்!!

வெண்ணிற முத்தாய் மண்ணில் பிறந்தாய்!
குறையாத சொத்தாய் மண்ணில் திகழ்ந்திடவேண்டும்!!

ஜொலிக்கும் வெள்ளியாய் மண்ணில் பிறந்தாய்!
மணக்கும் மல்லியாய் மண்ணில் மணந்திடவேண்டும்!!

மங்களமான பவளமாய் மண்ணில் பிறந்தாய்!
அட்சய கவளமாய் மண்ணில் இருந்திடவேண்டும்!!

கவரும் மரகதமாய் மண்ணில் பிறந்தாய்!
மயக்கும் கீதமாய் மண்ணில் இசைத்திடவேண்டும்!!

ரசிக்கும் ரத்தினமாய் மண்ணில் பிறந்தாய்!
ஒய்யார ரதமாய் மண்ணில் வலம்வரவேண்டும்!!

புஷ்ப ராகம்போல் மண்ணில் பிறந்தாய்!
ஆனந்த ராகமாய் மண்ணில் ரசித்திடவேண்டும்!!

கோமேதகம் போல் மண்ணில் பிறந்தாய்!
மழை மேகமாய் மண்ணில் சிறந்திடவேண்டும்!!

கண்ணின் மணிபோல் மண்ணில் பிறந்தாய்!
சிறந்த பெண்மணியாய் மண்ணில் வாழ்ந்திடவேண்டும்!!

முதல் வரியாய் வீட்டில் பிறந்திட்டாய் எங்களுக்காக
இரண்டாம் வரியாய் நாட்டில் வளர்ந்திடுவாய் மற்றவர்களுக்காக...

Tuesday, July 13, 2010

கவலை...


வாழ்கையில் இன்பமும் சந்தோஷமும்
நொடியும் நிமிடமுமாய் கண்முன்னே
உருவமாய் தோன்றி கனவாய் மறைந்தாலும்
துன்பமும் துயரமும் நீண்டகால
பொழுதாய் மனதில் என்றும் - ஏனோ?
நிழலாய் நீங்காத நினைவாய்...

ஆனந்தம் என்ற வடிவத்தின்
பாதங்கள் கண்ணுக்கு தெரியாமல்
காற்றாய் மேனியை கடந்து சென்றாலும்
வருத்தம் என்ற வாட்டம்
பாதசுவடாய் இதயத்தில் பதிந்து - ஏனோ?
தீயினாற் சுட்டபுண்ணின் வடுவாய்...

Saturday, July 10, 2010

நீ தேனீயா?


தேனீயால் வாழ்நாளில் ஒருமுறை
மட்டும்தான் கொட்ட இயலும்.
ஆனால்,
நீயோ! என்னை உன்பார்வையாலும்
நினைவாலும் தேனீயை போல் - எக்கணமும்
கொட்டி கொன்று கொண்டே...
ஆனால்,
வலியும் தேனாய் என்மனதுக்குள்....

Friday, July 9, 2010

மழையும்... நீயும்...


என்றாவது குடைக்குள் மழை...
எப்பொழுதும் உன்னை நினைத்தாலே
என் இமைக்குள்ளும் மழை...

Saturday, July 3, 2010

Thursday, July 1, 2010

எதற்காக?

என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...
உன்னுடன் தேன்நிலவாய் தேனீர்
மட்டும் அருந்தி மகிழ்ந்தேன் என்றா? - இல்லை
உன் உதட்டின் வடிவத்தையும்
வடிவையும் ரசித்து அதில் வடியும்
தேனையும் பருகிட நினைத்தேன் என்றா? - இல்லை
உன் நாழிகையின் மேல் சுரந்து
நீ உமிழும் உமிழ்நீரையும் அமிர்தமாய்
பரிமாறி சுவைத்திட எண்ணியதற்கா?
என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...