Wednesday, August 31, 2011

இருப்பினும் நான்...கற்பாறையில் உருகும் வெண்ணையாய் நீ
கண்பார்த்து துடிக்கும் உள்ளத்தோடு நான்
நான் கை இல்லாதவனும் அல்ல
நான் வாய் இல்லாதவனும் அல்ல - இருப்பினும்
உன்னை காக்க முடியாமல்...

கதவுக்கு பின்னால் நீ
கனவுக்கு பின்னால் நான்
நான் கவிஞனும் அல்ல
நான் கலைஞனும் அல்ல - இருப்பினும்
உன்னை சிந்தித்துக்கொண்டே...

காட்சிக்கு அப்பாற்பட்டு நீ
காதல் வயப்பட்டு நான்
நான் கதாநாயகனும் அல்ல
நான் கதாயாசிரியனும் அல்ல - இருப்பினும்
உன்னை எண்ணிக்கொண்டே...

காதல்பேசும் மனதோடு நீ
காமம்கொண்ட உணர்வோடு நானா?
நான் இராமனும் அல்ல
நான் இராவணனும் அல்ல - இருப்பினும்
உன்னை நினைத்துக்கொண்டே என்றென்றும்...

Tuesday, August 30, 2011

வாழ்த்துகள்....


நண்பா!!!
பள்ளிமுதல் இந்தநாள் வரையிலும்
பிரம்மாச்சாரி என்னும் கூட்டணியில்
என்னோடு இத்தனை காலம்
உறவாக நட்போடு வந்தவனே...

கிருஷ்ணா!
இன்று வேறுகூட்டணிக்கு
மாறிவிட இருக்கின்றாய்
உனக்கென பிறந்ததுணையோடு - விரைவில்
இணையாக இம்மண்ணுலகில் வலம்வர...

இறைவா!
இருவரும் வளமோடு வாழ்ந்திட
இவ்வுலகில் சிறந்து விளங்கிட
இதயபூர்வமாய் வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்....

(வருகின்ற செப்டம்பர் 11ம் தேதி திருமண நிச்சயதார்த்த விழா இனிதே நடைபெறவிருக்கும் தோழன் கிருஷ்ணாஜி ராவிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...)

Saturday, August 27, 2011

எண்ணும்... எழுத்தும்...இலக்கங்களின் வழியே
இலக்கியம் பேசவைத்தாயே...

தமிழின் எழுத்துகளுக்கு
உச்சரிக்க மாத்திரை
அளவுவினை சொல்வதுபோல்...

எண்களுக்கும் உன்னுதட்டில்
உயிர்கொடுத்து உச்சரித்து - எந்தன்
நித்திரையை வீணடித்தாயே.

Friday, August 26, 2011

பூவே உன் வாசம்.... வாசமே என் சுவாசம்...வாடிய பின்பும்
வாசம்வீசும் மலராய்
விலகி சென்றபின்பும்
விரும்பி நிற்கிறேன்...

மலர்ந்து மயக்கிய மலர்களின்
இதழ்களும் காகிதமாய் மாறியது
வண்ணங்களும் உன்னை ஞாபகபடுத்த
அதனிலும் உன்பெயரை என்னிதழ்களால்
முத்தமிட்டு எழுதி ரசிக்கின்றேன் - உன்னால்
வாசமும் எந்தன் சுவாசமாகின்றது...

என்னருகிலோ என்னுடனோ
நீயில்லை என்றபோதும்
உயிர்வாழ்கிறேன் நொடிநொடியும்
உந்தன் நினைவுகளோடு...

Thursday, August 25, 2011

அழகிய பாடம்பொங்கும் அலைபோல் ஓடி வந்தாய்
வற்றாத கடல்போல் ஆசைகள் தந்தாய்
எங்கிருந்தோ என்னில் வந்து கலந்தாய்...
ஆனால்!!!

மண்ணில் விழுந்து சிதறி நொடியில்
மறையும் முதல் மழைத்துளி போன்றே
மனதுக்குள் உதிக்கும் அனைத்தையும் நானே - எனக்குள்
மறைத்து உடைத்தெரிந்து வாழவும் கற்றுக்கொடுத்தாய்...

Wednesday, August 24, 2011

ஆசைகள்.........
நான்
புத்தனா?
பித்தனா?

அடைய முடியாமல்
குழப்பங்களாய் கொண்டு
பித்தனாய் அலைகிறேன்...

அடைய முடியாதென்று
ஆராய்ந்து உணர்ந்து
புத்தனாய் பிறக்கிறேன்...

ஆனால்!
இறப்புகள் இல்லை
பிறப்புகள் மட்டும் - மீண்டும்
என்னுள் நிகழ்ந்துகொண்டே...

Monday, August 22, 2011

மன்னிப்பு...


 உந்தன் கைபிடித்த
முதல்முறையான தீண்டல்
மீண்டும் மீண்டும்
மனதை வருடிக்கொண்டே...
கறைபடிந்த எந்தன்
கைகளால் தீண்டினேன்
என்றோ? செய்ததவறுக்கு
தண்டனையாகவோ என்னவோ?
உன்கையை பிடித்திருக்கவே - ஏனோ
மனம் ஏங்கிகொண்டு...

என்னை அறிவாயோ?நீஅனுப்பும்
குறுஞ்செய்தி
எனக்கு பத்தோடு
ஒன்றாக இருக்ககூடும்...

ஆனால்...

நானுனக்கு
அனுப்பும்
குறுஞ்செய்திகள்
எல்லாம் உனக்காக
மட்டுமே இருக்கும்
என்பதை என்றாவது
நீயறியகூடும்...

Thursday, August 4, 2011

புகைப்படம்...


படம் பார்த்து
கதை சொல்கிறது
சிறுகுழந்தை...
உன்படம் பார்த்து
நானும் குழந்தை
ஆகிபோகிறேன்..
கவிதை என்று
ஏதோ கிறுக்கி
உன்னழகில்...

Tuesday, August 2, 2011

சிறு வேண்டல்...


கண்ணே!
எந்தன் பேனாவும்
உன்னிடம் சேலையை
கடன் கேட்கிறது...

உன்னை பற்றி
எழுத அதனிடம்
மை தீர்ந்துவிட்டதாம்...

அழகே!
உந்தன் அழகினை
அழகாய் வர்ணிக்க
தடைகள் ஏதுமின்றி
நீயும் அள்ளித்தருவாயோ?

உன் சேலையால்
என்கவிதையை மெருகேற்று
உன் மொழியால்
என்னை பாராட்டு
உன் இதழால்
என்னை சீராட்டு
உன் பார்வையால்
என்னை உயிரூட்டு...

என்கவிதையும் நானும்
உன்னால் வாழ்ந்துபோகிறோம்..