Thursday, December 31, 2009

எதிர்காலம் இன்றே நம்கையில்

இறைவா!


எறும்புகளும் நாளை
உண்டுவாழ்ந்திட
இருக்கும்சமயத்தில் இன்றே
உணவை சேமித்து வைக்கின்றன…


ஒட்டகங்களும் நாளை
தாகம்தனித்திட
கிடைக்கும்சமயத்தில் இன்றே
நீரை குடித்து வாழ்கின்றன…பறவைகளும் நாளை
கூடிமகிழ்ந்திட
பழகும்சமயத்தில் இன்றே
கூடுகட்டி வாழ துவங்குகின்றன…மனிதா!

நம்மைவிட அறிவுகுறைந்த உயிரினங்களே
நாளையென்று சிந்திக்கும் இந்தசமயம்
நாம்யேன் இன்றாவது சிந்திக்ககூடாது?
நல்லதென்று இந்தாண்டாவது தொடரகூடாதா?


நேற்று என்பது
தரையில் வாடி கிடக்கும் மலர்கள்
அவை வாடியது ஏனென்று
எண்ணுவதும் அர்த்தமற்றதுநாளை என்பது
செடியில் பூக்க இருக்கும் மொட்டுகள்
அவை எப்படி இருக்குமென்ற
கனவும் வாசமற்றது
இன்று என்பது
கையில் மலர்ந்து சிரிக்கும் இதழ்கள்
அவைகளை போல்வாழ வேண்டுமென்ற
நினைவு தன்நிகரற்றது.நண்பா!

நாளை என்பதில்லாமல்
இன்றே அடைய வேண்டும் உணர்வோடு
வெற்றியை சூடுவோமென்ற உறுதியோடு
இலட்சியங்களை நாம் வகுப்போம்.

நமக்கு மட்டுமென்ற
தனியுடைமை மனதில் கொள்ளாது
பிறர்க்கும் வேண்டுமென்ற உன்னதத்தோடு
பொதுயுடைமை என்றும் காப்போம்.
நாளை வெற்றிகனியாகிட
இன்றே விதைத்து மகிழ்வோம்
தினமும் அதுவளரும் வளர்ச்சியை
ரசிப்போம் நாமும் வளர்வோம்.
நன்றே செய்வோம்
இன்றே செய்வோம்
இக்கணமே செய்வோம்
எக்கணமும் செய்வோம்.

Thursday, December 24, 2009

யாதும் ஊரே யாவரும் கேளீரோ?

(வேற்று மாநிலகாரர்களாக பிறந்தது நம் தவறுமில்லை, அது தோன்றிய / தோற்றிவித்த காதலின் தவறுமில்லை).


என்றும்
நமக்காகவும்
நம் காதலுக்காகவும்
எதை வேண்டுமானாலும்
இழப்பேன், செய்வேன் - எப்பொழுதும்
முனைவதற்கும் ஆயத்தமாய்.


ஆனால்
தமிழுக்காகவும்
என் தமிழனுக்காகவும்
எதை வேண்டுமானாலும்
இழப்பேன், செய்வேன் - எப்பொழுதும்
முனைவதற்கும் ஆயத்தமாய்.


அதற்காக
உன்னையும்
உன் காதலையும்
துறப்பேன், வேண்டுமானாலும்
இறப்பேன், மாறமாட்டேன் - என்றும்
இருப்பேன் தமிழனாய் மட்டும்.


அன்பான
என் தாய்மொழி மீது
எனக்கு பைத்தியம்தான்
ஆனாலும்
என்றும் பிறமொழி மீது
எனக்கு வாஞ்சைதான்.


இன்றுவரை
தமிழ்மொழி என்ற வெறியோ
பிறமொழி என்று தரகுறைவோ
எந்தசமயுமும்
இதயத்தில் இருந்ததும் இல்லை
இதயத்தை இடறியதும் இல்லை.


உணர்ந்தேன்
உன் வார்த்தைகளால் என்னுள்ளம்
ஊனமாக்கபட்டதை
முடிந்தால் சம்மதம் பெற்றுவா
நீ வாழ்வது தமிழ்நாடு
இனி வாழபோவது தமிழனோடு என்று.


காத்திருப்பேன்
கண்ணே உன்வருகைக்காக
பூத்திருப்பேன்
பெண்ணே உன்பார்வைக்காக
மயங்கி(மாய்ந்து)போவேன்
மானே உன்அன்புக்காக.

Wednesday, December 23, 2009

என்னுயிரே நீ...

வான்
மேகத்திலிருந்து தூவும் தூறலும்
தெற்கிலிருந்து வீசும் தென்றலும் பொழிய
மோகம் கொடுக்கும் சாரலாய் - அல்லாதுயென்
தேகத்தில்  தோற்றுவிக்கும் கீறலாய் உருவெடுத்தது.


தினம்
என்மனம் படும் குமுறலும்
என்உதட்டில் எழும் உளறலும் ஒழிய
என்இதயம் தேடும் உன்குர(லை)லாய் – பெண்ணே
என்சோகத்தை போக்கும் தோன்றலாய் வந்துவிடு.


கணம்
உன்மொழி கேட்காமல் கதறினேன்
உன்னை பார்க்காமல் பதறினேன் வாழிய
உன்பசும் நினைவால் ஆதரவா(ய்)னேன் - கண்ணே
உன்மெளனத்தை சொல்லாமல் சிதறலாய் சொல்லிவிடு


என்
கண்ணில் கண்ணீரும் வற்றியது
கண்ணீரும் கவிதை இயற்றியது அழியா
கவிதையும் காலத்தால் உயிரா(ய்)யிற்று - நில்லாதுயென்
காதலாய் கலந்துவாழ்ந்திட ஆற்றலாய் ஒன்றுகூடிவிடு.

மீனராசி
மீன்இனம்

மீண்டும் வருவேன்

மீண்டு வருவேன் - உன்னை

மீட்டு வாழவருவேன் உன்னோடு...

Tuesday, December 22, 2009

வார்தையல்ல வாழ்கை ...

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
என்று நீ மனதில் நினைக்கலாம் - உண்மை
சுரைக்காயில் செய்த சாம்பாறும்
தேங்காய் கலந்த கூட்டும் ருசி மாறாது.


அதுபோல்,
என் வார்த்தைகள் காதலுக்கு உதவாது
என்றும் படிப்பதற்கு அழகுயென எண்ணலாம்...
வார்த்தையல்ல நான் கொண்டபாசமும்
பண்பும்பற்றும் என்றும் வாழ்கையில் மாறாது.


என்னை விரும்பியது மட்டுமில்லாமல்

என்னை நம்பியும், நில்லாமல்
என்கரம் பற்ற வந்திடு
என்சிரம் சாயும்வரை
உன்மனம் கோணாமல்
நம்மனம் தளராமல்
தன்மானம் இழக்காமல்
ஒன்றாய் ஆண்டுபல வாழந்திடலாம்.

நாமும் திருநங்கையரா?


நேற்று

என் இரயில் பயணத்தில்

நான் சந்தித்த இவர்கள்

உடல் வெளிபுற தோற்றத்தில்

ஆணும் பெண்ணும் கலந்து

கேலிக்கும், கேளிகைக்கும் அவர்கள்.

அவர்களின் பிறப்பின் சதியிது.


ஆனால்

என் மனதின் உள்ளே

நீயும் என்னுள் சேர்ந்து

அப்படியானால்

நானும் இவர்களுக்கு சமம்தானோ?

அங்கு நீயும் அப்படிதானோ?

நம் பிறப்பின் விதியா இது?

 
 (யாரையும் புண்படுத்த அல்ல)

சுனாமியின் அறிகுறியா?

புலி பதுங்கி

பின்பு தன் இரையின்மீது

பாய்வது போல


கடலே இன்றுநீ சிலஇடங்களில்

உள்வாங்குகிறாய்

சுனாமியாய் எங்கள்மீது தாக்கவோ?


Monday, December 21, 2009

உன்உதட்டில் என்றும்
புன்னகை பூத்திருக்கவேண்டும்
அந்த புன்னகைக்கு

நான் காரணமாயிருக்கவேண்டும்
அந்த காரணத்தில்
என்முகம் மலர்ந்திருக்கவேண்டும்
அந்த நினைப்பிலே
என்னுயிர் வாழ்ந்திருக்கவேண்டும்
என்று எண்ணிய என் நெஞ்சிற்க்கு
உன்னை காணும் இரண்டாம் முறையே
உன்கண்களில் கண்ணீரை
கண்டேனே! காரணம் நீயே கூறுவாயா?.


என் உணர்ச்சிகளும் உணர்வுகளும்
இன்னும் தெரிந்தும்தெரியாமலா நீ? - இல்லை
என் உண்மையும் உறவும்
இனியும் வேண்டவேவேண்டாம் என்றாநீ?
உன் நெஞ்சில் என் நினைவையும்
கண்ணில் கண்ணீரையும்
உதட்டில் மெளனத்தையும்
மனதில் தைரியத்துடனும்
என் கண்முன்னே வந்து
பேசாமல்பேசி சென்றாயடி.

இனியாவது
உன்மெளனத்தை கலைத்(ந்)து
பேசாது நடிக்கும் நாடகத்தையும்
உடைத்து காதலுக்கொரு
உயிரை கொடுத்திடு
உனக்காகவும்
உன்அழைப்பிற்காகவும் காத்திருப்பேன்என்றும்...

இனி என்ன செய்ய

இன்றுவரை!

என்காதலை உன்னிடம்
நேரில் கூறியதில்லை
அப்படியிருக்க
உன்னிடம் என்னை
பிடித்திருக்கிறதா? இல்லையா?
என்று கேட்டது எந்தவறு
உண்மைதான் ஆனால் நான்
சொல்லாததற்கு காரணம் பலஉண்டு
என்பதை நீ தெரிந்திருப்பாய்.கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன் அவன்
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும்
தைரியம் உள்ளவன் அவன் எனும் பாடல்வரிகளுக்கேற்ப
உன்கண்களை பார்த்து நேரில்சொல்ல ஏங்கியவன் இவன்.


அதனால்தான்...
பனிவிழ தொடங்கும்
கார்த்திகை மாதம்
முழுநிலா முகம்காட்டும்
பெளர்ணமி திருநாள்
பொன்கிடைத்தாலும் கிடைக்காத
புதன்கிழமை வாரம்
இரவும்பகலும் கூடல்கொள்ளும்
மாலை நேரபொழுது
அமைதியும் அருளும்நாடும்
இறைவன் சன்னதி
உன்னைநான் கண்டிட
மையல் கொண்டேன்மேலும்...

சுற்றிவரும் வெளிபிரகாரத்தில்
கோவில் தின்ணையில்
நீ அமர்ந்து இருக்க
உள்ளிருக்கும் தெய்வத்தை
மட்டுமல்லாது
வானவீதியில்
வீற்றிருக்கும் இயற்கைத்தெய்வதையும்
முன்னிருத்தி
நான்கொண்ட காதலை
முதற்முறை பூவொன்றை கையில் கொடுத்து
உன்கண்ணை பார்த்தும்
இரண்டாம்முறை உன்னருகில் அமர்ந்து
உன்கரங்களை பிடித்தும்
மூன்றாம்முறை எந்தோளில் சாய்த்தும்
உன்னை வருடியும்
நான் உன்னை காதலிப்பதையும்
என்னுயிருள்ளவரை உன்னோடுயிருப்பேன்
என்பதையும் சொல்ல துடித்தேன் அன்று...


ஆனால்

உன்னை முதலில் கண்டபோது
என்காதலை உன்னிடம் சொல்லவில்லை
காரணம் உன் உடன்பிறப்பு மட்டுமில்லை
மத்திய அத்தியாயம்வரை படித்த நாம்
மீண்டும் முதல்அத்தியாயம் படிக்கவேண்டாமென்றுதான்
காத்திருந்த சமயத்தில் உன்னிடம்
சொல்லவில்லை
சொல்ல முடியாமலுமில்லை
சொல்ல கூடாதென்பதுமில்லை
சொல்லியிருந்திருக்கலாம் - இனி என்ன செய்ய?

உன் பதிலை வேண்டி…

அன்றுபோல்

சங்ககால காதலாய் இருந்திருந்தால்
தலைவி, தலைவன் மேல்கொண்ட
காதலை தோழியறிந்து
தோழி செவிலியிடம் உரைத்து
செவிலி நற்றாயிடம் எடுத்துக்கூறி - நாம்
மணக்கோலம் பூண்டு மகிழ்ந்திருக்கலாம்….ஆனால்
கலியுக காலம் என்பதனாலோ
என்னை காணாமலே காதல்கொண்டு
என்னை கண்டபின்பே உன்மனதை
மனையோரிடம் சொல்லியதாக
சொல்லி ஏற்கவில்லை என்பதைமட்டும் - என்
மனம்கோணிட கண்ணீர் சிந்தாமல் சொல்லிசென்றாய்…இன்றும்

வரும்எதிர் காலம் நம்முடையதாக
என்னை உன்தோழியாய் எண்ணி
உன்ஆழ் மனதில்பதிந்து இருப்பது
என்னவென்று கூறிவிடு சம்மதமென்றால்
மறுமுறை போராடி பார்க்கலாம் – நம்
மனசோகம் இன்றே நீக்கிவிடலாம்.

Sunday, December 20, 2009

உன்னால் ... உனக்காக ...

இதுவரை

நான் யாரிடமும்
அதிகமாக
கடிந்து வார்த்தையை பேசியதுமில்லை
அதிகாரத்தோடு
நடந்து கொண்டதுமில்லை - ஆனால்
உன்னிடம்
முடிந்தது எப்படியோ  தெரியவில்லை
இந்த  மாற்றம் ஏனென்று
புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் உன்னிடம்
பேசிய
வார்த்தைகளும்
செய்யும்
செயல்களும்
உனக்கு  எந்த விதத்திலாவது
சந்தோசம் அளிக்குமென்றுதான்
நம்பிக்கையோடு இன்றும்.

என்னை நீ
முடிந்தால் புரிந்துக்கொள்
உன்னை
என்னால் புரிந்துக்கொள்ளமுடியும்
என்பதை
மட்டுமாவது உணர்ந்துக்கொள்.

நீ அறிவாயோ?


நீ அறிவாயோ?
கண்ணில் கண்ட உன் கண்ணீரை
விரல்களால் துடைத்திட என் கரம்
துடித்தது அதனை செய்திடாமல்
என் மனம்  நொறுங்கிப்போனது.
 நீ அறிவாயோ?நீ அறிவாயோ?
உன் விருப்பம் இல்லாமல் நான்
உன் விரல்நுனியை - அல்ல அல்ல
உன் மேனிதுணியும்
உன் ஒற்றைகேசமும்
என்னை தீண்டுவதையும்
தவிர்த்தேன் விருப்பமாய்.
நீ அறிவாயோ?நீ அறிவாயோ?
உன் கூந்தலை வருடி
உன் நெற்றியில் முத்தமிட்டு
உன் இடக்கையை
என் இருகையால் பிடித்து - உன்னை
என் தோளில் சாய்த்து
என் ஆறுதலையும்
என் அன்பையும் காட்டி
உன் சோகத்தை மறந்துவிட
என்னால் செய்யமுடியாமல்
என்னுயிரை இழந்தேனடி...
நீ அறிவாயோ?

என்னுள் எத்தனையோ நீ அறிவாயோ?
நீ அறிவாயோ? நீ அறிவாயோ? நீ அறிவாயோ?

மன்னித்து விடு என்னை

நேற்று...
உன்னை வரசொல்லிவிட்டு
என்னை காணாமல்
உன்மனதில் கோபம் வந்திருக்கும்
என்மேல் கண்டிப்பாக - காரணம் கூறவா?

அன்று...
உன்னோடு நடந்த நடைபாதையில்
ஒன்றாய் நடந்த நாம்
பாதசுவடு ஏதாவது ஒன்று
பார்வையில் படாதா?என்று ஏங்கித்தான் தேட சென்றிருந்தேன்.

இதுவும் உன்பணியா?

அலுவலகத்தில் ,

கணினிதுறையில்
உடன்பணிபுரிவரின் முகம் பார்க்காமல்
இருக்கும் இடத்திலிருந்து - அவர்களின்
குறைகளை, தேவைகளை பூர்த்திசெய்தாய்.

அதனாலோ என்னவோ
என்னையும் முகம் பார்க்காமல்
இருந்த இடத்திலிருந்து - ஆட்டிவைத்தாய்
காதலையும், என்னையும் கொல்லாமல் கொல்கிறாய்.

சுயம்பு

நான் வணங்கும் ஆதிபராசக்தி
மட்டுமல்ல
என் நெஞ்சில் காதலும்
மங்கை நீயும்...

தேவை உந்தன் ஒற்றைச்சொல்

விரும்பமானவளே !!!

வீட்டின்...
விலாசம் தந்துவிடு
விசாரித்து வந்துவிடுவேன்
விவாதம் செய்யல்ல  - உன்னை
விவாகம் செய்திட...


உன் ஒருவார்தைபோதும்...

உலகத்தை ஒன்றுதிரட்டி
உன்ஊரில்   ஒன்றுகூட்டி
பெற்றோரின் சம்மதத்தை
பெற்றெடுத்து கரம்கோர்ப்பேன்.


இல்லையேல்...

உலகம் திரண்டுவந்தாலும்
ஊர்  இருண்டுபோனாலும்
உன்னோடு வாழ்வதற்கு - உன்
உள்ளங்கையோடு சேர்ந்திருப்பேன்.

Friday, December 18, 2009

காதல் வேதனை

பெண்ணே !
என் வாழ்க்கையெனும் மேடையில்
உன் நாடகத்தை மௌனத்தால்
அரங்கேற்றி வெற்றி கொண்டதைபோல்
அருமையாக சிறகடித்து பறந்துவிட்டாய்...

இங்கு
என் கவிதையின் வரிகள்
என் உள்ளத்தின் வலிகள்
வெறும் வார்த்தையாய் உனக்கு
வெறும் கண்களுக்கு தெரியும்.

அவை
என் கண்ணீரும் செந்நீரும்
என்பது உனக்கு தெரியாதா?

அதை
புரிய வைக்க உனக்கு
புதிய வெள்ளை காகிதத்தை எடுத்து
என் கண்ணீரில் நினைத்து
என் மனதால் சலவை செய்து
என் செந்நீரால் எழுதி வடித்து
எழுத்து அஞ்சலில் அனுப்ப வேண்டுமா?


காதலுக்கு கட்டளை

காதலே ...

உள்ளத்தில் உறுதியில்லாதவரிடம்
நீ சென்று
உன்னை ஏன் உருக்குலைத்து
கொள்கிறாய்?

உண்டாக்கும் தடையை
உடைப்பவரிடம் சென்று
உன்னை நீ
வாழவைத்து கொள்வாயாக...


(இது முக்கியமாக
மனதில் உள்ளதை வெளியில் சொல்லாதவர்களுக்கும்
காதலன் / காதலி பெயரை கூட கைபேசியில் சேமிக்காதவர்களுக்கும்)

Friday, December 11, 2009

சுனாமியின் வேதனை


 
கடற்கரையில்
காலடி வைக்கும்
சிறுமியின் ஏக்கம்
சுனாமியின் தாக்கம் இது ...


ஏய் சமுத்திரமே !!!

அன்று சத்தமில்லாமல்
அமைதியான தூக்கத்தில் அசுரனாய்வந்து
அன்பான என்இனங்களை அழித்தவனே !
வாழ்கையை அபகரித்து அனாதையாக்கியவனே !!

நாங்களே
வறுமையில் வாடுபவர்கள் !
எங்களிடம்
இருந்ததையும் எங்களையும்
வாரீரைத்தும் எடுத்தும்
சென்றாயே !! நியாயமா ?


இன்று வெட்கமில்லாமல்
அலையெனும் தூதுவனை அனுப்பி !
என்காலெனும் பாதங்களை கோடிமுறை  
வருடிவருடி பாவமன்னிப்பு கேட்க்கின்றாயே !!

உன்னை
வாழ்கையில் மறக்கமுடியுமா !
எங்களை
இனிஉன்னால் காக்கமுடியுமா !!
கொடுத்ததைவிட அதிகம் - எடுத்தும்
கொண்டாயே !!! நியாயமா ?

என்றும் இனிமேல்
வரமாட்டேன் என்று சொன்னால்
நான் மட்டுமில்லை இறந்தவர்களும்
உன்னை மன்னித்துவிடுவர் !
மீண்டும்வருவதற்கு இது ஒத்திகை
என்று(ம்) சொல்லிவிடாதே - தாளாது என்நெஞ்சம் !!நான்
இறந்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்த
இழந்தவர்களுடன் வருக்கின்றேன்
உன்னை
அழைக்கவோ அரவணைக்கவோ அல்ல
எங்களைகாண மீண்டும்வராதிரு.

Thursday, December 10, 2009

பாவை உந்தன் பார்வைஆற்றின் படுகையருகே
குளமென்று ஒன்றைவெட்டி
ஆற்றுநீரை சேகரிப்பதுண்டு
ஆனால் இன்றுஎன்
கண்ணெனும் குளத்தில்
செந்நீர் ஊற்றெடுத்து
ஆறொன்று தோன்றிவித்தாயடி - உன்
ஒற்றைசொல்லாலே, பார்வையாலே.

         


என்இதயமும் உன்நினைவும் ...

                                             ஒவ்வொரு நிமிடமும்
உன்னை நினைக்க மறக்க சொல்லி
என்இதயத்தை நடிக்க சொல்லுகின்றேன்
ஆனால் ...
அறுபது நொடியும்
உன்னை மறக்க நினைக்காமல்
என்இதயம் வெடித்து கொண்டேயிருக்கிறது.

Monday, December 7, 2009

நீயும் நானும் ...

நீ
என்னோடு ஊட்டியில்
உன்கைகோர்த்து நடக்கையில்
பனிக்கட்டியில்லாமல் நடைபாதையில்
புகைமண்டலமாய் தோன்றியது - ஏனோ
நம்தோள்கள் உரசியதால் என்னவோ?


நான்
உன்னோடு தார்பாலையில்
என்தலைசோர்ந்து தொடுகையில்
கானல்நீரில்லாமல் மணல்பாதையில்
நீர்துளிகளாய் பூத்தது - ஏனோ
நம்உதடுகள் பேசியதால் என்னவோ?

Thursday, December 3, 2009

உன்வருகையை நோக்கி...


காதல்மாயையும் பிரிதலும்
 கண்ணேஎனக்கு புதிதானதல்ல.
காணவேண்டிதான் கண்ணில்தவிப்பு
  கண்டபின்தான் மனதில்பரிதவிப்பு.


ஏனோ!

உன்னைநீ புரிந்துகொள்ளாமல்
  என்னைநீ புதிராக்கிஉனக்குள்
உன்வாழ்வெனும் வசந்தத்தை
  உருகுலைத்து வருத்திக்கொள்ளாதே.

Tuesday, December 1, 2009

பேருந்துபயணத்தில் நீ
உன்கூந்தலில் சூடிவந்த
மலர்கீழே விழுந்ததையே
அறியாதவள் நீ!!!


பின்எப்படி தொலைவில்நீ
என்கண்ணில் சூழ்ந்திருக்கும்
கண்ணீர்துளி(நீ) இருப்பதை
அறிவாய் நீ???