Tuesday, August 31, 2010

மடிகணினி...

 

என்  வாழ்வில்...
கன்னியவளை என்மனதில் மட்டும்
வைத்து சுமக்கின்றேன் காக்கின்றேன்....
ஆனால்...
என் பயணங்களில்
மடிகணினி என்பதனாலோ அவள்நினைவோடு
உன்னை என்மடியோடும் மார்போடும்
அணைத்து காக்கின்றேன் சுமக்கின்றேன்...

Monday, August 30, 2010

தண்டனை...


தண்டனைகள் கடுமை ஆகும்வரை
குற்றங்கள் குறையாது என்பேன்...
அதற்காகவா?
உந்தன் ஒருஅழைப்பை எடுக்க
இயலாமல் போன காரணத்திற்கு
உன்னை பலமுறை அழைத்தும்
அழைப்பை எடுக்கமறுத்து தண்டனையை
எனக்கு அளித்து கொண்டு...

தண்டனைகளில் மிககொடியது பேசாமல்
இருப்பதும் பேச மறுப்பதும்தான்
என்பதனை உணர்வுகளில்நீ உணர்ந்தோ?
உணராமலோ? தவிப்புடன் நான்...

(காரணம் ஆயிரம் சொன்னாலும்... ஏற்க முடியாமல் இருவரும்...)

Sunday, August 29, 2010

சந்திப்பும்.... சிந்திப்பும்


முதல்முறையாய் ஒருமுறை
சந்தித்ததற்கே இப்படியா?
என்றாய்
அதனால் என்னவோ?
இரண்டாம்முறை சந்திக்க
சிந்திக்கின்றேன்
வர்ணித்ததில் பயமில்லை
வார்த்தைகளுக்குதான் பஞ்சம்
என்னுள்….
இரண்டாம்முறை சந்தித்தபின்
வர்ணிக்க வார்த்தையற்றுபோவேனோ?
எனநினைத்து….

Saturday, August 28, 2010

உணவகத்தில்...


என்னருகில் அமர்ந்துநீ
உண்ண நினைத்தபோதும்
என்மனதுக்குள் ஆசையிருந்தும்
உண்ணமறுத்து எதிரமர்ந்தது
வருத்ததை தந்திருக்கலாம்...

ஆனால்!
உண்ணுவதற்கு குனியும் தருணத்தைவிட
மற்றநேரங்களில் உன்முகத்தை மட்டும்
காணவிரும்பி மற்றவர்களின் முகத்தை
காணமறுத்ததை இன்றாவதுநீ உணர்வாயோ?..

Friday, August 27, 2010

செந்தாமரை நீயோ...


என் பேருந்து பயணத்தில்...
மலர்ந்த செந்தாமரையாய் உந்தன்
முகத்தை முதலில் கண்டேன்...

பேருந்தை விட்டு இறங்கநீ
எழுந்தசமயம் முழுஉருவம் கண்டு
முகம் மட்டுமல்ல உந்தன்
மேனியும் என்பதனை உணர்ந்தேன்...

நெற்றியும் நெற்றியில் இட்டிருந்த
வர்ண பொட்டும்...
பாதமும் பாதம்வரை சூடியிருந்த
வண்ண ஆடையும் - மறையாமல்
இன்றும் செந்தாமரையாய் என்கண்ணுக்குள்...

மதுவும்... அவளும்...


மதுவே!!!
உன்னை நினைத்து விரும்பி
உட்கொள்ளும் வேளையில் நான்
முதலில் என்னை மறக்கின்றேன் - பிறகு
உன்னையும் மறக்கின்றேன்...
ஆனால்!
அவளை விரும்பி உடலுக்குள்
உட்புகுத்தியே இருப்பதனாலோ என்னவோ
என்னையும் உன்னையும் மறந்தும் - அவளை
மட்டும் நினைத்தே துடிக்கின்றேன்...

மதுவும்... மாதுவும்...


மாது உன் மயக்கும்
சொற்களின் போதையில்
மயங்குவதனாலோ... என்னவோ?

மயக்கும் மதுவினை சுயநினைவு
இழக்கும்வரை குடித்தும் உறங்காமல்
உந்தன் நினைவுகளோடு ...

Thursday, August 26, 2010

விஷம்... (மது)


பெண்ணே!
உந்தன் உதடுகள்
முத்தமிட்ட இதழ்கள்
என்பதனாலோ?
மதுவை
தினமும் முத்தமிட்டு
அருந்தியும் மடியாமல் - நான்
இன்றும் உயிரோடு...

(முத்தம், மது(விஷம்) இரண்டும் கற்பனையே)

Wednesday, August 25, 2010

மேகம்...

விண்வெளியான உந்தன் தேகத்தை
வானமாய் ரவிக்கை மறைத்திருக்க
கார்மேகம் வரைப்படமாய் பூத்திருக்க - கண்டு
களித்திடும் மழையை எதிர்பார்த்துக்கொண்டு...

மேகமாய் தோன்றியது உந்தன்
மேனியில் சுரந்திட்ட வியர்வையோ?
அல்லது கேசத்தின் உச்சியிலிருந்து
அருவியாய் வழிந்திட்ட நீரோ?

இவனோ வாட்டியெடுக்கும் கோடையிலும்
இயற்கையாய் மனதிற்குள் ரசித்துக்கொண்டு...

Tuesday, August 24, 2010

என் உறக்கமும்... நீயும்...

புது இடங்களில் பொதுவாக
தூக்கத்தை இழக்கும்நான்
சில நேரங்களில் அசதியில்
தூக்கத்தில் ஆழ்வதுமுண்டு....


உந்தன் மடிமீது
எந்தன் தலைவைத்து
கலக்கம் ஏதுமின்றி
கண்மூடாத போதும்
உந்தன் பாதம்பட்ட
பூமிமீது தலைசாய்ந்ததாலோ?
என்னையறியாமல் கண்மூடி- மறுநாள்
துயில் எழுகின்றேன்....

கனியும் நீயே... விதையும் நீயே...

பெண்ணே!
கனிக்குள் இருக்கும் விதையை
கணித்து எண்ணிவிட முடியும்
ஆனால்!
விதைக்குள் இருக்கும் கனியை
எண்ண முடியாது என்பார்கள்...
அப்படித்தான்!!!
உன்நினைவால் நான்வடிக்கும் கவிதையை
விரல்விட்டு எண்ணிவிட முடியும்
ஆனால்!
கவிதையை வடிக்கதூண்டும் உன்நினைவை
எதனாலும் கணிக்க முடியாது...

Monday, August 23, 2010

மதுவும்... நானும்...

மதுவே!
யாரோ வற்புறுத்தியும் உன்னை தொடவில்லை
ஏதோ துன்புறுத்தியும் உன்னை தொடரவில்லை
அப்படி இருப்பதனால் என்னவோ? நான்
பலர் அறிவுரைத்தும் உன்னை தொடுகின்றேன்
சிலர் அன்புரைத்தும் உன்னை தொடருகின்றேன் - சிலநேரங்களில்
வெறுத்தாலும் விருப்பதோடு உன்னை அருந்திக்கொண்டு...

திருமணநாள் நல்வாழ்த்துகள்

இல்லறம் என்னும் நல்லறத்தில் 20.08.10 அன்று இணைந்த என் உடன்பிறவா சகோதரனும், அன்பு நண்பனுமாகிய தஞ்சை.முரளி என்னும் முரளிதருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்....


விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!
வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்!!!

கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!

மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...
வெயில்போல் வரட்டும் சோகம்
பனியாவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...

மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!

ஆனால், நீவிர்!
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...

Friday, August 20, 2010

ஏக்கமும்... நீயும்...

கற்றது கைமண் அளவு
கல்லாது உலகளவு...
அப்படியிருக்க!!!
எந்தன் இதயமோ ஒருகைபிடியளவு
அதில் கொள்ளாமல் போகின்றது உன்நினைவு
பின் எப்படி?
என் உலகமாகிய உன்னை - நான்
அதில் சுமப்பேன்? ஏக்கங்களோடு...

Thursday, August 19, 2010

கனவும்... நினைவும்...

இன்று!
என்றோ நான்கண்ட
கனவுகள் பலித்து
நிஜமாய் மாறிப்போனது...

உன்னுடன் ஒருநாள்
எழிலாய் என்வாழ்வில் -  தினமும்
நினைவாக மாறிப்போகின்றது...

Wednesday, August 18, 2010

ஆணும்.... பெண்ணும்...

நான் ஆண் என்பதனாலோ!
என் உணர்வுகளையும் அன்பையும்
ஏட்டில் எ(உ)ன்னை வெளியேகா(கொ)ட்டிக்கொண்டு...

நீ பெண் என்பதனாலோ!!
உன் நினைவுகளையும் எண்ணங்களையும் - மனதினில்
பூட்டி எ(உ)ன்னை நீவாட்டிக்கொண்டு...

Tuesday, August 17, 2010

உன்பற்று....


இனிப்பின் இன்சுவை இதுவென்று
தெரிந்திருந்து தின்றபோதும் தெரியாத
சுவையிது எதுவென திகைத்தேன்? - உன்னுடைய
கரம்பற்றி வந்ததெனபின் உணர்ந்தேன்...

Monday, August 16, 2010

உந்தன் நாதமும் கீதமாய்...


பறையிலிருந்து ஒலிக்கும் ஒசைக்கூட
எந்தன் செவிபறையில் கேட்கவில்லை...

ஆனால்!
உந்தன் குரவலையிலிருந்து தோன்றிய
ஹலோ என்னும் மகிழ்ச்சியான
அறிமுக முதல் இன்சொல்லும...

சந்திப்போம் என்னும் இன்றைய
தொடக்கத்திற்கு கடைசியான மறுசொல்லும்
மெல்லிய நுணுக்கமாய் இருந்தாலும்...
துல்லியமாய் எந்தன் செவிகளில் - உந்தன்
நாதமும் கீதமாய் ஒலித்துக்கொண்டே...

Sunday, August 15, 2010

என் சொத்து...


என்னுடைய அசையா சொத்தாய்
உந்தன் அசையும் உதடுகள்...

என்னுடைய பூர்விக சொத்தாய்
அதில் பூக்கும் புன்னகை...

கேசம் என்னுள் ம(ரு)கத்துவமாய்...தொடையில் துளையிட்டு
துளைவழியே குழாயிட்டு
இதயத்தின் அடைப்பினை
அறுவைசிகிச்சை செய்து
அகற்றிடும் மருத்துவம்
ஒருபுறமிருக்க...

உன்வாசம் ஒருமுறை
என்சுவாசம் சென்றதும்
கருங்கூந்தலின் குழலொன்று
சுவாசகுழல் வழியே
இதயத்தின் உள்சென்று
அடைப்பினை அகற்றிய
விந்தை மகத்துவமாய்
மற்றொருபுறம்...

Friday, August 13, 2010

நடைபயணமாய்!!!


அன்றாட வாழ்வில்
பலநேரங்களில் பேருந்தில்
பயணிப்பதையும் தவிர்கின்றேன்!!!
நீங்காத உன்நினைவும்
நீண்டாயுள் பெறமனதுக்குள் 
சு(மந்)வைத்துக்கொண்டே பயணிக்கின்றேன்...

Thursday, August 12, 2010

கேசமும்... நேசமும்...


பெண்களின் கேசத்திற்கு
இயற்கையில் வாசமுண்டா?
எனக்கு தெரியாது...
ஆனால் !
உந்தன் கேசத்திற்கும்
என்மேல் நேசமுண்டு
என்பதனை நன்குணர்ந்தேன்...
காற்றின்வழியே குழலெனும்
உன்விரல்களை  நீட்டி
என்முகத்தினை வருடிய தருணங்களில்...

Wednesday, August 11, 2010

உன் அன்பினாலோ?


உன்இல்லத்திற்குள் நான்
மனிதபிறவியாய் தானே
அடியெடுத்து வைத்தேன்..
பின்பு எவ்வாறு?
வீட்டினுள் உந்தன்
பின்னால் சுற்றும்
வளர்ப்பு நாய்குட்டியாய்
நான் மாறிப்போனேன்...
எல்லாம் உந்தன்
கனிவான அன்பினாலோ?

Tuesday, August 10, 2010

என்னுள் நீ...


ஆயிரம் கனவுகளை மட்டும்
இதயத்திற்குள் தருபவள் என்றால்
எப்பொழுதோ என் தூக்கத்தை
கலைத்து கண்களை விழித்திருப்பேன்...

ஆயிரம் கவிதைகளை எந்தன்
மனதுக்குள் நீதருவதால் என்பதனாலோ
இப்பொழுதும் என் தூக்கத்தை
கலைக்காமல் மூடியகண்களோடு உன் நினைவில்...

Monday, August 9, 2010

சின்ன சின்ன ஆசை...


அகரம் முதல்
அறியாத அவ்வயதில்
விருப்பத்தோடு கற்றதை
அறிந்த இவ்வயதில்
விபரத்தோடு கற்க
ஆசையாய்!!!
முத்தான தமிழை
மீண்டும் உன்னிடம்...

Sunday, August 8, 2010

நீல கனவு....


என்னுடன் நீ
கனவில் நீல(ள)மாய்...
என்னுடன் நடக்கையில்
கடலின் நீல(ள)மாய்...
என்னுடன் பயணிக்கையில்
ஆகாயத்தின் நீல(ள)மாய்...
என்னுடன் பேசுகையில்
பேனாமையின்  நீல(ள)மாய்...

நீ கனவாய்
நீல(ள) கனவாய்...
நீண்ட கனவாய்...
நீங்காத கனவாய்...

Saturday, August 7, 2010

மறுத்தலும்... மறத்தலும்...


உன்னுடன் பேச மறுக்க
நினைக்கும் நேரங்கள்
எந்தன் கைகளில் சூரியனை
பிடித்துக்கொண்டிருக்கும் கணங்களாய்...

உன்னுடன் பேச மறக்க
நினைக்கும் எண்ணங்கள்
எந்தன் வாழ்வில் சூரியனை
கையால் மறைக்கும் நிகழ்வாய்....

Friday, August 6, 2010

நீ... வான்... நிலா...


நீலநிற வானில்
வெண்ணிலா நீந்துவது
இயற்கைதான்! ஆனால்...
நிலவெனும் உன்மேனியில்
சேலை வானமாய் - நீந்திட
உன்வடிவில் கண்டேனே…

Wednesday, August 4, 2010

அழகு தேவதை...


முகமெனும் தடாகத்தில் நீந்தும்
வாலைமீன்களோ உன்னிரு கண்கள்?
இல்லையில்லை!
வானமெனும் ஆகாயத்தில் மிதக்கும்
சூரியசந்திரனே உன்னிரு கண்கள்...

பவளத்தின் மையத்தில் கோர்த்திட்ட
முத்துகளோ உன் புன்சிரிப்பு?
இல்லையில்லை!
தாமரையின் இடையே மலர்ந்திட்ட
முல்லைபூவே உன் புன்சிரிப்பு...

ஆழ்கடலில் மறைந்திருக்கும் வெண்ணிற
சங்கோ உந்தன் கழுத்து?
இல்லையில்லை!
அணிகலன் பொலிவுறசூடும் மெல்லிய
மேடையே உந்தன் கழுத்து...

அங்கமெனும் தங்கத்தில் மிலிர்கின்ற
பொன்னாடையோ உந்தன் பட்டாடை?
இல்லையில்லை!
பகலவனின் பட்டொளியில் பூத்திட்ட
புத்தாடையே உந்தன் பட்டாடை...

கன்னியின் சிரிப்பில் மயங்காத
ஆடவனும் பூமியில் இருக்கலாம்!
ஆனால்!!
கள்ளமற்ற உன்சிரிப்பை ரசிக்காத
உள்ளம் இனிபிறக்கவும் வாய்ப்பில்லை!!!

வாழையடி வாழையென தழைத்து
மண்ணில் நூற்றாண்டுகள் வாழ
இல்லையில்லை!
தமிழ்போல் பல்லாண்டுகள் பூமிதனில்
சிறப்போடு நீடுழிவாழ வாழ்த்துக்கின்றேன்.

Tuesday, August 3, 2010

நூலகம்...


உன்னின் இல்லம் 
மட்டுமல்ல!
என்னின் மனதில்
நீயே!!
நூலகமாய்...!!!

Monday, August 2, 2010

புறக்கணிப்பும்... புலம்பலும்...நீ!
சாதாரண குடிமகனாய்
புறக்கணிக்கப்பட்டிருந்தால்
புதிதான செய்தியல்ல எனக்கு!
முக்கிய பிரமுகராயிருந்தும்
புறக்கணிக்கப்பட்டதுதான்
புதிரான கேள்வியாய் என்னுள்!!
கறுப்பர் இனத்தவர்யென்பதனால்
புறக்கணித்தனரோ - உன்னையென்று
புலம்பலான நிகழ்வாய் என்மனதில்...