Friday, September 30, 2011

நினைவுப்பரிசு...


நீகொடுத்த முத்தம்கூட மனத்துக்குள் வலிக்கிறது
நீஉச்சி முகர்ந்து அன்று கொடுத்ததை - இன்று
நினைத்து கண்மூடி எண்ணி பார்க்கையில்...

Tuesday, September 27, 2011

மலர்... மங்கை... முத்தம்...



கண்ணா!

மலர்ந்து வாடிய மலர்களின்
பூவிதழிலும் (சு)வாசம் பிறக்கின்றது...

மங்கை எந்தன் வறண்ட
செவ்விதழிலும் ரசம் சுரக்கின்றது... 

மன்னன் உந்தன் இதழ்கள் - எங்கள்மீது
முத்தம் பதித்த(ப்ப)தை நினைக்கையில்...

Monday, September 26, 2011

நிழலும்... சுகம் சுகமே...



யாருமற்ற பாதை
நிழற்குடையில்லா நிறுத்தம்
பேருந்துக்கான காத்திருப்பு
கொளுத்தும் வெயில்..

என்னருகில் அவள் நின்றிருக்க
எனக்குள் சுமக்க நினைத்தேன்
என்கனவும் கற்பனையும் நிஜமானது
என்நிழலில் அவள் நின்றநொடியில்...

Sunday, September 25, 2011

வார்த்தை விளையாட்டு


உனக்குள்ளும் நான்
அவளது சொல்...

எனக்குள் நீமட்டும்
இவனது சொல்...

இதயத்தின் வலி
அவளுக்கு புரியவில்லை...

என்னுள் நீமட்டுமில்லை
நீயும் ஒருவளாக
அவனது மறுசொல் - கண்ணீர்
அவளது கண்களில்.

Thursday, September 22, 2011

உண்மையாய் எதுவாகினும்...



இழப்பின் வேதனை
இழந்தவர்களால் மட்டுமே
என்றும் உணரமுடியும்...
ஒருவேளை உன்னாலும்
வாழ்வில் உணரகூடும் - அவர்கள்
இழந்த(ப்ப)து உன்னையென்றால்...

Friday, September 9, 2011

என்னுள் நீ...



எழுதும் காகிதமாய் நான் (என் சிந்தை)
எனையெரிக்கும் தீயாய் நீ (என் கற்பனை)
எரியும் பொருளாய் நான் (என் வார்த்தை)
எரிந்த சாம்பலாய் நீ (என் கவிதை)

Wednesday, September 7, 2011

முரண்




உண்மையை சொல்லி உள்ள(த்)தை
சொல்பவன் ஏமாற்றுகாரன் ஆகின்றான்..

பொய்யை பேசி உல(அ)கத்தை
ஆள்பவன் ந(வ)ல்லவன் ஆகின்றான்...

Friday, September 2, 2011

சு(சோ)கம்...


சாதரணமாய் பேசும்போது
உதாரணமாய் சொல்லிய
கணநேர வார்த்தைகள்கூட
காரணமாய் ஆகிவிடுகின்றது - உன்மனம்
(தோ)ரணமாய் மாறுவதற்கு...

Thursday, September 1, 2011

கனவா? கற்பனையா?



ஆசைதீர கட்டியணைத்து தழுவுகிறேன்
அகம்மகிழ்ந்து போதுமென நினைத்து
கைகளை விடுவிக்கும் தருணம் - மீண்டும்
தீராத வாஞ்சையாக கட்டியணைக்கிறேன்...

உன்னை நான் கட்டியணைப்பது
கனவு என்பதனாலா?
இல்லை...
நான் எழுதுவதுபோல் எல்லாம்
கற்பனை என்பதனாலா?