Monday, February 28, 2011

மீண்டும் மீண்டும் வா....


அன்று!
உன்அன்பால்
என்னுயிரை
சிறகடித்து பறக்கசெய்தாய்

இன்று!
உன்பிரிவால்
உன்னுயிரை
சிதறடித்து இறக்கசெய்கிறாய்...

என்று?
நம்இணைவால்
நம்உயிரை - மீண்டும்
சேர்த்தணைத்து மறக்கசெய்வாய்....

Friday, February 25, 2011

இதயம் ஒரு கண்ணாடி...



என்மனம் ஒரு கண்ணாடி
என்னை நான் பார்க்க
உன்னை காட்டுவதால் அல்ல...

என்மனம் ஒரு கண்ணாடி
துண்டு துண்டாய் உடைந்தாலும்
உன்நினைவுகளை கூட்டுவதால் அல்ல...

உடைந்தாலும் சிதைந்தாலும் அழிந்தாலும்
எத்தனைமுறை மறுசுழற்சி செய்தாலும்
முமுமையாக உபயோகபடும் பொருள்போல்
உன்அன்பினை கா(கூ)ட்டிக்கொண்டே இருப்பதனால்...

Wednesday, February 23, 2011

கனவே... கனவே... கலையாதே....



சிலசமயம் என்னருகினில் நீ!!!

உறங்கிட அன்போடு சாய்கின்றாய் என்தோளினில்
உறங்குவது என்னவோ முதலில் என்னிதயம்
என்கண்களை மூடிமெளனமாய் கூடுவிட்டு கூடுபாய்ந்து
உன்னோடு மணிகணக்கில் கனவில்பேசி மகிழ்ந்துக்கொண்டு...


 நீண்டநாளுக்குபின் என் அலைபேசியில்!!!

ஒளிருகிறது உன்பெயர்
மிளிருகிறது என்கண்கள்
குளிருகிறது என்னிதயம் - எல்லாம்
மறைகிறது கனவாய்...




ஓர்இனிய அதிகாலைபொழுது!!!

மரங்கள் நிறைந்தசாலையில் தனியாக
உன்நினைவுகளை அசைபோட்டு நடந்துசென்றேன்
தலையில் எங்கிருந்தோ வந்துவிழுந்தது
காய்ந்துபோன  உதிர்ந்த இலையொன்று
மரத்தின்மீது சற்றேமிகையாய் கோபம்கொண்டேன்
உன்நினைவுகளை என்னிடமிருந்து பிரித்ததற்கல்ல
மரமே! என்மீது நீவிழுந்திருக்ககூடாதா? - உயிரேபிரிந்து
காற்றில் கலந்திருப்பேன் கனவாயென கனைத்தேன்....

Saturday, February 19, 2011

முத்தே முத்தம்மா.... முத்தமொன்று தரலாமா?


இங்கே நான்
எங்கேயோ நீ
முத்தங்களை நானுனக்கு
சத்தமின்றி வாரியிரைக்க
நித்தம் வேண்டுமென்று
மெளனத்தில் நீயுரைக்க...

உந்தன் நாணத்தில்
தோன்றிய சிவப்பினைக்கண்டு
ரோஜாவின் இதழ்களும் 
வெட்கத்தில் தலைகவிழ்ந்திட...
உன்முகம் மட்டுமென்ன
என்கண்களை பார்த்திடுமோ?...

சிவந்தது உன்கன்னங்கள்
மட்டுமில்லையடி பெண்ணே
என்கரங்களும்தான் எப்படியென்று
என்னுள்நான் எண்ணிக்கொண்டு...

உதட்டில் பூத்திடும்
முத்தமலரை இடைவெளியில்லாமல்
உள்ளங்கையில் முத்தாயேந்தி
உன்னுள்ளதை அடைந்திட
ஊதிவிட்டேன் காற்றினிலே
அதனால் என்னவோ?

உன்சிவந்த கன்னங்களை
என்னிரு கரங்களால்
தாங்கி பிடித்திட
எண்ணி ஏங்கியோ
உதிரமெல்லாம் ஒன்றுகூடி
கைகளையும் துடிக்கசெய்வதனாலோ?

Tuesday, February 15, 2011

சங்கீத ஸ்வரங்கள்....

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா....

என்றால் இன்னும் இருக்கு
நீயென்னை அழைத்த மா,டா,பா
அதுவும் அதில் சேரும்...

ஏழு ஸ்வரங்களுக்கு
எத்தனை பாடல்

என்பதனை போல்

இம்மூன்று எழுத்துகளில்
எழும்ஓசைகளில் உலகத்தின்
இன்பத்தை அடைந்தேன்...


இல்லப்பா....
சாரிடா...
சொல்லுமா....

இவையெல்லாம் என்னோடு
இன்று இல்லாமல்போனாலும்
உள்ளத்தோடு உறவாடிக்கொண்டே...


பிறர்என்னை அழைக்கும்போது
உந்தன் அன்பினையெண்ணி
கிடைக்கவேண்டி ஏங்குகிறேன்....

என்றாவது ஒருநாள்
எந்தன் அன்பினை
நீயறிவாயென்ற உணர்வோடு...

Monday, February 7, 2011

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?


















அன்பே!
அம்மா அப்பா இல்லாதவர்
மட்டும் அனாதை இல்லை
என்னோடும் எந்தன் அருகினில்
நீயில்லாமல் இன்று நானும்...





















கண்ணம்மா!
அன்பு செலுத்த உறவுகளென்று
ஆயிரம் பூமியில் இருந்தும்
அனாதையாய் நான் இங்கே…
உந்தன் அன்பு கிடைக்காமல்

                                            















பெண்ணே!
வளர்ப்பு அன்னை இருந்தாலும்
பெற்றெடுத்த தாய் போன்று
வாழ்வில் வராதது என்பதுபோல்
உன்அன்பை எண்ணியே வாழ்ந்துக்கொண்டு...





















நான்!
மண்ணில் பிறந்திட்ட சமயம்
மனதிலும் அனாதை இல்லை
விண்ணை அடையும் பொழுதும் - அப்படியிருக்க
விரும்பியே உனக்காக காத்துக்கொண்டு...

Saturday, February 5, 2011

வாழ்வே மாயம் எந்தன் வாழ்வே மாயம்...





இரத்ததின் சுவை இன்னதென்று தெரியாது
சிறுவயதில் பென்சில் சீவும்போது இடறவே
சீவியவிரலில் வடிந்த இரத்தத்தை உறிந்தேன்
அதன் சுவையென உவர்ப்பென அறிந்தேன்
இன்றுஏனோ இரத்தவாந்தி எடுத்தபோது சிறிது
அதனை தொண்டையில் விழுங்கிய சமயம்
இரத்தத்தின் சுவை இனிப்பென உணர்ந்தேன்
காரணம் என்உதிரத்தில் கலந்திருப்பது நீயல்லவா?

புகைபிடிக்கும் பழக்கமும் கிடையாது
புகையிலை போடுவதும் கிடையாது
அன்றாடம் குடிப்பதும் கிடையாது
இருப்பினும் பின்எப்படியோ புற்றுநோய்?
இவனுக்கு எவ்வாறென வைத்தியம்
பார்த்த மருத்துவனுக்கும் ஆச்சரியம்
வியாதிக்கு மூலகாரணம் அறியாமல்...
காரணம் என்உதிரத்தில் கலந்திருப்பது நீயல்லவா?


உன்னோடு பழகியதாலும்
உன்நினைவுகளை அசைபோடுவதாலும்
உன்இதழ்ரசம் அருந்தியதாலும்
என்உதிரத்தில் கலந்துநீ...
நம்மில் நிகழ்ந்திட்ட சிலநிகழ்வுகள் பெருகி
பல்லாயிரமாக என்னை உருக்கும் செல்லாய்
என்னோடு ஒன்றாக மாயையாய் இணைந்திருப்பதை - எவ்வாறு
மருத்துவனும் அறியமுடியும் அறிவியல் நுட்பத்தால்...

Wednesday, February 2, 2011

காதலென்ன கண்ணாம்பூச்சி ஆட்டமா?





நம்காதல் நாணயம் போன்றதோ?
ஒருபக்கம் நீ பூவாக
மறுபக்கம் நான் தலையாக
இருவரும் ஒருவராய் இணைந்தே
இருப்பினும் ஒருவரையொருவர் காணாமல் - நம்மில்
அன்பும் என்றும் குறையாமல்...




உலகத்தின் நிகழ்வுகளை கணினியில் காண்கிறேன்
எந்தன் கணினியில் உன்னை தேடுகிறேன்
எந்தன் கண்ணில் உன்னை பார்க்கிறேன்
உந்தன் கண்ணிலும் என்னை பார்க்கும்
நாளுக்காக தினம் காத்து இருக்கிறேன் - அதில்
உலகத்தை கண்டு மகிழும் ஏக்கத்தில்...




உன்தரிசனம் வேண்டி இறைவன்
சன்னதிக்கு தினம் வருகிறேன்
உன்னை மட்டும் காணவருவதனாலா
என்மேல் சாமிக்கும் கோபம்? - இன்றும்
உன்பார்வை என்மீது படவிடாமல்.

Tuesday, February 1, 2011

குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா???



பதிவுசெய்யப்பட்ட உன்குரல்
அழைப்புமணியாய் செல்போனில்
என்பையிலும் என்கையிலும்
மெல்ல சிணுங்குபோதெல்லாம்
இரவினிலும் குயிலோசையை
கேட்டு மகிழ்கிறேன்…

காணாதது குயில்முகம்
மட்டுமில்லை உன்முகமும்தான்
குயில்பாட்டாய் உன்குரல்
நித்தம்கேட்டால் போதுமடி
உன்முகமும் தேவையில்லையடி
நான்பூமியில் வாழ்வதற்கு
உறவென்ற சொல்லில்
என்ஜென்மங்களும் நீளுமடி...