Tuesday, November 29, 2011

வாழ்க்கை...வாழ்க்கை ஒரு வியப்புகுறிதான்!
வியப்புகுறி போல்பலர் நிமிர்ந்து
நிற்க ஆசையில் முற்படுகிறார்கள்
ஆனால்
வினாகுறி போல்சிலர் குனிந்து - ஏனோ
நிற்க முடியாமல் வளைகிறார்கள்???

வாழ்க்கையில்,
ஒரேயொரு வியப்புகுறி வருகிறது
ஆனால்...
பல வினாகுறிகள் ஒன்றன்பின்
ஒன்றாய் தொற்றி உடன்வந்து - மனதில்
குழப்பத்தை மட்டும் பாவிக்கின்றது...

வினாக்களை கண்டு தொ(கு)லைந்துபோகாமல்
வியக்கும் வகையில் உயர்த்திக்கொள்ள
விருவிருப்பாக வாழ்க்கையென்னும் ஓடுகளத்தில் - பலரும்
விரைந்துசெல்ல ஆயுத்தபடுத்திக்கொண்டு அதில்நானும்...

Tuesday, November 22, 2011

அவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (1)விண்ணில் இருக்கும் வானம்
பார்த்து கண் மயங்காதோர்?
மண்ணில் உண்டெனில் ஆச்சர்யம்தான்!!!
வஞ்சி உன்னை கண்டும்
நெஞ்சம் வாடோதோர் இங்கே
மண்ணில் உண்டெனில் ஆச்சர்யம்தான்!!!
வஞ்சியும் வானமும் கிட்டதட்ட
ன்றென கூட சொல்லலாம்!

மேகம்!!! நட்சத்திரம்!!! நிலவு!!!
வண்ணங்கள் என்றுபல விந்தைகள்
நிறைந்த எந்தன் இரவுவானமே
உனக்கும் அவள்தான் போட்டி...

வானில் இவைகளை கொண்டும்
லஜாலங்கள் செய்தும் என்னையும்
என்கண்களையும் கட்டியும் போடுகின்றாய்
பார்ப்பவர்களையும் வியக்க வைக்கிறாய்...

மேகம் மூடாத வானம்
நட்சத்திரம் நிறையாத வானம்
நிலவு இல்லாத வானம்
வண்ணங்கள் நிரம்பாத வானம்
இப்படி பலநிலைகள் இருந்தாலும்
எப்படியும் காணும் கண்களுக்கு
நீலவானமாய் ரசிக்க தெரிவதுபோல
அவளும் உனக்கு போட்டியாய்....

அவள் யாரும் இல்லை
எந்தன் காதல் தேவதைதான்
தொலைத்தூரத்தில் நீயிருந்து என்னை
மயக்கி சொக்க வைக்கிறாய்...
அவளோ நான் கண்மூட
என்முன் வந்து செல்கிறாள்...

Friday, November 18, 2011

மீண்டு(ம்) உயிர்வாழ்வேன்....ன் இதயத்தின் ஓரத்தில்
ஒரு மூளையில் உனக்கெனவும்
சிறு இடம் ஒதுக்கிவைக்கிறேன்
ன்னை விட்டு நீயும்
சென்ற பின்னும் அப்பகுதியை
வெட்டி எறிந்தும் உயிர்வாழ
என்னை நானே மீண்டும்
எனக்குள் ஆயுத்த படுத்திக்கொள்கிறேன்.

Thursday, November 17, 2011

எப்படி உணர்த்துவாயோ?...


எந்தன் உதடுகள்
கொடுக்கும் சத்தத்தை
வாங்கி முத்தமாக
கொடுக்க தெரிந்த
அலைபேசியே!!!
கண்கள் சிந்தும்
கண்ணீர் துளிகளை
எப்படி உணர்த்துவாயோ?

Wednesday, November 16, 2011

சொல்லிழந்து...

உந்தன் அபிப்பிராயம்
என்னவென்று கேட்டாய்?
பேசும் திறனிருந்தும்
பேசாமுடியா ஊமையாய்
உந்தன் முன்னால்
என்னுடைய நிலைமை
இதுவென்று சொல்லமுடியாமல்!!!
இனிப்புக்குள் சிக்கி
வெளிவரும் எறும்பாய்
நீருக்குள் விழுந்து
கரைசேரும் எறும்பாய்
பேசும் மொழியற்று
பயம்கூடிய உணர்வுடன் - எதிர்கால
வாழ்க்கையை நோக்கி நான்...

Tuesday, November 15, 2011

என் நிழலும்... நிலவும்... நீயே...யார்
அறியக்கூடும்?
என்னை எனக்கு பிடிக்கவில்லை
காரணம் நான் அறியேன்
ஆனால்!
எந்தன் நிழலையோ எனக்கு
மிகவும் பிடித்து இருக்கிறது
ஏனெனில்?
என்னையே எனக்கு அழகாய்
எந்தன் கண்களுக்குள் காட்டுகிறது...
காரணம்?
ிழலின் உருவத்திலும் நீதான்
நிழல்தந்த முழுமதியும் நீதான்...

Monday, November 14, 2011

உன்னை நினைப்பதுமட்டும்...

 
உடலெல்லாம் சுட்டும் கொள்(ல்)கிறேன்
சுட்ட இடமெல்லாம் புண்ணாகி
வடுக்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது
உன்னை நினைப்பதுமட்டும் குறையவில்லை

பசித்தும் பட்டினியாய் கிடக்கிறேன்
சாப்பிடாமல் குடலெல்லாம் அரித்து
வயிறு மட்டுமே வலிக்கிறது
உன்னை நினைப்பதுமட்டும் சலிக்கவில்லை

உன்னைமறக்க மதுவை குடிக்கிறேன்
குடித்துவிட்டு வாந்தியும் எடுக்கிறேன்
இரத்தம் வருவதுகூட நின்றுபோகிறது
உன்னை நினைப்பதுமட்டும் நிற்கவில்லை...

போதை பொருளையும் எடுக்கிறேன்
எங்கோ ஆகாயத்தில் பறக்கிறேன்
மயக்கத்தில் என்னைகூட மறந்துபோகிறது
உன்னை நினைப்பதுமட்டும் மறக்கவில்லை...

பார்வை பார்ப்பதுயாவும் நீயாகிறாய்
கண்ணை பிய்த்துஎறிய நினைக்கிறேன்
உள்ளமும் உணர்வுமாய் என்னுள் - உயிராகினாய் 
அதைமட்டும் விடமுடியாமல் தவிக்கிறேன்....

Saturday, November 12, 2011

தோழியே உன்னோடு நான்...


அன்பே....

மரங்கள் நிறைந்த
அடர்ந்த சுந்தரவனம்
யாருமே இல்லாத
தனிமையான பாதை

பூக்கள் நிறைந்த
அழகிய நந்தவனம்
ஒருபாதத்திற்கு மறுபாதம்
மட்டும் துணையாய்...

இராமாயணத்தில் வரும்
ஒர் அசோகவனமாய்
இதுபோன்று கண்டிட
நீகேட்கும் இந்தஇடம்

அங்கே..........

நடந்து காலும்
வலிக்கும் வரை
உந்தன் நடைபயணம்
இனிதாய் தொடரட்டும்

கேட்டு மனம்
மயங்கும் வரை
இன்னிசை பாடல்
இன்பமாய் ஒலிக்கட்டும்

அழுது நெஞ்சம்
அடங்கும் வரை
உரக்க கதறல்
இயல்பாய் இருக்கட்டும்

உடல் சோர்வும்
நீங்கும் வரை
அமர்ந்து கண்மூடி
இதமாய் இளைபாறட்டும்.

சட்டென்று மழை
உன்மீது கொட்டட்டும்
கண்ணீரின் தடயங்கள்
அதனோடு மறையட்டும்

பனிமூட்டம் உன்னை
மேகமாய் சூழலட்டும்
உன்சோகங்கள் யாவும்
அதனில் மறத்துபோகட்டும்

ஆனால்.....

இவையாவும் நிகழும் சமயம்
உந்தன் அருகினில் ஆறுதலாய்
இல்லாமல் நான் போகலாம்
உந்தன் மன விருப்பத்தால்...

நீசென்ற பாதையும் நானே!
நீமகிழ்ந்த பாடலும் நானே!
நீசிந்திய கண்ணீரும் நானே!
நீயெடுத்த ஓய்வும் நானே!!

நீநனைந்த துளியும் நானே!
நீசிலிர்த்த குளிரும் நானே!
நீரசிக்கும் வார்த்தையும் நானே!
உன்னோடு என்றென்றும் நானே!!

மகாபாரதத்தில் வரும்
ஓர் பிருந்தாவனமாய்
உன்வாழ்க்கை மாயையாய் - விரைவில்
நீசிறக்க மாறட்டும்...