Thursday, March 19, 2009

பார்க்கின்றாய் என்றுதான்
நான் பார்த்தேன்
பார்க்கவில்லை என்றபிறகு
இனி பார்க்கமாட்டேன்.

நினைக்கின்றாய் என்றுதான்
நான் நினைத்தேன்
நினைக்கவில்லை என்றபிறகு
என் நினைவிழக்கமாட்டேன்.
என் கண்ணருகில்நீ இருந்தபோது
நான் கொண்டமோகம் தெரியவில்லை.

என் கண்ணைவிட்டுநீ பிரியும்போது
-தான் ஏதோதாகம் புரிக்கின்றது.

நீ!!!

என்,
இரத்தத்தில் ஜீவனாக ஓடுபவள் நீ
இதயத்தில் ஓசையாக துடிப்பவள் நீ
உடலில் உயிராக ஒட்டியிருப்பவள் நீ - வாழ்க்கை
சக்கரத்தில் அச்சாணியாக சுழல்பவள் நீ.

என்,
கடிகாரத்தில் முள்ளாக ஓடுபவள் நீ
கண்ணில் கருமணியாக மிதப்பவள் நீ
வானில் மேகமாக இணைந்தவள் நீ - என்னுள்
வாழ்க்கையில் காதலியாக கலந்திருப்பவள் நீ.
கண்டேன் கண்களை
கொண்டேன் காதலை...

ஏங்கினேன் அன்பிற்கு
தயங்கினேன் சொல்வதற்கு...

விரும்புகின்றேன் நல்ல பதிலுக்கு
காத்திருப்பேன் நாளை உனக்கு.
வீணையில் தோன்றும் நாதம்
காதுக்கு கேட்க இனிது !

மண்ணில் தோன்றும் மரம்
காலுக்கு கோடையில் இனிது !

கண்ணில் தோன்றும் முகம்
பார்வைக்கு ரசிக்க அழகு !

நெஞ்சில் தோன்றும் முகம்
வாழ்க்கைக்கு துணையாக அழகு.

விடியல்

தேடினேன் விடியலை
இரவில் கண்ட அவள் முகத்தை
பகலில் காண தேடினேன்
விடியலை...
விடியலே ! விமோச்சனம் இல்லை.
ளவேனிற் ஊற்றே
ந்தன காற்றே !!
பூமாது கொடியே
ரகத வீணையே !!
திங்கள் முகத்தவளே
என்னை கவர்ந்தவளே !!
உன்னை மணப்பேன்
என்றும் இனியவளே(ன்) !!

முத்தம்


வார்த்தையில் புனிதமில்லை - அனுபவிக்காவிட்டால்
வாழ்க்கை அர்த்தமில்லை.

பார்க்கதான் அசுத்தம் - தான்
கொடுத்தால் சுத்தம்.

ரத்தமின்றி யுத்தமொன்று தொடுத்தேன்.
சத்தமின்றி நித்தம்பல கொடுத்தேன்.

கேட்டு கிடைக்காவிட்டால் வருத்தம்
கேட்காமல் கிடைத்துவிட்டால் ஆனந்தம்...

Saturday, March 7, 2009

ஒப்புக்கொள்வாயா?

வானவில் வானத்திற்கு
சொந்தம் ஒப்புக்கொள்கிறேன்!
காண்பவர் கண்ணுக்கும்
சொந்தம் ஒப்புக்கொள்!!

மழைநீர் மண்ணுக்கு
சொந்தம் ஒப்புக்கொள்கிறேன்!
அனுபவிக்க ஆருயிருக்கும்
சொந்தம் ஒப்புக்கொள்!!

வானம்பகலில் சூரியனுக்கு
சொந்தம் ஒப்புக்கொள்கிறேன்!
இரவில் நிலவுக்கும்
சொந்தம் ஒப்புக்கொள்!!

என்மனது உனக்குதான்
சொந்தம் ஒப்புக்கொள்கிறேன்!
உன்மனதும் எனக்குதான்
சொந்தம் ஒப்புக்கொள்!!

காதல் மங்கைக்கு...

என் விழிகளை மயக்கும் அழகே!
உன் தேகத்தை தீண்ட விருப்பம் - அதற்குமுன்
உள்ளத்தில் கொடுக்கவேண்டும் ஓர்இடம்
அதற்காக காத்திருப்பேன் அனுதினம்...

என் இரத்தத்தில் இயங்கும் ஜீவனே !
உன் உதிரத்தில் கலக்க விருப்பம் - அதற்குமுன்
கழுத்தில் கட்டவேண்டும் தாலி
அதுவரைஎன் கரங்களுக்கு ஓர்வேலி...

மீண்டும் காதலா?

மறந்துவிட்ட மனதில்
மீண்டும் மகிழ்ச்சியா ?
வேண்டாம் பெண்ணே
வேண்டாம் காதல்...

காதல் என்னவென்று தெரியாமல்
கால் வைத்துவிட்டு தவித்ததும்,
பிரிவு என்ருமென தெரிந்தும்
அன்பு வைத்துவிட்டு வருந்துவதும்,
வேண்டாம் பெண்ணே
வேண்டாம் காதல்...

ஒருமுறை உயிரைவிட்டு விட்டு
வெறும் உடலோடு வாழ்கின்றேன்
மிஞ்சியிருக்கும் உடலையும்
மீண்டும் உருகுலைக்காதே!
வேண்டாம் பெண்ணே
வேண்டாம் காதல்.
பெண்ணே !
உன் இதழில் பிறக்கும்
மெல்ல சிரிப்பு ...
என் இதயத்தின் பகுதியில்
மெல்ல அரிப்பு ...
உன் பதிலில் காட்டியது
மௌனம் ...
என் மனதில் கட்டியது
சலனம் ...
உன் உணர்வில் ஒன்று
வெட்கம் ...
என் உடலில் இன்றில்லை
தூக்கம் ....

முதல் கவிதை...

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...

உள்ளமும் உதடும்

காதலியே!
உள்ளங்கள் அழுதாலும்
உதடுகள் சிரிக்கட்டும் ...

பெண்ணே!

உதட்டில் மட்டும் சாயம் பூசிவா
உள்ளத்திலும் வேண்டாம்.
உதட்டில் நாளை சாயம் மாற்றிவிடுவாய்
உள்ளத்தில் என்னையும் சாயம்போல் ஆகிவிடாதே!!!

என்னுயிர் காதலிக்கு....

என்னுயிர் காதலிக்கு....
நான் இறக்கும்வரை
நீ இருக்கவேண்டும்
நீ இருக்கும்வரை
என் இதயமிருக்கும்
என் இதயமிருக்கும்வரை
நான் இருப்பேன்
நான் இருக்கும்வரை
உன் நினைவோடு இருப்பேன்!!!

Wednesday, March 4, 2009

என்னுயிர் தோழர்களுக்கு!!!




Tuesday, March 3, 2009

நானும்... மரமும்...

பேருந்து பயணத்தில்...

என்கண்முன்னே வந்தது காய்ந்தமரம்
தன்னாலேவந்து நின்றது என்மனம்!

நான் நினைத்தேன் மரம் சொல்வதாக,
உயிருடன் இல்லை - ஆனால் நிற்கின்றேனென்று!

பிறகுதான் எனக்கு புரிந்தது
மரம்மட்டுமில்லை சொன்னது என்மனம் கூட!

ஆம்! நானும் அப்படித்தான்
அவள் இல்லாமல் வெறும் நினைவோடு வாழ்கின்றேன்.

Sunday, March 1, 2009

பௌர்ணமி

நிலாப்பெண்ணே !
மாதத்தில் ஒருமுறைதான் முழுதாய் தோன்றி
வானத்தில் பிரகாசிக்கின்றாய் இரவில் - ஆனால்
என்னவளின் முகத்தில் கண்டேன்
என்னை காணும்பொழுதெல்லாம் உன்னை...

மாலையில் மாறுமோ?

பூக்கள் பூத்து மலர்வதை கண்டிருப்பாய், என்றாவது
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டிருப்பாயா?
ஆம் கண்டேன்
பட்டாம்பூச்சி பறக்கும் என்னவளின் முகத்தில்
புன்சிரிப்பு இல்லாத இதழ்களை - இன்றுகாலையில்...