Friday, July 22, 2011

என் தேவனே...


உன்னைதான் அணைக்கமுடியவில்லை...
உன்னைநான் சுமக்கமுடியவில்லை...

நீசுமக்கும் கல்லினையாவது
நான் அணைத்துக்கொள்கிறேன்...

நான்சுமக்கும் வலிகளைநீக்கிட!!!
என்னைநீயும் அரவணைப்பாயோ?????????

Wednesday, July 20, 2011

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...


உலகில் எத்தனையோ
பூக்கள் வகையுண்டு...
அதுபோல்
எனக்கும் எவ்வளவோ
நட்பூக்கள் உண்டு

எல்லாமே ஒன்றுக்கொன்று
சற்றே வேறுபட்டு...
அதுபோல
எல்லாருமே ஒருவருக்கொருவர்
ஏதோ வித்தியாசபட்டு

ஒருசில பூக்களுக்கு
மட்டுமே தனிச்சிறப்புண்டு
அதுபோல
ஒருசில உறவுகள்
மட்டுமே கிடைப்பதுண்டு

அப்படியெனக்கு கிடைத்து
இன்று பிறந்தநாள்
கொண்டாடும் என்னுயிர்
தோழி உன்னைநான்
பல்லாண்டு வாழ்கயென
வாழ்த்துவதில் பெருமிதம்கொள்கிறேன்...

இன்று இதுவரை
இருக்கும் இன்பங்கள்
யாவும் பலநூறுபெருகி
கவலைகளெல்லாம் கரைந்தோடி
காணாமல்போக இறைவனை
கண்மூடி வேண்டுகிறேன்...

தோழி செளம்யாவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

Sunday, July 17, 2011

என்விழிகள் மூடிக்கொண்டு


படுக்கைக்கு அருகினில்
அலைபேசி வைத்து
தூங்கினால் கூட
உடல்நலத்திற்கு கேடாம்...

அப்படியிருக்க...
படுக்கும்முன் உன்னோடு
மணிகணக்கில் பேசுகிறேன்...
என்னிதயத்தின் மீதே
அலைபேசியை அணைத்து
நித்தம் துயில்கொள்கிறேன்
எப்படி சாத்தியமோ?
நீதராத வெப்பத்தையும்
அலைபேசி தருவதனாலா?
இல்லை..
அலைபேசியின் கதிர்வீச்சும்
அதனில் பதிவுசெய்யபட்ட
உன்குரலும் தாலாட்டாய்
என்னை சேர்வதனாலா?
என்விழிகள் மூடிக்கொண்டு...

Friday, July 15, 2011

பெளர்ணமி நிலவே!!! (2)


அழகு பெளர்ணமிநிலவே
நீவானத்திற்கு சொந்தம்...

நிரந்தரமாய் உன்னைகாண
நீவரும் வழியில்
நட்சத்திர பட்டாளங்கள்
நித்தம் காத்துகொண்டு...

மேககூட்டங்கள் கண்களைமூடி
உன்பாதம்நோக்கி தவழ்ந்துகொண்டு
உலகத்தின் ஒருமூலையிலிருந்து
மற்றொரு மூலையைநோக்கி

மனிதஉறவுகள் மனம்திறந்து
உன்முகம் பார்த்துரசித்து
வானத்தை ஏறேடுத்து
விழியில்கண்டு வியந்துகொண்டு...

நிலாப்பெண்ணே!
உனக்கும்தான் என்மீது
காதல்ஆசை வந்ததோ?
மண்ணில் தோன்றினாய்
ஆணாய் நிலைமாறினாய்
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றாய்...
என்னையே வட்டமிடுகின்றாய்.

ஆனால்..
பூவாய் நானும்
முற்றிலும் உருமாறினேன்...
உன்னை எனக்குள்
கவர்ந்து இழுத்தேன்..

என்ன ஓர்வியப்பு
வண்ணத்துபூச்சி மலரில்
தேனை குடிக்கவில்லை..
மலராகிய நானே
உன்னிடம் ருசித்துகொண்டு...

Wednesday, July 13, 2011

இரயில் பயணத்தில் அவள்.... (4)

கன்னத்தில் கைவைத்து நீபார்க்கிறாய்
கள்ளமில்லாமல் பிறரோடு பேசுகிறாய்
கணத்தில் என்மீதுவிழும் இந்நிகழ்வில் - நானே
கப்பல் கவிழ்ந்ததுபோல் மூழ்கிபோகிறேன்

கண்ணிற்கும் நெற்றிக்கும் இடையே
வரைப்படத்தில் வரையபடும் நீர்நிலை
வரைகோடுகளாய் இமைகள் பிரித்துகொண்டு - அவையே 
உன்னிடம் என்னை இணைத்துகொண்டு...

உந்தன் நொடிபொழுது கண்சிமிட்டலில்
எந்தன் உலகம் இருண்டுபோகிறது...
உந்தன் சிலவினாடி பார்வையில்
எந்தன் இதயம் நின்றுபோகிறது...

உலகமொரு மிகச்சிறிய உருண்டைதான்
உன்முகத்தை பார்த்தபின்பு மீண்டுமறிந்தேன்
எங்கோ அதில்என்னை தொலைத்துவிட்டு
என்னைநான் தேடிக்கொண்டே காணாமல்...

(அவளுடைய நிறுத்தத்தில் அவள் இறங்கி சென்றுவிட நான்மட்டும் அவள் அமர்ந்த இருக்கையை பார்த்துகொண்டே...)

Tuesday, July 12, 2011

இரயில் பயணத்தில் அவள்.... (3)


காற்றும் உன்மீது கொண்ட
மோகத்தில் கூந்தல் முடியை
முகத்தில் அலைபாய செய்கிறது...

பறக்கும் ஒற்றைக்குழலை உன்னிரு
விரல்களோ பிடித்து பின்னந்தலைக்குள்
மெல்ல மெல்ல சிறைபிடிக்கின்றது...

என்கண்களோ அதனை மனத்துக்குள் 
மின்னலைபோல் தொடர்ந்து படம்பிடித்து
ஒருபுறம் சேமித்து அடைக்கின்றது...

என்கைகளோ உன்னை ஏட்டில்வரைய
கவிதையாய் வர்ணிக்க வார்த்தைகிடங்கில்
மறுபுறம் சேமிப்பின்றி தவிக்கின்றது...

Monday, July 11, 2011

இரயில் பயணத்தில் அவள்.... (2)




திராட்சை கொடியில்
கொத்து கொத்தாய்தான்
திராட்சை கனிகள்
காய்த்து தொங்கும்...

கண்களென்னும் அகன்ற
விண்ணில் அதிசயமாய்
வானில் மிதக்கும்
ஒற்றைநிலவாய் கருவிழிகள்...

வெள்ளைவானம் கறுப்புநிலா
ஆனாலும் ஒளிர்கின்றது
பகல்பொழுது என்றபோதினும் - நான்
அதனாலும் ரசித்துகொண்டு...

Wednesday, July 6, 2011

இரயில் பயணத்தில் அவள்.... (1)


கடலில் பிறக்கும்
ஒவ்வொரு சிப்பிக்குள்ளும்
ஒரேயொரு முத்துதான்
இருக்க இயலும்...

உன்னிதழ் என்னும்
சிப்பியோ ஒவ்வொருமுறை
திறக்கும் போது
எத்தனையோ முத்துகள்...

நிலத்தில் சிந்தவில்லை
ஆனாலும் ஒலிக்கின்றது
கையில் ஏந்தமுடியவில்லை - நான்
அதனாலும் வியந்துகொண்டு...