Tuesday, March 30, 2010

ஏழை...


இறைவனின் படைப்பில்
எழுத்துப்பிழையாக
இங்கே நாங்கள்
ஏழைப்பிள்ளைகள்...

ஏழையில் சிரிப்பில்
இறைவனை காண்போம்
என்றுசொல்லிய மனிதா
இப்படிதான் நீ காண்பதா?
என்னுடைய ஏழ்மையின்
நிலையை பார்த்தும்
ஏளனம் செய்தும்
இறைவனை காண்கின்றாயோ?

Monday, March 29, 2010

குப்பைத்தொட்டி...


பத்துமாதங்கள் சுமக்காமலே
பத்து நொடிக்குள்ளே
பிள்ளை பெற்றெடுக்கும்
நவீன அன்னையே...
உன்னின் பாக்கியமும்
சிலருக்கு கிடைப்பதில்லை...
ஆனால் உனக்கு
கிடைத்த பாக்கியமும்
நிலைக்காமால் போவதேன்?
உன்னிடமிருந்து நான் பறிக்கப்பட்டு...

Sunday, March 28, 2010

கேட்கின்றேன்...

கேட்கின்றேன்...
சில்லறை போல்
சிந்தும் உந்தன் சிரிப்பினை...
கேட்கின்றேன்...
கல்லறையின் உள்
புதைந்தும் அதன் ஒலிப்பினை...

Saturday, March 27, 2010

கர்ப்பமும்... துடிப்பும்...


சுமக்க மனமெண்ணியும்
சுமக்க முடியாமால்
நான்...
செய்வதறியாது
என் கரங்களும்
என் இதயமும்
உன்னை நினைத்து
துடித்துக்கொண்டே...

Friday, March 26, 2010

கண் சிமிட்டும்... முத்தமும்...




















காதலியே!
உந்தன் இமைகள்
பட்டாம்பூச்சியாய் துடிப்பது
உன் இதழ்களின் தேனை
மீண்டும் அருந்த வா - என்று
என்னை அழைத்தா?
இல்லை!
பட்டாம்பூச்சி போன்ற
உன்னிடமிருந்தே தேனை
எடுத்ததை வியந்தா?

Thursday, March 25, 2010

இதயதுடிப்பு...



இயல்பாய் துடிக்கும்
எந்தன் இதயமும்
உன்னை கண்டதும்
துடித்தது இருமடங்கு
சில நேரங்களில்...
இருமடங்காய் துடிக்கும்
உந்தன் இமைகண்டு
எந்தன் இதயமும்
துடித்ததடி பலமடங்கு.
 

Wednesday, March 24, 2010

விரலிடை...


இறைவா!
விரல்களுக்கிடையே
இடைவெளியை கொடுத்தாயே?
அவளது
விரலிடையை நிரப்பிட
என்விரல்களையும் படைத்தாயோ?



Tuesday, March 23, 2010

சுகம்...


உன் வழியில் துணையாக
ஆனால்
உன் நிழலுக்கு குடையாக
ஆனாலும்
பின் தொடர்ந்தே நான்
அதிலும் ஒர் சுகம் ...
இந்நிலை என்று மாறும்?
இதுபோல் என்று சேரும்?
நினைத்து பார்கையிலேயே
நெஞ்சுக்குள் ஒர் சுகம்...

Monday, March 22, 2010

நகமும் சோகமும்...




அவளின் விரல்களுக்கு
நீயோ மணிமகுடம்.
ஆனால்...
நானோ உன்னை வளர்பதற்கு
மனமில்லாமல் பொழுதும் கடிக்கின்றேன்...
நீயோ! அவளின் நினைவைபோல்
மலர்ந்துகொண்டே இருக்கின்றாயே?

Sunday, March 21, 2010

நகம் சொல்லும் காதல்...



என்னவனின் காதலியே!
அவன் என்னை தினமும்
இன்றும் அழிப்பதும் இழப்பதும்
நான் மீண்டும் வளர்ந்திடுவேன் என்ற
நம்பிக்கையில் மட்டுமில்லையடி பெண்ணே...
உன்னின் பார்வையும் அன்பும்
இன்றாவது அவனுக்கு கிடைத்திடும்
என்ற நம்பிக்கையிலும்தானடி கண்ணே...
அவன் அழிப்பது என்னை மட்டுமில்லையடி...
அவனும் அழிந்து கொண்டு உனக்காக...

Saturday, March 20, 2010

நான்... காதல்... சமூகம்...



நண்பன்...
என்னிடம் கேட்ட வினா
சமூகத்தை பற்றியும்
சிறிது சிந்திக்கின்றாயே
கவிதையில் வடிக்கின்றாயே
காதலில் தோற்றதனாலோ?
என்றான்...
என் பதிலையளித்தது பேனா...

ஆமாம்...
நான்
காதலில் தோற்றதனால் மட்டுமல்ல
காதலை சற்று மறந்ததாலும்
ஆனால்
சமூகத்தின் பார்வையென்பது
என்மனதில் இன்று தோன்றியதல்ல...

நான்...
எரிந்த சாம்பலிருந்து பிறக்கும்
பீனிக்ஸ் பறவை போன்று
பிரிந்த காதலின் மடிவிலிருந்தும்
உயிர் பெற்று இன்று....

நான்...
இருகூறாய் பிரித்தாலும் ஈருயிராய்
உயிர் பெரும் மண்புழு போன்று
இதயம் இரண்டாக பிளந்திருந்தாலும்
உயிர் பெற்று இன்று...

நான்...
அணுகுண்டு வீசினாலும் சாகாது
நடமாடும் கரப்பான்பூச்சி போன்று
அவளின் நினைவில் என்றென்றும்
உயிர் பெற்று இன்று...

நம் வாழ்வின் ஓர் அங்கம் காதல்
சமூகத்தின் ஓர் அங்கம் வாழ்வு
என்பதனையும் நினைவிற்கொண்டு...
காதலின் முடிவு
வாழ்வின் முடிவல்ல
என்பதனை உணர்ந்து
நம் வாழ்வு என்பது சமூகத்தின்
பிற நிகழ்வோடுகளும் பிணைத்து
மகிழ்ச்சி அடையும் வழிதன்னை
எண்ணிடுவோம் வாழ்ந்திடுவோம்.

(காதலில் பிரிந்ததால் தான் நான் சமூகத்தை பற்றி சிந்திக்கின்றேன்  என்றில்லாமல்.  எப்பொழுதும் நாம் பிறந்த சமூகத்தை காதலிப்போம், சமுதாயத்தை நிலைநிறுத்துவோம்.)

Friday, March 19, 2010

ஆடை...


சிலபேர்  என்னை கலைத்தும்
சிலபேர்  என்னை களைந்தும்
சிலபேர்  என்னை மறைத்தும்
சிலபேர்  என்னை குறைத்தும்
சிலபேர்  என்னை இழந்தும்
சிலபேர்  என்னை துறந்தும்  
இருப்பதனால் வெட்கப்பட்டு 
உங்கள் முன்னால்
வருவதற்கு நாணம்கொண்டு
கண்ணுக்கு தெரியாமல் நான்...

Thursday, March 18, 2010

பரிதாபம் - ஏழ்மை...










புதிதாய் கட்டும்வீட்டை
பார்த்து பரவசமடைய
அப்பாவும் மகளும்
பார்வையிட வந்தனரே...

கட்டிடத்தின் வேலைபாட்டை
சுற்றிலும் பார்வையிட்டு
மிஞ்சியிருக்கும் வேலைபற்றி
தந்தை வாதிக்கையிலே...

கட்டிடம் கட்டவந்த
வெளியே கொட்டிகிடந்த
மணல் மேட்டினிலே
விளையாடும் போக்கினிலே

சறுக்கியாடிய வேளையிலே
கொட்டிய மணலும்
சரியா வண்ணம்
தேக்கிய கல்மீதினிலே...

சிறுமியின் காலும்
இடறி வீழ்ந்திடவே
பார்த்திட்ட தந்தைமனம்
பதறியும் துடித்திட்டதே...

சீறிக்கொண்டு பாய்ந்து
வாகனத்திற்குள் அமர்த்தி
மருத்துவமனை நோக்கி
வேகத்துடன் சென்றானே...

மறுநாள் வருகையிலே
முதல் தளத்திலிருந்து
தளத்திற்கு வரும்வழியினிலே
ஏறியிறங்கும் மாடிபடியினிலே...

தொழிலாளியின் மகனொருவன்
தடுமாறி கீழேவீழ்ந்திடவே
மருத்தவமனை சென்றிட
கையில் அள்ளியே சென்றனரே...

அனைவரின் மனமும்
குலைந்திட்ட போதினிலும்
இவனது மனத்தினிலே
சஞ்சலம் மட்டும் தோன்றியதே...

ஏழையின் பிள்ளை
என்பதனாலோ இந்தநிலை?
அனுதாபத்தை காட்டி
வாகனத்தில் கூட்டி செல்லவில்லை...

இரத்தமும் கறைகளும் படிந்திடுமோ
என்றெண்ணியோ பரிதாபத்தையும்
காட்ட மறந்து இலகுவாக
வாகனத்தில் வீட்டிற்கு சென்றானே.

 
(தன் பிள்ளையென்றாலும் மற்றொருவரின் பிள்ளைகள் என்றாலும் உயிர் ஒன்றுதானே என்பதனை நினைவில் கொள்வோம். குறைந்தபட்சம் தனக்காக உழைக்கும் குடும்பத்தினருக்காவது உதவும் மனபான்மையை வளர்ப்போம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை தவிர்ப்போம்)

Wednesday, March 17, 2010

இதயம் துடிக்க மறந்த தருணம்...


என் மனதில் புதைந்திருந்த உன்னை
என் கண்ணில் காட்சியாய் கண்ட தருணம்

என் காதலை உன்னிடம் எப்படி
என் பாணியில் சொல்வது என்று எண்ணிய தருணம்

என் காதலை உன்னிடம் சொல்லி
என்ன பதில் கிடைக்கும் என்று நின்றிருந்த தருணம்

உன் இதழின் அசைவை காட்டி
என்னை என்னிடம் இருந்து பிரித்த மெல்லிய தருணம்

உன் அருகிலிலும் உன்னோடும் பழகி
என் அன்பை காதலை உணர்வாய் காட்டிய தருணம்

இப்படி எப்படியோ பல தருணங்களில்
துடிக்க மறந்திட்ட என்னிதயம் இன்றும் சில தருணம்

துடிக்காமல் நின்று மீண்டும் துடிக்கும்
பல்லாண்டுகள் கடந்தாலும் உனை நினைக்கும் தருணத்திலும்...

Tuesday, March 16, 2010

நீயும்... உன் நினைவும்...


காதலியே!
நம்மைநாம் புரிந்திருந்தும்
எத்தனையோ ஆண்டுகள்
காதலித்தும் பயனின்றி
வேரோடு ஆலமரத்தை
சாய்ப்பதுபோல் மறந்துவிடுவோம்
என்றுசொல்லி மறை(ற)ந்துவிட்டாய்.

என் காதலியே!
என்னை விட்டு பிரிந்துவிடாதே
என்றேன் பிரிந்து சென்றாய் - ஆனால்
உன் நினைவுகளை
என்னை விட்டு பிரிந்துவிடு
என்கின்றேன் பிரிய மறுக்கின்றது.
உன்னைவிட உன்னை நினைவுகள்
மேலானவை என்னுள் தினமும்
சுவையையும் சுமையையும் இரட்டிப்பாக
கலந்து எந்நேரமும் என்னுடனே...

Monday, March 15, 2010

அரசியல்வாதி...




பாரதி!
இவர்களுக்கு நீ அரசியலை சார்ந்தவனா?
இல்லை எந்த இலட்சியத்திற்காக உழைத்தாய்?
என்றும் தெரியாது உன்னின் கவிதையும்
தெரியாது உந்தன் வரலாறும் தெரியாது...
ஆனால் உன்னுடைய சிறு வரிக்குமட்டும்
உரு கொடுத்தும் கருவை கெடுத்தும்
உயிர் கொடுத்தும் உயிரை எடுத்தும் இவர்கள்.
”தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” என்றாயே
அதைதான் இவர்கள் எடுத்துகொண்ட வரிகளடா...
ஆனால், சற்றுமாற்றி உபயோகித்து கொண்டு
”தன்னுடைய உணர்வுகளுக்கு இடையூறுயெனில்
ஜகத்தினை அழித்து வாழ்ந்திடுவோம்” என்று
தனிபட்ட மனிதனின் உடமைகளை சேதபடுத்தியும்
தனிபட்ட மனிதனின் உடலுக்கும் தீ(க்குளிக்க)வைத்தும்
பொதுமக்களை பாதித்தும் நாட்டை அழித்துகொண்டும்.
தன்சுயநலத்தில் மட்டும் அக்கறையை கொண்டு
இன்றும் எங்கள்முன் வாழ்ந்து கொண்டு - அரசியல்வாதியாக.

Sunday, March 14, 2010

முதிர்கன்னி...



கலந்தும் கொண்டேன் எத்தனையோ சுயம்வரம்
இதுவரை யாரும் பற்றவில்லை என்கரம்
இன்றும் நானோ வையகத்தில் தனிமரம்
இறைவன் வேண்டாமலே எனக்களித்த வரம்
எங்கள்மீதும் சற்று காட்டுங்கள் பரஸ்பரம்
தாரமெனும் வாய்ப்பு தாருங்கள் ஒருதரம்....

(முதிர்கன்னியாய் பிறந்தது அவர்கள் பிழையில்லை... குறைந்தது நம்முடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும்  அவர்களை பகடையாக்காமல் தவிர்ப்போம்.)

Saturday, March 13, 2010

தானம்...


எனக்கென வாழ யாரும் இல்லாத
காரணத்தாலோ எண்ணத்தாலோ
நான் பிறருக்கென வாழ்வதை
உள்ளத்தில் நிலைநிறுத்தி கொண்டேன்...
அதை உயிரோடு இருக்கும்
காலம்வரை என்று மட்டுமில்லை
என்னுயிர் என்னைவிட்டு பிரிந்தாலும்
மற்றொரு உடலில் கலந்திட சிந்தித்தேன்...
எரிந்து சாம்பலாய் போகும்
உடலையும் உடல் உறுப்பையும் தானம்
செய்திடும் கொள்கையில் கையெழுத்திட்டேன்
இறந்தும் மற்றவர்களுக்கு உதவும் மகிழ்ச்சியுடன்...


(சிந்திப்போம், செயல்படுவோம்... வாழ்வளிப்போம், வாழ்வோம்...
இறந்தபின்பும் இருப்பவர்களுக்கு உதவி புரிவோமாக...)

சில முன்னோடிகள் இவர்கள்...


டாக்டர் கிருஷ்ணகோபால்
ஜெயபாரதி

ImageBoo Free Web Hosting

Friday, March 12, 2010

மன்னிக்க வேண்டுகின்றேன்....




என் சூழ்நிலையால்...
கல்கண்டு போன்ற கரையும்
என்மனமும் கரையாத கருங்கல்லாய் ஆனது.
என் வார்த்தையினால்...
தூண் போன்ற உறுதியான
உன்மனமும் உடைந்து தூள்தூளாய் போனது.
என்னை மறந்துவிடு
என்னை மன்னித்துவிடு...
ImageBoo Free Web Hosting

Thursday, March 11, 2010

மறைத்தாலும்...


அழகான முகத்தை உன் துப்பட்டாவால்
அழகாக முகமூடியாய் சுற்றி சென்றதேனோ?
உந்தன் அழகை...
சூரியனிடமிருந்து காத்துக்கொள்ளவா? - இல்லை
எங்கள் பார்வையிலிருந்து விடுபடவா?
பெண்ணே! எப்படியிருந்தாலும்
சுற்றெறிக்கும் சூரியனின் கதிர்கள்
அதனையும் ஊடுருவி உன்னை
தீண்டாமல் விட்டுவிடுவதும் இல்லை
எங்கள் பார்வையும் அதுபோல் லேசராய்...

ImageBoo Free Web Hosting

Wednesday, March 10, 2010

எந்தன் கோரிக்கை...



தினம் காலையில் சேவலும்
கூவும் முன்பே எழுந்தேன்!
உன்னை காணும் ஆவலில்
எந்தன் மனதுக்குள் மிதந்தேன்!
உந்தன் இதழின் புன்முறுவலில்
நான் அங்கேயே தொலைந்தேன்!
அதனை வர்ணித்திட இரவல்
செய்கின்றேன் வார்த்தையை உன்னிடம் - ஏனெனில்
உன்னின் இதய காவலில்
சிக்கியிருக்கும் என்னை விடுவிக்ககோரியும்...


ImageBoo Free Web Hosting

Tuesday, March 9, 2010

உன் நினைவோடுதான்...


உன்னை மறந்து இருப்பேன் என நினைத்தாயோ
இல்லை துறந்து இருப்பேன் என எண்ணினாயோ
எந்தன் இதயத்தை திறந்து பாரடி மெல்ல
இன்றும் உன்னை எறிந்து விடாமல் எனக்குள்
இன்னும் பறந்து கொண்டு தான் இருக்கின்றாய்
நான் இறந்து போகும்வரை உன் நினைவோடு...



(மெல்ல திறக்க சொல்வது உள்ளே நீ இருக்கிறாய் வலிக்க கூடாது என்பதற்காக)

ImageBoo Free Web Hosting

Monday, March 8, 2010

தேவியும் நீயே... பாவியும் நீயே...



என் மனதில் கொட்டும் அருவியும் நீயே
என் மனதை க(கா)ட்டும் கருவியும் நீயே...

என் மனதில் பறக்கும் குருவியும் நீயே
என் மனதை குடையும் குளவியும் நீயே...

என் மனதில் ஓடும் புரவியும் நீயே
என் மனதை ஒடுக்கும் புல்லுருவியும் நீயே...

என் மனதில் உதிக்கும் கவியும் நீயே
என் மனதை திறக்கும் கள்ளசாவியும் நீயே...

என் மனதில் குடியிருக்கும் தேவியும் நீயே
என் மனதை கொல்லும் பாவியும் நீயே...


ImageBoo Free Web Hosting

Sunday, March 7, 2010

சிந்தனை செய் மனமே...


மனிதா!
உள்ளத்தில் சகோதரத்துவம் உணர்வை
வாழ்வில் சமத்துவம் கொள்கையை
நெறியில் தத்துவ மந்திரமாய் - கொண்டு
தேசத்தில் மகத்துவம் அடைவோம்...

ஊனம் - முரண்பாடு


அன்று...
காதல் செய்ய
பெண்களின் ஒற்றைகண்
பார்வைக்கு ஏங்கியவனே!
இன்று...
திருமணம் செய்ய
பெண்ணிற்கு ஒற்றைகண்யென
தள்ளிவைத்தது சரிதானோ?

(ஊனமுற்றோரை ஆதரிப்போம். வாழ்வு அளிப்போம்)
ImageBoo Free Web Hosting



Friday, March 5, 2010

கவிதைகள் - என் பார்வையில்


தினம் என்மனம் கண்வழியே
பார்வையில் படும் பாவையரை
காணும் சமயம் எண்ணத்திலும்
இதயத்திலும் என்னவென நினைத்து
ரசிப்பேனோ அப்படித்தான் பிறருடைய
கவிதைகளை வாசிக்கும் போதும்
என்கவிதகளை எழுதும் போதும் - உள்ளத்தில்
மகிழ்ச்சி தரும் ஒன்றாய்.


ரசிப்பதில்....
ஆண் வர்கத்தில் பிறந்த
நான் மட்டும் விதிவிலக்கா?
எனக்கு....
ராமனும் நானே
ராவணனும் நானே.
ImageBoo Free Web Hosting

Thursday, March 4, 2010

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...



கோடையில் இலைகளை உதிர்த்து நிற்கும்
மரத்தினை கண்டு சோகங்களை நினைத்து
கண்ணீர் விடும்சமயம் தோள்களை பிடித்து
தோழன் ஒருவனாய் உதிர்க்கும் வரியிது.


துவண்டிருக்கும் தோழா!
மரத்தில் இலைகளுக்கிடையே பூக்கள்
மலர்ந்து பூத்திருப்பதை கண்டிருப்பாய்
எப்பொழுதும் இலைகளே இல்லாமல்
மரமே பூத்திருப்பதை கண்டதுண்டோ
மனதிலும் கண்ணிலும் கண்டிடகூடும்
எத்தனை அழகென்று வர்ணிக்ககூடும்




அதுமட்டுமல்லாது...
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளை போல்
உன்மனதில் இருக்கும் சுமைகள் வீழ்ந்துவிடட்டும்
வசந்த காலத்தில் துளிர்க்கும் இலைகளை போல்
உன்இதயத்தில் எண்ணங்கள் தோன்றட்டும்
உன்வாழ்கைக்கு வெற்றியை அள்ளிதரட்டும்.




 உன்னில்...
சோகங்கள் வீழட்டும் தாகங்கள் தீரட்டும்
வாழ்கையில்
காலங்கள் எனும் புள்ளிகள் இணையட்டும்
அழகிய
கோலங்கள் எனும் வாழ்கை பிறக்கட்டும்
புதிதாய்
ராகங்கள் மலரட்டும் சுகங்கள் தொடரட்டும்...

ImageBoo Free Web Hosting