Wednesday, March 30, 2011

உன்முகத்தில்...


மலர்ந்த உன்னிதழ்களை
ரசிப்பதைக்காட்டிலும்
குவிந்த உன்னிதழகளை
மிகவும்ரசிக்கிறேன்...
ஏனெனில்
சிரித்து என்னை
மகிழ்விப்பதைக்காட்டிலும்
முத்தமிட எனக்காக
காத்திருப்பதையெண்ணி...

Tuesday, March 29, 2011

எந்தன் உயிர் செல்(லமே)...

உன்னை!!!
நொடிக்கு ஒருமுறை 
நினைக்கிறேன்...
நினைத்ததும் அழைக்க 
துடிக்கிறேன்...
அழைக்க முடியாமல்
துவள்கிறேன்...
இயலாமையாய் கையோடு
அரவணைக்கிறேன்...
அலைபேசியாய் உடலோடு
அணைக்கிறேன்...
இதயத்திற்குள் அடைத்திட
தவிக்கிறேன்...
வழியில்லாமல் சட்டைபையில்
திணிக்கிறேன்... 

உந்தனது இடுப்பில் 
சொருகிடும்... 
மார்போடு பத்திரமாய்
ஏந்திடும்...
அலைபேசியிலும் நானும்
அவ்வாறோ?

Monday, March 28, 2011

எனக்குள் நீ....என்னியத்தில் மட்டுமல்ல
உன்பெயரும் நீயும்
முழுதும் நிறைந்திருப்பது...

என்அலைபேசியிலும் தான்
உன்பெயரும் நீயனுப்பிய
குறுஞ்செய்தியுமே நிறைந்து...


என்னுடல் செல்லிலும் நீதான்
என்அழைப்பு செல்லிலும் நீதான்...

இரண்டுமே நீயிவில்லை என்றால்
செல்லரித்து போய்விட கூடும்...

Sunday, March 27, 2011

இதழில் க(வி)தையெழுதும் நேரமிது....
வெள்ளைநிற காகிதத்தின் மேனியில் மையால்
உன்னை தினம் கவிதையாய் வடித்த
என்விரல்களை சற்றே ஓய்வெடுக்க சொன்னாயோ?...

காகிதத்தின் மீதுநீ கொண்ட பொறாமையால்
கவிதை இனி வேண்டாமென கூறியதன்
அர்த்தத்தை உள்ள(ம)றிந்து கொண்டதுயென் தாமதமோ?...

காகிதத்தில் எனைநீ வரைந்த கவிதைகள்போதும்
உடலும்உயிருமாய் உனக்காய் ஒட்டியிருக்கும் எந்தேகத்தில்
கவிதைபடைக்கும் நாள்எந்நாளோ என்றாயே பார்வையில்...

அதனால் என்னவோ என்வலக்கையை நீசிறையெடுக்க....
ரோஜாபோன்ற பூவிதழான உந்தன் மெய்யில்
என்னிதழ்கள் புத்தம்புதுக் கவிதையை கிறுக்கின்றதோ?

நெற்றியில் முத்தமிட்டு சத்தத்துடன் ஆரம்பிக்க
வாக்கியமின்றி வார்த்தையின்றி ஹைக்கூ கவிதையாய்
சொற்கள் ஒலிக்கும்ஒலியிலும் கண்மயங்கி போகின்றாயோ?

உன்கண்கள் சொக்கியிருக்கும் அழகினிலும் தீண்டலிலும்
என்முதல் முத்தத்தின் உள்ளுணர்விலே காணாத
சொர்க்கங்களை இச்சென பதிக்கையில் உச்சமாய்காண்கிறேனடி...

(உன்னை சந்திக்குவேளையில் இப்படி பலகவிதைகள்
படைத்திட நெஞ்சுக்குள் ஆசைதான் பலகோடி...)

Wednesday, March 23, 2011

இறைவன் கொடியவன்... (2)

ஒவ்வொரு வேளையும் உண்ணும்போது
உன்னை நினைத்துக்கொண்டே உண்கிறேன்
பலநேரங்களில் உண்ணாமல் போகிறேன்...

சிலநாட்கள் உட்கொள்ளும்போது வயிற்றுக்கும்
வாய்க்கும் இடையே தொண்டையில்
உணவுசிக்கி திக்குமுக்காடி போகிறேன்...

ஆனால்!
ஒருமுறைகூட அப்படியே நெஞ்சமடைந்து
உன்நினைவோடு இறந்து போகவிடாமல் - என்னை
வாழவைக்கும் இறைவன் கொடியவனே!

Saturday, March 19, 2011

அன்பின் பரிமாற்றம்...நீயெனக்கு பரிமாற
நான் உண்பதும்...

நான் உண்டிட
நீகண்டு மகிழ்வதும்...

நான் உண்டபின்
நீயதனை உண்பதும்

இல்லத்திற்கு வரும்போது
நடக்கும் செயல்தான்...

நீயெனக்கும் நானுனக்கும்
ஊட்டிவிட்ட சிலதருணங்கள்

மட்டும் கண்ணுக்குள்
நெஞ்சுக்குள் அகலாமல்

எந்தன் மனத்தை
அகழ்ந்து கொண்டே

மனம்கலந்து மணம்வீசிய - உன்சமையலை 
நினைத்து மகிழ்ந்துகொண்டு...

Friday, March 18, 2011

நீயும்... நானும்...


எண்ணங்களை வார்த்தைகளாக
அனுப்பிடும் விளையாட்டில்
சிலநேரங்களில் மெளனங்கள் - நமக்குள்
அழகாய் பூக்கின்றது....

மெளனபூவை சூடியிருக்கும்
உன்முகத்தின் அழகினை
நான் பக்கத்திலிருந்து - இமைமூடாமல்
ரசிக்க வழியில்லாமலும்...

ஒருபுறம்
எண்ணங்களில் வரைமுறை
தாண்டுகின்றேனோ என்றெச்சமும்...
மறுபுறம்
எண்ணங்களுக்கு என்னசொல்வதென்று - தெரியாமல்
நீயோயென சிந்தித்துக்கொண்டும்.

Thursday, March 17, 2011

இயற்கையை வெல்லும் உந்தன் அன்பு...


காலையில்!
கீழ்வானம்கூட கதிரவனிடம் கதிர்களை
கடன்வாங்கியே என்னைவந்து எழுப்பும்
உன்மனம் சொல்லும் வார்த்தைகளோ
அதற்குமுன்னே என்னைகவிதையாய் கண்அசைக்கும்...

மாலையில்!!
அந்திவானம்கூட வானவில்லிடம் நிறத்தை
கேட்டேதன்னை அழகுபடுத்தி என்னிடம்காட்டும்
உன்னுள்ளம் கொண்டிருக்கும் நிகரற்றஅன்போ
அவற்றைவிட என்னைபன்மடங்காய் கவர்ந்திழுக்கும்..

இரவினில்!!!
நீலவானம்கூட வெண்மதியிடம் ஒளியை
நீந்தசொல்லியே என்கண்களை தீண்டிச்செல்லும்
உன்னிதயம் பாடும் எனக்கானவரிகளோ
அதனைவிட என்னைமெதுவாய் தாலாட்டிவெல்லும்...

காலை எழுந்ததும் என்கண்கள் முதலில்
தேடிபடிப்பது உந்தன் குறுஞ்செய்தியே...
தூக்கம் வருகையில் கண்பார்க்கும் காட்சிக்குள்
இருப்பதும் உந்தன் குறுஞ்செய்தியே...

இன்று என்னுடன்
இல்லாமல் போனாலும்
பேசிடும் மெளனவார்த்தைகளாய் - எனக்குள்
உணர்த்திக்கொண்டே உன்அன்பினை...

Wednesday, March 16, 2011

இறைவனும் கொடியவன்... (1)


நள்ளிரவு நேரம் தொட்டதும்
பாயும் மின்சாரம் போல்
நான்சாலையை கடக்கும் முன்பே
என்னை கடந்தது வாகனமொன்று
கண்கள் அயர்ந்து இருக்கவில்லை - ஆனால்
கண்மூடி திறக்கும் நொடிக்குள்ளே...

முற்பிறவியில் என்னபாவம் செய்தேனோ?
மயிரிழையில் என்னுயிர் பிழைத்து...
உள்ளம் சிதைந்து மண்ணில்
நித்தம் கண்ணீரோடு வாழ்வதைவிட
உடல் சிதைந்து விண்ணில் - கலந்திருந்தால் 
மகிழ்ச்சியாய் எனக்குள் இருந்திருக்கும்...

நான் இறந்தாலும் செல்வது நரகம்தான்
உந்தன் மனதில் குடியேறிய காரணத்தினால்
இன்று உயிரோடு இருப்பதும் நரகம்தான்
எந்தன் மனதில் குடியேறாத காரணத்தினால்
இறந்தும் விடியும்வரை ஆதரவின்றி கிடந்திருப்பேன் - ஒருவேளை
இன்றிருப்பதை போலவே விபத்துக்குள்ளாகிருந்தால்.

Tuesday, March 15, 2011

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...


நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!

Monday, March 14, 2011

நெற்றிப்பொட்டில் உன்னை வைக்கிறாய்...


நெற்றியில் என்னுடைய
எந்த விரலால்
பொட்டு இட்டுக்கொண்டால்
அழகுபெற செய்யுமென்பதும்
ஆயுளை நீட்டுமென்கிற
சாஸ்திரம் தெரியாது...

ஒருவேளை!!!
உன்னை நினைத்து
எப்படி வைத்தாலும்
அழகாய்தான் தெரியும்...
உன்னையே நினைத்துக்கொண்டு
இருக்க என்னாயுளும்கூடும்...

ஆனாலும்!
நீயெந்த விரல்களால்
எனக்கிட்டாலும் அழகுதான்..
அதனை நினைக்கநினைக்க
என்னாயுளும் அதிகம்தான்...
என்பதுமட்டும் என்நம்பிக்கை..

Sunday, March 13, 2011

என்னருகில் நீவேண்டும் என்றென்றும்....எப்பொழுதும் உனைகண்டபின்
உதட்டில் என்சொல்லும்
உடம்பில் என்செயலும்
அகத்தில் அன்பிருந்தும்
என்னசெய்வ தென்றுயறியாது
ஊனமடைந்து போகும்..

ஆனால்!
காணாத பொழுதுகளில் உனையெண்ணி
கலங்கியே கண்ணீர்விடும் கண்கள்
ஏனோ? இம்முறை நேரில்
உன்னை கண்டபின்பு கலங்காது
கல்லாய் அசையாமல் போனதேன்

கண்ணீர்குளமும் வற்றாமலே பாறையானதே - எல்லாம்
உன்அன்பு செய்யும் மாயம்தானோ?

Wednesday, March 9, 2011

உன்நினைவுகளால்... (3)


அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமென்பது
எந்தஅளவுக்கு உண்மையென்பது
எனக்குமுன்பு தெரியது...
ஆனால்!
நீயில்லாமல் வெறுமையடைந்து
உள்மனமும் கருத்திருப்பதை
என்முகம் எனக்கும்
அடையாளம் காட்டிக்கொண்டு...

Friday, March 4, 2011

உன் நினைவுகளால்.... (2)நண்பகல் அலுவலகநேரத்திலும்
கண்களில் தூக்கம்...
தூக்கத்தை கலைத்திட
என்னன்னவோ செய்தேன்

நண்பர்களுடன் சற்றேஅரட்டை
அப்பொழுதும் கலையவில்லை
தேனீர் அருந்திபார்த்தேன்
அப்பொழுதும் கலையவில்லை...

உன்நினைவுகளை அசைபோட்டேன்
தூக்கம் கலைந்தது..
ஆனால் மனதுக்குள்
துக்கம் புகுந்தது...

வெளியுலகத்தை பார்த்தேன்
உன்நினைவுகளை கலைக்க
வெளியுலகத்தையே மறக்கசெய்கிறது
உன்நினைவுகள் என்னுள்....

நேற்று கலைந்த தூக்கம்
இன்று இக்கணம்வரை இல்லாமல்

Thursday, March 3, 2011

உன் நினைவுகளால்.... (1)


உன்நினைகளால்...
கண்ணில் படுகின்ற எதைஎதையோ
உடைக்க நினைக்கிறது என்மனம்...

கண்ணுகு தெரியாத என்னிதயம்
மட்டுமே உடைந்துபோகிறது துண்டுதுண்டாய்....

அன்பு... சிரிப்பு... நினைப்பு... (3)
வாடாத பூவும்
வாடிப்போகிறது என்மீது
நீ கொள்ளாமல்....

உதிராத பூவும்
கருகிபோகிறது  என்னிடம்
நீ சிந்தாமல்....

அழியாத பூமட்டும்
பூக்கிறது என்னுள்
நீ இல்லாமல்....

Wednesday, March 2, 2011

அன்பு... சிரிப்பு... நினைப்பு... (2)வாடாத பூவென்று
அன்பினை சொல்வதுண்டு
அதனால் என்னவோ?
என்னுடலை வாட்டியெடுத்துகொண்டு

உதிராத பூவென்று
சிரிப்பினை கூறுவதுண்டு
அதனால் என்னவோ?
என்னுயிரை சிந்தவைத்துக்கொண்டு....

அழியாத பூவென்று
நினைப்பினை சொல்கிறேன்
அதாவது உன்னை - என்னோடு
சேர்த்துஉயிர் வாழவைக்கட்டும்....

Tuesday, March 1, 2011

அன்பு... சிரிப்பு... நினைப்பு... (1)

உலகில் பூவிலே சிறந்தபூ
பலருக்கோ உந்தன் அன்பு
சிலருக்கோ உந்தன் சிரிப்பு....

எனக்கோ எப்பொழுதும் உன்னால்
உண்டாகும் உந்தன் நினைப்பு
உள்ளத்தில் அதுதரும் தவிப்பு...

இவ்விரு பூக்களும் என்றென்றும்
இதயத்திற்குள் வாடாமல் இருக்க - நான்
இருகண்களிலிருந்து கண்ணீரை ஊற்றிக்கொண்டே...