Wednesday, June 30, 2010

பிரிவும்.. பனிக்கட்டியும்...


மரணம் எனும் கடலில்
மிதக்கின்றேன் பனிக்கட்டியாய்...
பிரிவு எனும் நினைவால்
பறக்கின்றேன் நித்தமும் ஆவியாய்...
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைகின்றேன் மிச்சமும் நீராய்...

Tuesday, June 29, 2010

உன் நினைவும்... கணினியும்...

கணினி உன்னை
பிரிய முடியாமல்...
பிரிய மனமில்லாமல்
கன்னி அவளை
பிரிந்திருந்தாலும்
என்னோடு அவள்
பேசிய நாட்களில்
உன்வழியே பகிர்ந்துக்கொண்ட
நினைவுகளை உன்னில்
தினம் தேடிக்கொண்டே...

Monday, June 28, 2010

உடற்பயிற்சி கூடம்...

மனிதா!
நாம் வியர்வை சிந்தி உழைக்காமல்
சம்பாதிக்கும் நிலை இன்று இருந்தாலும்
திங்களுக்கு கூலி கொடுத்து ஏதாவது
செய்து உடலை மேம்படுத்திட நினைத்து...
தினம் எப்படியாவது வியர்வை சிந்திட
உடற்பயிற்சி கூடம் செல்கின்றோம் - அங்கேயும்
விந்தையாய் நின்ற இடத்திலேயே நடக்கின்றோம்
வித்தையாய் நின்ற இடத்திலேயே ஓடுகின்றோம்
அதுவும் குளிர்சாதனம் பொருத்திய கூடதிலே!!!
இது ஏனோ? நமக்கு வீண்(ம்பு) தானோ?

Saturday, June 26, 2010

கவிதையில்...


என் வழிகளை பார்க்க வேண்டாம்
என் வரிகளை பார்த்தாலே போதும்
என் உள்ளத்தை பார்க்க கூடும் -  அதில்
என்ன உள்ளதென படிக்கவும் கூடும்.

Friday, June 25, 2010

நட்சத்திரங்கள்....


நீ உமிழும் ஒளியை
இரவில் கண்டு ரசித்தேன்
உனக்கே ஒளியை உமிழ்ந்து
இன்று ரசித்து மகிழ்கின்றேன்.

மொட்டைமாடியில் வெட்ட வெளியில்
படுக்கும் முன்
உன்னை கண்டு ரசித்தேன்
வீட்டின் விட்டத்தில் ஒட்டி
படுக்கை அறையில்
இன்று ரசித்து மகிழ்கின்றேன்.

பிடிக்க முடியாமல் எட்டாத
உயரத்தில் இருந்த உன்னை
சிலசமயும் தொட்டு பார்த்தும்
உள்ளம் ரசித்து மகிழ்கின்றேன்.

Thursday, June 24, 2010

வானவில்...


கண்களால் உன்னை எப்போ
காண்பேன் என்று நினைத்திருந்தேன்
மழையில் என்னை அதற்காக
முழுவதுமாய் நின்று நனைத்திருந்தேன்
மழையும் நின்றது...
நீயும் தோன்றினாய்....
வானத்தில் உன் வண்(ர்)ணத்தை
கண்டு என்னுள் மகிழ்ந்தேன்
மனதில் என் எண்ணத்தை
கொண்டு உன்னுள் கலந்தேன்
மண்ணில் காதலியை பார்த்தபின்பல்ல - நீ
விண்ணில் வில்லாய் பூத்தபின்பு…

Wednesday, June 23, 2010

வாழ்கை சக்கரம்...


கழுத்தில் மணி கட்டி
மூக்கில் கயிறு பூட்டி
துள்ளி நடை போட்டிட
ஓசை தரும் இசையும்
வண்டியின் சக்கரத்தில் அச்சாணியின்
நுனியில் பூத்த மணியும்
குலுங்கி சாலையில் வலம்வர
இசைக்கு தாளமாய் சேர்ந்திட
மெல்ல சுழலும் சக்கரமாய்
வாழ்கை சக்கரம் மென்மையாய்
சுழன்ற காலம் எங்கோ?

உதிரி பாகம் இல்லாமலும்
உடைந்த பாகம் இணையாமலும்
உ(அ)திரும்படி வேகமாய் ஓட்டிட
உளைச்சல் தரும் இரைச்சலும்
பாதையில் வழிவேண்டி எழுப்பும்
ஒலியும் செவியினை பிளந்திட
உருண்டு ஓடும் சக்கரமாய்
விரைந்து ஓடும் வாழ்வாய்
இயந்திர வாழ்கையாய் மாறியதேனோ?  

Tuesday, June 22, 2010

எல்லாம் அவன் செயல்...


நிம்மதி வேண்டி
சன்னதி சென்றேன்
இறையையும் கண்டேன்
கிடைக்காமல் திரும்பினேன்
வழியில் கிடைத்தது
வலியும் மற(றை)ந்துபோனது
உன் தரிசனத்தால்
என் வாழ்வில்…

Sunday, June 20, 2010

எண்ண(ன்ன) கனவோ?


போட்டியில் வென்று
பழம் பரிசுபெற
மயில் மீதேறி
உலகை சுற்றினான்
ஒருவன்...

அம்மையும் அப்பனும்
உலகமென சொல்லி
போட்டியில் வெற்றி
வாகை சூடினான்
மற்றொருவன்...

காதலை சொல்ல
உலகமே உனைசுற்ற..
நீயோ! உலகமென
என்னை சுற்றும் - கனவுடன்
நானொருவன்...

Saturday, June 19, 2010

என் மனம் உன்னால்...

வானம் தெரியாத
அமேசான் வனமாய்
இருந்த என்மனதை
வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
உன்வரவால் மாற்றினாயே..வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
இருந்த என்மனதை
வானம் தெரியாத
அமேசான் வனமாய்
உன்பிரிவால் மாற்றினாயே..

Friday, June 18, 2010

இவள் சிறுமியா?


சுகபிரசவமே மலிந்துவரும்
இக்கால கட்டத்தில்
இச்சிறிய வயதில்
சுயபிரசவம்…

பூவாய் அரும்பிய சிறுமியே
நீயாய் விரும்பியோ? விரும்பாமலோ
சூ(கூ)டி அனுபவித்து வாடியின்று
மொட்டு ஒன்றை அரும்பினாய்…
மொட்டுகள் பூவாகி விதையாகி
மீண்டும் மொட்டாவது இயல்பு - ஆனால்
மொட்டே மற்றொரு மொட்டை
பெற்றெடுத்த மளைப்பான நிகழ்வு…

 உடலுறவு பற்றி தெரியாதோ? - உன் அறியாமை
மற்றவர்களிடம் சொல்லமுடியாத நிலையோ? - உன் இயலாமை
பத்துமாதம் ரகசியமாய் சுமந்தாய் - உன் தனித்திறமை
பெற்றெடுத்த செயல்முறை சரியோ? - உன் கல்லாமை
பிரபஞ்சத்தை வியக்க வைத்ததடி! - உன் பெண்மை
இனியென்ன செய்வதென்று நிற்பது – உன் நிலைமை
உனக்குள் ஒளிந்துக்கொண்டு எத்தனையோ ஆமை
படித்தபோது உன்மேல் எனக்குள்ளும் பொருமை

பிள்ளைபேறு மறுபிறப்பென்று எண்ணி
பிள்ளைபெறுதலை தள்ளி வைக்கும்
இன்றைய பெண்களிடையே வேறுபட்டும்
மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை வேண்டும்
மங்கையர்களிடையே தானே பள்ளிக்கூடத்தில்
பிரசவித்துக்கொண்டு பொருட்படுத்தாமல் இருந்தும்
அவர்கள் எல்லோருக்கும் பாடம்புகுத்தும்
கட்டாய பா(ப)டமாய் எங்கள் கண்முன் நீ...

அன்று…
பன்னிரெண்டு வயது சிறுமி
தாயானாள் உலகமே வியந்தது
இன்று …
பதினைந்து வயது சிறுமி
தனக்கு தானே பிரசவம்!!!
இந்தியாவை நினைத்து உலகமே
வியந்து கொண்டு உன்னால்.

Wednesday, June 16, 2010

நானும்... மேகமும்...


பெய்யும்மழை மண்ணில்
பெய்திடும் முன்பு
இடம்தன்னை தேடி
நீலநிற வானில்
விரைந்து ஓடிடும்
கார்கால மேகமாய்...
பூலோகத்தில் பூத்திட்ட
மானிடரில் உனைத்தேடி நான்...தூறலின் சாரல்
தேகத்தில் தீண்டிட
மேகத்தையும் வானத்தையும்
தன்னிலையும் மறந்து
மழையில் நனைந்துபோல...
காதலை கொண்டு
உலகத்தையே மறந்து
உனைமட்டும் எண்ணி நான்...


மழை நின்றபின்
செல்வதற்கு இடம்தெரியாமல்
வானில் அடைப்பட்ட
மூண்ட மேகமாய்
காதலை பிரிந்து
செய்வது அறியாமல்
துவண்ட இதயத்துடன்
உலகில் வாழ்கின்றேன் நான்...

Friday, June 11, 2010

சாத்தியமோ?

பெண்ணே!
மலர்ந்த மலர்கள்
வாடியுதிருமே தவிர
மீண்டும் மொட்டுகளாக
மாறாது என்றாயே
அப்படியிருக்க...

நட்பெனும் மொட்டுகள்
காதலாய் மலர்ந்து
காதல்பூக்கள் வாடியபின்
மொட்டாய் நிலைக்க
நினைப்பது மட்டும்
எப்படி சாத்தியமாகும்?

Sunday, June 6, 2010

என் சுவாசம்... உன் மூச்சுக்காற்று...


இவ்வுலகில் யார்சொன்னது ஆக்சிஜன்
இல்லாமல் உயிர்வாழ முடியாதென்று
நீகாற்று நான் மரமென்று மற்றொரு
கவிஞன் பாடிய பாடலைபோல்
நீவிடும் மூச்சுக்காற்றை என்னுள்
சுவாசித்துக்கொண்டு உயிருடன் நான் ...

Saturday, June 5, 2010

கூறுவதேனோ?


கூறுவதேனோ?
சொல்லடி உன்குரலில்
மடிவோமென்று சொன்னாலும்
உயிரை மாய்த்துக்கொள்கின்றேன்
ஆனால்
இவ்வுலகில் வாழவழியில்லை
என்றுமட்டும் உரைக்காதே...
உன்னோடு வாழும்
கனவுகளோடும் நினைவுகளோடும்
எனக்குள் பல்லாயிரம்
எண்ணங்களோடு வழி(லி)களோடு...
இனி நீ கூறுவதேனோ?

Friday, June 4, 2010

முத்தம்...கண்களால் பேசியே
தோன்றிய தீயை
கன்னத்தில் மழையாய்
பொழிந்து அணைத்தேன்
தீயும் மழையும்
உடலெங்கும் பரவாமல்...

Wednesday, June 2, 2010

பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?

பலருக்கு இது பூந்தோட்டந்தான்!!!
சிலருக்கு அது சிறைச்சாலைதான்!!!
பூக்கின்ற பூக்கள் பலவிதம்போல்
சிறைப்பட்ட கைதிகளும் பலவிதம்.

வகுப்பறையென்னும் பூங்கா
எப்பொழுது திறக்கும்
பாடமென்னும் தென்றல்
எப்பொழுது வீசுமென்று
காத்திருக்கும் காதலர்களாய்
மாணாக்கர் ஒருபுறமும்...

வகுப்பறையென்னும் சிறை
எப்பொழுது முடியும்
மைதானமென்னும் விடுதலை
எப்பொழுது செல்வோமென்று
காத்திருக்கும் சிறைகைதிகளாய்
மாணாக்கர் ஒருபுறமும்...

பள்ளிக்கூட ஒழுக்கத்தை
நிலைநாட்டும் பெயரில்
சிறைக்காவலர் போல்
செயல்படும் ஆசிரியர்களை
கண்டுபயந்து ஒதுங்கும்
மாணாக்கர் ஒருபுறம்...

அன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கரிடையே
ஒற்றுமையுணர்வு ஓங்கிட
வெண்ணிற மேல்சட்டையும்
சீருடையாய் அணிந்தனரே.
கம்பியெண்ணும் கைதிகளிடையே
வேற்றுமையுணர்வு நீங்கிட
கட்டம்போட்ட உடையையும்
தண்டனையாய் அணிவித்தனரே.

இன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கர்
கட்டம்போட்ட சீருடையும்
கைதிகள் வெண்ணிற
உடைகளை அணிந்துக்கொண்டும்
தலைகீழாய் மாறிபோனதே
பள்ளிக்கூட வாழ்க்கை.

அங்கும் சீருடை
இங்கும் சீருடை
ஒற்றுமையால் என்னவோ
பள்ளிக்கூடம் இங்கே
பூந்தோட்டமாய் சிறைச்சாலையாய்
என் கண்களில் தெரிந்ததோ?

விடுதலையோ விடுமுறையோ
ஆனபிறகு மீண்டும்
அதேஅறையை அடைய
முடியாத காரணத்தினாலோ என்னவோ?

உண்மையான சிறைச்சாலைகளும் இன்று
பூந்தோட்டமயமாய் அழகாய் மாறிவர
பாடசாலைகளும் சிலயிடங்களில் இன்று
தண்டனைவழங்கும் சிறைச்சாலைகளாக மாறி
மாணாக்கரின் உயிரைபறிக்கும் இடமாக
மாறிக்கொண்டு இந்நிலை மாறவேண்டி...

பள்ளிக்கூடம்

நம்மின் நெஞ்சுக்குள்
எத்தனையோ நினைவுகளை
பட்டாம்பூச்சியாய் சிறக்கடிக்க
செய்யும் மந்திரசொல்தான்...

பச்சை நிற வயல்வெளிகளும்
கூறுப்போட்ட பூமியாய் மாறியிருந்தாலும்
பசுமை மாறா எண்ணங்களாய்
சோறுட்டிய தாய்போல மனதிற்குள்...

மறக்கவே நினைத்தாலும்
மறக்க முடியாதபடி
மனதில் அலைபாயும்
மகிழ்ச்சி தந்த
மெளனம் கலந்த - எத்தனையோ
மங்காத சம்பவங்கள்...

மைதானங்கள் வெறிச்சோடிட
வகுப்பறைகள் நிரம்பிட
மீண்டும் ஒர்ஜென்மயாய்
ஒன்றுகூடிட சங்கமிக்கும்
ஒருநாளாய் விடுமுறைக்கு பின்
மீண்டும் பூக்கும் வகுப்பா(பூவா)ய்...

பள்ளிக்கூடம் என்ற தலைப்பினை
கொண்டு எழுதிட எத்தனையோ
பக்கங்கள் பத்தாமல் போகின்றன
எதைவிடுவது எழுதுவது என்றுதெரியாமல்
தவிக்கின்றது என்மனம் இன்று...
ஆனால்,
பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட
பலதலைப்புகளுக்கு என்ன எழுதுவதென்று
தெரியாமல் வெள்ளைகாகிதங்கள்
பத்திரமாக தவித்தன அன்று...

Tuesday, June 1, 2010

உன் குரலிசை...

குயில்பாட்டு அறியாத குயிலா நீ!
குழலோசை கேளா குழலா நீ!
குரலிசை உணரா குமரியா நீ!
குழலிசையை தனியாய்கேட்க விரும்புகின்றாயே நீ!

உன்குரலை தனிமையில் கேட்டதில்லையோ நீ!
உன்கண்களை மூடிக்கொண்டு பேசிவிடு நீ!
குழலிசையும் குழைந்ததாய் மயங்கிபோவாய் நீ!!! - உறங்கிட
குயில்களும் உன்குரலையும் வீட்டையும் தேடியே...