Saturday, December 31, 2011


பிறக்கும் புது வருடம் எங்கள் இருவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியானதாக அமைவது போல் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக, நீங்கள் நினைக்கும் வண்ணம் அமைய இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன்…
அன்புடன்,
மம்தா & வாசன்

Wednesday, December 28, 2011

சொல்லும் மலரும்...


பெண்ணே!
சூரியனை கண்டும்
நிலவினை கண்டும்
மொட்டு ஒன்று
மலராய் மலர்வதில்
பெரிதும் வியப்பில்லை....
ஆனால்
உந்தன் ஒரேயொரு
ஒற்றை சொல்லில்
பலபூக்கள் பூக்கின்றன
என்னுள் கவிதையாக...
ஒவ்வொரு சிந்திப்பிலும்
இதழ்கள்கூட பூக்களாய் - உருமாறி
வியக்க வைத்துக்கொண்டு.

Wednesday, December 14, 2011

அமாவாசையும்... பெளர்ணமியும்...யாரும் என்னைவிட்டு பிரிந்து
செல்லவுமில்ல்லை...
வாழ்க்கையில் எனக்கு காதல்
தோல்வியுமில்லை....
ஆனாலும் ஏனோ தேய்ந்து
போகிறேன்...
ஒருநாள் ஏனென்று புரியாது
மறைகிறேன்...

யாரும் என்னை உற்சாகமாக
ஆதரிக்கவுமில்லை...
எதன்மீதும் எனக்கு துளியும்
ஆசையுமில்லை...
இருந்தாலும் வானில்மெல்ல முழுதாக
வளர்கிறேன்...
பிறர் ரசிக்கும்வகையில் பிரகாசமாக
உதிக்கிறேன்...

Tuesday, December 6, 2011

அவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (2)


உடை!!! ஆபரணம்!!! அங்கம்!!!
எண்ணம் என்றுபல வனப்புகள்
ததும்பிய எந்தன்உயிர்  கனவே
நீயும்தான்  எனக்கு விருந்தாய்....

மேனியில்  இவையாவும் ஒன்றுசேர
பலகோலங்கள் பூண்டும் என்னையும்
என்கைகளையும் கட்டியும் போடுகின்றாய்
எண்ணங்களை மட்டும்பறக்க செய்கிறாய்...

பலவண்ணமும் பலவடிவமும் கொண்ட
மேகம்போல உன்னாடைகள் ஒவ்வொன்றும்
புதுவர்ணமும் புதுஉருவமும் கொடுத்து
புத்துணர்ச்சியை எனக்கு தந்துக்கொண்டு...

வெவ்வேறு அளவும் வெவ்வேறு
தன்மையும் கொண்டு மின்னும்
நட்சத்திரமாய் உந்தன் ஆபரணங்கள்
மகிழ்ச்சியை எனக்கு கொடுத்துக்கொண்டு...

கண்கவரும் உடையும் ஜொலிக்கும்
தங்கநகையும் கனிமறைக்கும் இலைபோல்
அங்கத்தை மூடிமறைத்தாலும் மனத்துக்குள்
உணர்ச்சிகளை மெல்லபொங்க செய்துக்கொண்டு....

Friday, December 2, 2011

உங்கள் வாழ்த்தினை வேண்டி....

 அன்புள்ள அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் / உறவுகளுக்கும்,

உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக்கொள்வதில் ஆனந்தமடைகிறேன்...

எனக்கும், பெங்களூரை சேர்ந்த மம்தா என்கிற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் செய்ய, வருகின்ற டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை, காலை 11 மணி அளவில் பெங்களூரில் பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது.... உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்தையும் மற்றும் ஆசிர்வாதத்தையும் வேண்டி என்றென்றும் நான்......

(தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கவில்லை என்று வருத்தம் வேண்டாம்.. திருமணத்திற்கு அனைவரையும் கண்டிப்பாக அழைக்கிறேன்... இது எளிமையான முறையில் பெண் வீட்டில் நடைபெறுவதால் உங்கள் அனைவரையும் அழைக்கமுடியவில்லை என்னால்...)

Dear Friends,

I am so happy to share my feel................

My Engagement is fixed on 04-12-2011 at 11.00AM in Bangalore.....

Tuesday, November 29, 2011

வாழ்க்கை...வாழ்க்கை ஒரு வியப்புகுறிதான்!
வியப்புகுறி போல்பலர் நிமிர்ந்து
நிற்க ஆசையில் முற்படுகிறார்கள்
ஆனால்
வினாகுறி போல்சிலர் குனிந்து - ஏனோ
நிற்க முடியாமல் வளைகிறார்கள்???

வாழ்க்கையில்,
ஒரேயொரு வியப்புகுறி வருகிறது
ஆனால்...
பல வினாகுறிகள் ஒன்றன்பின்
ஒன்றாய் தொற்றி உடன்வந்து - மனதில்
குழப்பத்தை மட்டும் பாவிக்கின்றது...

வினாக்களை கண்டு தொ(கு)லைந்துபோகாமல்
வியக்கும் வகையில் உயர்த்திக்கொள்ள
விருவிருப்பாக வாழ்க்கையென்னும் ஓடுகளத்தில் - பலரும்
விரைந்துசெல்ல ஆயுத்தபடுத்திக்கொண்டு அதில்நானும்...

Tuesday, November 22, 2011

அவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (1)விண்ணில் இருக்கும் வானம்
பார்த்து கண் மயங்காதோர்?
மண்ணில் உண்டெனில் ஆச்சர்யம்தான்!!!
வஞ்சி உன்னை கண்டும்
நெஞ்சம் வாடோதோர் இங்கே
மண்ணில் உண்டெனில் ஆச்சர்யம்தான்!!!
வஞ்சியும் வானமும் கிட்டதட்ட
ன்றென கூட சொல்லலாம்!

மேகம்!!! நட்சத்திரம்!!! நிலவு!!!
வண்ணங்கள் என்றுபல விந்தைகள்
நிறைந்த எந்தன் இரவுவானமே
உனக்கும் அவள்தான் போட்டி...

வானில் இவைகளை கொண்டும்
லஜாலங்கள் செய்தும் என்னையும்
என்கண்களையும் கட்டியும் போடுகின்றாய்
பார்ப்பவர்களையும் வியக்க வைக்கிறாய்...

மேகம் மூடாத வானம்
நட்சத்திரம் நிறையாத வானம்
நிலவு இல்லாத வானம்
வண்ணங்கள் நிரம்பாத வானம்
இப்படி பலநிலைகள் இருந்தாலும்
எப்படியும் காணும் கண்களுக்கு
நீலவானமாய் ரசிக்க தெரிவதுபோல
அவளும் உனக்கு போட்டியாய்....

அவள் யாரும் இல்லை
எந்தன் காதல் தேவதைதான்
தொலைத்தூரத்தில் நீயிருந்து என்னை
மயக்கி சொக்க வைக்கிறாய்...
அவளோ நான் கண்மூட
என்முன் வந்து செல்கிறாள்...

Friday, November 18, 2011

மீண்டு(ம்) உயிர்வாழ்வேன்....ன் இதயத்தின் ஓரத்தில்
ஒரு மூளையில் உனக்கெனவும்
சிறு இடம் ஒதுக்கிவைக்கிறேன்
ன்னை விட்டு நீயும்
சென்ற பின்னும் அப்பகுதியை
வெட்டி எறிந்தும் உயிர்வாழ
என்னை நானே மீண்டும்
எனக்குள் ஆயுத்த படுத்திக்கொள்கிறேன்.

Thursday, November 17, 2011

எப்படி உணர்த்துவாயோ?...


எந்தன் உதடுகள்
கொடுக்கும் சத்தத்தை
வாங்கி முத்தமாக
கொடுக்க தெரிந்த
அலைபேசியே!!!
கண்கள் சிந்தும்
கண்ணீர் துளிகளை
எப்படி உணர்த்துவாயோ?

Wednesday, November 16, 2011

சொல்லிழந்து...

உந்தன் அபிப்பிராயம்
என்னவென்று கேட்டாய்?
பேசும் திறனிருந்தும்
பேசாமுடியா ஊமையாய்
உந்தன் முன்னால்
என்னுடைய நிலைமை
இதுவென்று சொல்லமுடியாமல்!!!
இனிப்புக்குள் சிக்கி
வெளிவரும் எறும்பாய்
நீருக்குள் விழுந்து
கரைசேரும் எறும்பாய்
பேசும் மொழியற்று
பயம்கூடிய உணர்வுடன் - எதிர்கால
வாழ்க்கையை நோக்கி நான்...

Tuesday, November 15, 2011

என் நிழலும்... நிலவும்... நீயே...யார்
அறியக்கூடும்?
என்னை எனக்கு பிடிக்கவில்லை
காரணம் நான் அறியேன்
ஆனால்!
எந்தன் நிழலையோ எனக்கு
மிகவும் பிடித்து இருக்கிறது
ஏனெனில்?
என்னையே எனக்கு அழகாய்
எந்தன் கண்களுக்குள் காட்டுகிறது...
காரணம்?
ிழலின் உருவத்திலும் நீதான்
நிழல்தந்த முழுமதியும் நீதான்...