Thursday, May 7, 2009

கண்ணீர்அஞ்சலி

நண்பா!

அவள்பேசிய ஒன்றிரண்டு சொற்கள்
நீவாழ்க்கையில் சேர்த்திட சொத்துக்கள்...
அவள்எழுதிய ஒன்றிரண்டு வாக்கியம்
உன்வாழ்க்கையில் நிகரில்லா காவியம்...
அதுநினைவில் நிற்கும் ஓவியம்
உன்நெஞ்சில் என்றும் உயிரோவியம்.

அவளைஅடைவது நீகொண்ட இலட்சியம் - நீ
இல்லாமல்போனது அவள்செய்திட்ட துரதிஷ்டம்...
நிழல்கள் நிஜங்களின் எச்சம் - அவள்
நினைவொன்றே உன்நெஞ்சில் மிச்சம்.
உன்காதலுக்கு நல்மருந்து பரிவு என்றாய்
உன்மரணத்திற்கு தரமறந்தது அன்பா?

அவளை கண்ணீர்சிந்தாமல் காப்பதற்கு
உன்னின் செந்நீர்சிந்தியாவது காப்பேன்என்றாய்.
கூறியதுபடியே செய்துவிட்டாய்
உன்இன்னுயிரை நீர்த்துவிட்டாய்
அவளிடம் கண்ணீரை கண்டாயோ?
இனிஎப்படி அவள்கண்ணீர் துடைப்பாய்?

நண்பா!!!

சங்கீதம் மொழிகள்அற்றது
சந்தேகம் உடலைகுடித்தது
அவள் சம்மதம் அளித்தால்
சிந்தனை சங்கமிக்கும்என்றாய்
அவள் சம்மதம்தர மறுத்தாளோ
மரணத்தை சங்கமித்துவிட்டாய்...

உனக்கு தெரியாமல் பிறப்புநேர்ந்தது என்றாய்
தெரியாமலே இறப்பும் நேர்ந்திருக்க கூடாதா?
சுட்டுவிழியால் சுட்டெரித்தால்
சுழலில் கலந்திடுவேன் என்றாய் .
பதிலில் மௌனத்தை காட்டியிருந்தால்
பல்லாண்டு வாழ்ந்துஇருப்பாய்.

கண்ணீராய் சொல்லாமல் சொன்னாளோ
உன்மெய்தனை செல்லரிக்க வைத்தாளோ.
உயிர்கீற்று உன்னைவிட்டு பிரிந்தாலும்
காதல்காற்று உள்ளத்தைவிட்டு பிரிவதில்லை
காதலுக்காக நீசிந்திய செந்நீருக்கு
உன்ஆத்மா சாந்திக்காக என் கண்ணீர்துளிகள்...

1 comments:

Unknown said...

தங்களின் உயிரோட்டமுள்ள வரிகளினால் சோகத்தின் ஆழத்திற்கே சென்றுவிட்டேன்.......