Thursday, September 30, 2010

நட்பும்... காதலும்...

பிறப்பு
சில நொடியில் பிறக்கின்றது
வாழ்வு
பல நாட்கள் வளர்கின்றது
இறப்பு
வாழ்நாள் முழுதும் நிலைக்கின்றது - நினைவாய்

Monday, September 27, 2010

அழுகுரல்...

உந்தன் குரலால் எங்கள்
மனதினை கரைப்பவளே
உந்தன் குரலே இன்று
கரைந்திருந்தது ஏனோ?

கணீரென்று எக்கணமும்
ஒலிக்கும் குரல்
கண்ணீர் சிந்தும்
குரலாய் கேட்டதேனோ?

இடைவெளி விட்டுவந்த
எந்தன் குரலை நீகேட்கமறுத்தாய்...
அப்படியிருக்க!
தடைப்பட்டு வெளிவரும்
உந்தன் குரலை நான்கேட்பேனா?

Sunday, September 26, 2010

நிறைவேறுமா?

எந்தன் மனதுக்குள்
எண்ணற்ற ஆசைகள்
கனவாய் தோன்றி
காணாமல் போனாலும்..
மற்றவர்களின் ஆசைகளுக்காவது
உற்றதுணையாக இருந்து
உயிர்கொடுக்க நினைக்கிறேன் - அவையாவது
நினைவாகி போகட்டும்..

Saturday, September 25, 2010

புலிகளின் மரணம்...


எல்லா ஊடகத்தின்
வழியிலும் உன்நிலை
சொல்கின்றோம்...

உன்னை காப்பதற்கு
மாற்று பலவழிகளை
சிந்திக்கின்றோம்...

அழிந்துபோகும் உன்னை
அழியாமல் காக்க
துடிக்கின்றோம்...

இன்று!
நீயுண்பதை அளிக்காமல்
மாற்று உணவை
அளிக்கின்றோம்...

விலங்கென்றால் பயமில்லை
மனிதர்கள் நாங்கள்
நீங்களாய் மாறிக்கொண்டு
வருகின்றோம்...

உன்னுயிரை காக்கவும்
பிறஉயிரை அழிக்கவும்
தவிக்கின்றோம்...

மனிதர்கள் கொல்வதை
தடுக்க முடியாமல் - உனைமட்டும்
பகைக்கின்றோம்...Friday, September 24, 2010

இயற்கை...

பார்க்க நினைத்து
பார்க்காமல் போனாலும்
வர்ணித்து கவிபாட
கவிஞர்கள் பலரிருக்க...
உன்னை கண்டுபின்
ரசித்துக்கொண்டே மகிழ்ந்த
உன்னழகினை நான்
சொல்லாமல் போனாலே
உன்னை விரும்பியது - உண்மையில்
பொய்யாய் போய்விடும்...

புறவழிச்சாலை என்றாலே
ஊருக்கு வெளிப்புறமாய்
பிரித்த அகலபாதையாய்
செல்வதற்கும் வருவதற்கும்
தனித்தனி புறமென
பரந்து விரிந்திருக்க
நீயும் புடைசூழ்ந்திருக்க
பயணத்தின் வேகத்தில்
உள்ளமும் மகிழ்ந்திடும் - செல்லும்
தூரமும் குறைந்திடும்...

இன்பமான அத்தருணத்தில்
மனதினை கொள்ளைக்கொள்ளும்
காட்சியாய் வனப்பென
கண்டதை வார்த்தையால்
சொல்லியும் தீராத
வியப்பாய் விசித்திரமாய்
விந்தையாய் வேடிக்கையாய் - நீ
என்னுள் இக்கணமும்...

இல்லாளின் தலைபோல்
இருகூறாய் வானில்நீ!
ஒருகையின் பக்கம்
உன்னை மேல்நோக்கி
 உற்று பார்த்தேன்
வெள்ளைநிற காகித்தில்
சிறுபுள்ளியாய் இருந்தாலும்
கண்ணில்பட்டு மறையாத
கருமையாய் அல்லாது
நீலநிற வானத்தையே
கருநிற மேககூட்டத்தால் - எங்கும்
காணாது செய்ந்திருந்தாய்...

மறுகையின் பக்கம்
தலைசாய்த்து உன்னை
காணாது கண்டேன்
மனதுக்குள் மலைப்புதான்!
நீலநிற கடலில்
பொங்கிவரும் நுரைபோல்
வெண்ணிற முகில்கள்
அங்கெங்கே ஒன்றாய்தவழ
வானும்கடலும் ஒன்றென - எந்தன்
பார்வையில் நிறைந்திருந்தாய்...

மிதவேக பயணத்தில்
இதமாய் காற்றும்
பேருந்துக்குள் வீசியிருக்க!
வசந்தகாலத்தில் பூக்கதொடங்கிய
மரங்கள் பலவண்ணங்களில்
செறிவை அள்ளிதந்திருக்க!!
எனைபார்த்து அவைசிரிக்க
இளந்தென்றலாய் என்மேனியில்
மோதிவிட அதனிலும் - கண்மூடி
நான் மயங்கியிருக்க!!!

இதுவரை!
பார்த்திடாத முகத்துடன்
பகிர்ந்துக்கொண்ட விசயங்கள்
பலநூறு இருக்க
பார்த்திட்ட உன்னழகை
பங்குபோட்டு சொல்லி
பேசிமுடிக்கும் முன்பே - எனது
பயணம் முடிந்திருக்க...

இயற்கையே!!
மயக்கும் பாதையாய்
இன்று என்னுள்நீ
மறக்காத பொழுதாய்
இன்றும் என்றும்நீ
நீயுமென் காதலிதான் - நான்
மண்ணில் மடியும்வரை...

Thursday, September 23, 2010

நினைவுகளை அழிக்க...


வெந்நீரில் தினம் குளிக்கின்றேன்
செந்நீர் இல்லாமல் வடுக்களாய்
உந்தன் நாவால் சுட்டதுபோல்
எந்தன் மேனியில்...

உன்நினைவாலே சுட்டு பொசுங்கும்
பொன்னான மேனி என்பதனாலா?
மண்சுடும் வெந்நீரை என்மேனியில்
ஊற்றியும் ஒன்றும் செய்யாமல்
போனது என்னை?

உன்நினைவுகள் வீழ்ச்சியடைய
நீர்வீழ்ச்சியாய் சாய்த்துக்கொள்கிறேன்
தலையில் விழுந்து
தரையில் வீழ்ந்து
உன்நினைவால் அவையும்
நீர்த்துப்போகின்றன...

மடியவில்லை உன்நினைவுகள்
என்மனதுக்குள்
ஆனால்!
தளர்கின்றது நரம்புகள்
என்னுடலுக்குள்...

உன்நினைவுகள் என்னை
பிரியாவிடினும்
நீயில்லாமல் மண்நோக்கி
பிரிந்துக்கொண்டு
என்னுயிர்...

ஆவியில் குளியலறை சுவரும்
கண்ணாடியில் எந்தன் முகமும்
தெரியாமல் மறைகின்றது...
ஆனால்!
அக்கனமும் என்கண்கள் உன்முகத்தை
பிம்(இன்)பமாய் காண்கின்றது...

Wednesday, September 22, 2010

இறப்பும்... பதிலும்...


ஒருவேளை உனக்குமுன் நான்
இறந்து போனால் நீவந்து
என்னை பார்க்க வருவயா?
இதுதான் என்னுடைய பதிலாய்
உன்கேள்விக்கு அளிக்க நினைத்தது - உன்னிடம்
கேட்காமல் போயிருந்தாலும் என்மனதுக்குள்....


நீவரமால் போககூடும் நானறிவேன்...
காரணம்?
என்னை பார்க்கவே பிடிக்காமலோ
என்சடலத்தை பார்க்க பிடிக்காமலோ
அல்ல..
என்மரண செய்தியை கேட்ட
உன்னிதயம் துடிக்க மறக்ககூடும்
அதனால் உன்நினைவை நீயிழந்து
என்னை காணாமல் போககூடும் - என்பதனை
என்சடலமும் அறியும் நானுமறிவேன்...

ஒருவேளை எனக்குமுன் நீஇறந்தால்...
கண்டிப்பாக உன்னையும் உன்கோலத்தையும்
காண நானும் வரமாட்டேன்...
காரணம்?
என்னுயிர் என்னுடலில் இருந்தால்
தானே வந்து உனைபார்ப்பதற்கு...
ஆனால்
என்னுயிராகிய உன்னை காண  - எங்கிருந்தாலும்
என்னுயிர் வந்துசேரும் நீயுமறிவாய்...

Tuesday, September 21, 2010

கற்பனை...

என் கவிதையின் கருவிற்கு நீசொந்தம்...
என் கவிதைகளுக்கு யார் சொந்தம்?
என்றேன்...
உன் கவிதையின் கருவிற்கு மட்டுமல்ல
நான் கருவாய் வயிற்றில் ஜனித்ததும்
நான் உயிராய் உலகில் வாழ்வதும்
உனக்காகவே...
என்றாள் பின்னூட்டமாய் என் கற்பனையில்.

Monday, September 20, 2010

உனக்காக...

பெண்ணே!!!
எந்தன் பரிவு
மட்டுமில்லையடி
எந்தன் பிரிவும்
சந்தோஷமென்றால்
உனக்கு அதனையும் - நான்
தரமறுப்பேனா?

சொர்க்கம்...

தினம்....
உந்தன் முகம் பாராது
உந்தன் குரல் கேட்டு
மரணத்தின் வாசலில் நின்றிருந்தேன்...
உந்தன் குரலும் கேளாது
இன்று சொர்க்கத்தை காண்கின்றேன்.

Sunday, September 19, 2010

மரணம்....

அவளை அடைய முடியாமல்
போனதால் உன்னை அடைய
நினைத்தேன்....

அவள்தான் என்னை தழுவாமல்
மறுத்தால் என்றால் நீயுமேன்? - என்னை
கைவிடுகின்றாய்...

அவளின் இதழ்களை முத்தமிட
துடித்த என்னிதழ்கள் உன்னை
முத்தமிட துடிக்கின்றன - அவள்போல்
நீயும் மறுப்பதேன்?

வேண்டா மண(ன)ம்...

பெண்ணே...

நான் யாரையாவது மணந்தால்
உன்னை மறப்பேன் என்றுநீ
சொல்லியதால்...
மணக்க யாரையும் மறுக்கின்றேன்
மணத்தலையே மறக்கவும் நினைக்கின்றேன்
என்வாழ்வில்...

Saturday, September 18, 2010

நன்றி... (பிறந்தநாள் வாழ்த்துகள்)

அன்பாலும், அரவணைப்பாலும்...
நாவாலும், நேசத்தாலும்....
பண்பாலும், பாவாலும்
என்னை வாழ்த்திய
ஆதிரா
பாலன்
மணி
ஈகரை உறுப்பினர்களுக்கும், உறவுகளுக்கும், வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Friday, September 17, 2010

விளையாட்டு வினையானதோ?

நண்பா!
புதிதாய் சிறகு
முளைத்து பறக்க
நினைத்த பறவையை
பிடித்து அதன்சிறகை
ஒடித்தெறிவதாய்...

அவள் எண்ணத்தை
புரிந்து கொள்ளாமல்
உன்எண்ணத்தை
காட்ட முடியாமல்...
பறவையின் சிறகை
கிள்ளியதுபோல்நீ....

சிறகை கிள்ளியிருந்தாலும்
பராவாயில்லை
உன்வார்த்தையால்
அவளையே கொன்றாயே...
இணையத்தின் வழியே
இதுஏனோ?

இணையம் இனி
தேவை தானோ?
அவள் மனதினுள்
கேள்வியோடு....
மறந்தாலும் மனதினில் - சுட்ட
நினைவுகளோடு...

Wednesday, September 15, 2010

உன்னுடன்...


இன்றே இப்பொழுதே இன்பமாய்
இறந்துவிடலாமென்ற இன்சொல் அல்லாத
வன்சொல்லில் இதமாய் மடிந்துக்கொண்டு…
மலரின் மகரந்தத்தில் மதுஅருந்தி
மலருடனே மடிந்துபோக நினைக்கும் - புதுவண்டு
ம(இ)னமாய் நான் வாழ்ந்துக்கொண்டு…

Tuesday, September 14, 2010

என் இழ(ற)ப்பு...

அன்று நான்
அவளை இழந்ததால்
இன்று உன்னை
நான் அடைந்தேன்...
ஆனால்!!!
இன்று நான்
உன்னை இழந்தால்
நாளை என்னை
நானே இழப்பேன்....

Monday, September 13, 2010

உதவி...

இணையமே!
அவளோடு
இணைந்திருக்க
சரணம்
அடைகின்றேன் - உன்னிடம்
அனுதினம்...

யார் குற்றவாளி?

வீசியது தென்றல்
விலகியது உன்னாடை
உனையறியாமல்…

விலகியது உன்னாடை
வீழ்(விழு)ந்தது என்கண்கள்
எனையறியாமல்…

இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விலகுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

நீ சொல்கின்றாய்
நான் குற்றவாளியென்று…

காற்று சொல்கின்றது
உன்னாடையும்
என்பார்வையும் குற்றவாளியென்று.

நான் சொல்கின்றேன்
காற்றாய்வீசி உன்னை
வருத்தாமல்...
தென்றலாய் தீண்டியதனால்
குற்றவாளி காற்றல்ல….

உன்மேனிக்கு ஆடையே
பாரமென்று…
சுமைகுறைக்க விலகியதனால்
குற்றவாளி நீயுமல்ல…

அப்படியென்றால்
குற்றவாளி நான்தானே?
இல்லையடி! பெண்ணே!!
இல்லை…
வீசும் தென்றலினால்
மயங்கி திரும்பியவன் - எதிர்பாராது
காணாத உன்னழகில்
மீளாது போனேன்…

இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

Friday, September 10, 2010

தண்ணீர்... தீர்த்தம்..


நேற்று...
உன்வீட்டில் தூத்தம்!!!
இன்று...
என்வீட்டில் தீர்த்தம்!!!

உன்வீட்டில் பிடித்துவந்த தண்ணீரை
தினமும் நான் தீர்த்தமாய்
நினைத்து குடிக்கின்றேன் என்வீட்டில்...

மற்றவர்களுக்கு வேண்டுமானல் அது
தாகம் தணிக்கும் தண்ணீர்தான்.

ஆனால்
அது எனக்கு உயிரை
காக்கும் கொடுக்கும் திரவமாய்...

உந்தன் கைகளினால் எனக்கு
அன்போடும் ஆசையோடும் அருளியதாலும்...

Wednesday, September 8, 2010

உன் பதில்...

என் கேள்விக்கு
உன் பதிலில்
எதிர்ப்போ மறுப்போ
எதுவோ இருந்திருந்தால்
என் காதலியாய்
உன்னை இழந்திருப்பேன்
ஆனால்!
என் காதலை
நான் இழந்து - நிற்க
எந்நாளும் நினைக்கமாட்டேன்...

நீ... நான்... அணு...

அணுவின்றி பொருட்கள் ஏதுமிருக்காது
ஆராய்சியாளன் சோதனையில்
கண்டுபிடித்தது...

அவளின்றி அசையாது ஓர்அணுவும்
கவிஞன் சோகத்தில்
உணர்ந்தது...

அணுவின் பிளவில் அழிவிருக்கும்
உண்மைதான்...
அவளின் பிரி(ள)வில் என்அழிவு.

ஓர்அணுக்குள் மூன்று துகள்கள்
உனக்கு நானும் அணுவாய்
நண்பனாய் காதலனாய் கணவனாய்
இருக்கும் ஆசையில் என்றும்...

உன் நினைவும்... நானும்...

பெண்ணே!!!
என்கனவு என்பது விடியும்வரை
உன்நினைவு என்பது கல்லறைவரை
இது ஓர்கவிஞனின் கவிதை!
உன்னை மறக்க முடியாமல்
உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான் பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும் - மறப்பேன்
உன்நினைவை...

நீ... நீர்... நாம்...

நீரின்றி அமையாது இவ்வுலகு
அறிஞனின் அனுபவத்தில்...

நீயின்றி அமையாது என்னுலகு
கவிஞனின் கவிதையில்...

நாமின்றி அமையாது இவ்வுலகு
காதலரின் சொல்லில்...

நம்மையன்றி இவ்வுலகில்லை எவ்வுலகும் - அமையவேண்டாம்
நம்மின் வேண்டலில்...

மந்திர நாமம்...

பனிக்கட்டியாய் உறைந்த என்மனதினை
பனியை போக்கும் சூரியனாய்
என்இதயத்தை மாற்றி யமைப்பது - உன்பெயரின்
முதல்பாதியை உச்சரிக்க நினைக்கும்கணம்...

உன்நினைவால் துடிக்கும் என்இதயத்தை
உறைய வைக்கும் நிலவாய்
என்மனதை மாற்றி யமைத்தது - உன்பெயரின்
மறுபாதியை உச்சரித்த மறுக்கணமே...

வருத்தமும்... சந்தோஷமும்...

என்அலைபேசியின் வழியே எனக்கு
தெரியாமல் போகின்றது கன்னி
உந்தன் மனம் என்னவென்று?
வருத்தம்தான்...

உன்அலைபேசியின் வழியே உனக்கு
தெரியாமல் போகின்றது கண்ணீர்
சிந்தும் எந்தன் முகம்!
சந்தோஷம்தான்...

நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?

உந்தன் சுட்டுவிழியாலும்
சுட்டுவிரலாலும்
உந்தன் வீட்டிற்குள்
வீற்றிருக்கும்
எல்லாவற்றையும் சுட்டி(ற்றி)க்காட்டி
இவை
எல்லாம் எனக்கு
சொந்தமென
சொல்லால் எடுத்துக்க - என்னிடம்
சொன்னாய்..

காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம் என்பதனை - உனக்கு
தெரிந்தேதானோ?

சுட்டிய விரலையும்
காட்டியதில்
எதனையும் தொடமல் - இவன்
போனதேன்?

உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துக்கொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா?

என் மனம்...

உன்னை பிரிந்து
வீட்டை விட்டு
வெளியேறிய சமயம்
என்மனம் கல்லாய்
போயிருந்தால் உன்வீட்டினில்
உந்தன் உள்ளத்தினில்
உள்ளேயே சுயம்புவாய்
உருமாறி இருந்திருப்பேன்...

ஏனோஅது  உடைந்து
பொடிபொடியாய் சிதறி
போனதனால் என்னுயிர்
உன்னை விட்டுபிரிந்து
உன்நினைவோடு காற்றினில் - கலந்து
என்வாசல் வந்தேனே...

Sunday, September 5, 2010

வசந்தம்...

கால பருவத்தில்...
வியர்வை தரும் கோடைக்கு
பின்னால் வசந்தம் பிறந்தது...
ஆனால்!
என் பருவத்தில்...
பாவை உந்தன் வாடைக்கு
பின்னாலே வசந்தம் பிறக்கின்றது...

Saturday, September 4, 2010

மென்மையும்... வாசமும்...ஓர் இரவு...

பெண்ணே!
என்னுயிரும்   உள்ளமும்
நீயென நானிருக்க
உன்நினைவுகளோடு நித்தம்
தூங்காமல் நானிருக்க
உன்னோடு பேசிக்கொண்டே - ஓர்இரவை
க(ழி)ளித்திருக்க மறுத்திருப்பேனா?...

ஓடையில் தாகம் தணிக்க
ஓர்சோடி மான்கள் விட்டுகொடுத்த
ஓர்கதையாய் நாம் பேசவிரும்பி - பேசாமலே
ஓர்இரவு  சுகமான நினைவாய்...

Friday, September 3, 2010

விருந்து...

நீதரும் நினைவுகள் ஒருபுறம்
சலிக்காமல் என்னுள் தோன்றிக்கொண்டு…
உன்னோடு உண்டநேரங்கள் மறுபுறம்
மறக்காமல் என்னுள் சுற்றிக்கொண்டு….

பெண்ணே!
சுவையாய் அருஞ்சுவை
உண்ண நினைத்திருந்தால்
உணவகம் அழைத்திருப்பேன்
உன்னோடும் உண்டிருப்பேன்…

ஆனால்!
உன்கரத்தால் கலப்படமற்ற
அன்பும்கலந்த அமிர்தத்தை
மிஞ்சும்ஓர் புதுசுவையை
உலகத்தில் இழந்திருப்பேன்…

உணவை மட்டுமல்ல
உன்னோடு உண்ட
அத்தருணத்தையும் இன்று - அதுதரும்
இந்நினைவையும் சேர்த்துதான்...

வேண்டுகோள்...

பெண்ணே!!!

நீவிரும்பியதை சொல்லாமலே
நான்செய்தால் மகிழ்ந்திடு...

செய்யாததை செய்யவிரும்பினால்
ஒருமுறை சொல்லிவிடு...

சொல்லியும் செய்யவில்லையென்றால் - எனைமாற்று
இல்லை மறந்துவிடு....

Thursday, September 2, 2010

மனம் ஒர் ஊனம்...

ஊனமுற்றோர் இருக்கையில்
அமர்ந்து ஊனமுற்றோருக்கு
இடம்தர மறுத்துக்கொண்டு - மனம்
ஊனமுற்றவராய் சிலர்...

அவர்...
மனம்! கல்விகற்றும் கல்லாதவர்
செயலில் ஒன்றா?
இல்லை...
மனம்! கரையாதகல்லாய் போய்விட்ட
உணர்வுகளில் ஒன்றா?

உன் நினைவுகள்...


உந்தன்...
நிறத்தை முகத்தை உருவத்தை
பார்த்து காதலித்திருந்தால் என்றோ - ஒருவேளை
உன்னை மறந்திருப்பேன் என்வாழ்வில்...

உந்தன்...
குணத்தை மனதை அன்பைமட்டும்
காதலித்தனாலோ என்னவோ தெரியாது? - இன்றும்
மறக்கமுடியாமல் துடிக்கின்றேன் உன்நினைவில்...

Wednesday, September 1, 2010

நிலவும்... மச்சமும்...

நிலவு!
கருநிற வானில் கண்டுமகிழும்
உந்தன் முகமாய் இரவில்...
மச்சம்!
வெண்ணிற தேகத்தில் கண்டுவியக்கும்
ஒற்றை நிலவாய் பகலில்...

வண்ணத்துப்பூச்சி...

வானத்தில் பறந்து செல்லும்
வண்ணத்துப்பூச்சி கூட்டத்தை பார்த்து
மகிழ்ந்த இன்பமான உணர்வு...
ஆனால்!
பார்க்காமலே விந்தையாய் என்மனதுக்குள்!!!

சாலைபோக்குவரத்தில் வந்து சிக்கிய
மகளிர்கல்லூரி பேருந்துக்குள் மாணவிகள்
அமர்ந்த இடத்திலேயே தன்கண்களை
சிமிட்டி வண்ணத்துப்பூச்சியாய் பறந்துக்கொண்டு....
ஆனால்!
வண்ணத்துப்பூச்சியின் கண்களுக்குள் வண்ணத்துப்பூச்சியை
பார்க்கும் வியப்புடன் என்பயணம்!!!