Tuesday, July 17, 2012

என் கனவே…



என்னுயிரே!!!
எங்கு ஒளிந்து இருக்கிறாய்?
என்பது நன்றாக தெரியும்
என்னுடைய மனதுக்கு…
எனினும்
என்னுடைய கண்கள் காண
எப்பொழுது வருவாயென மட்டும்
எண்ணிக்கொண்டு நித்தம்…

Monday, July 16, 2012

இப்பொழுதெல்லாம்…



எந்தன்
கனவுகளிலும் கற்பனைகளிலும்
மலராய் மலர்கிறாய்நீ!!!
எந்தன்
கவிதைகளிலும் கண்ணிலும்
இத(ய)மாய் இருக்கிறாய்நீ!!!
எந்தன்
காதலியைவிட மண்ணில்
சுகமாய் சொர்க்கமாய்நீ!!!
எந்தன்
நினைவுகளில் நிழலாக - என்னுள்
உயிருக்கு உயிராகநீ...

Monday, March 19, 2012

காத்திருப்போடு....


குடிக்கும் தண்ணீர் தேவையென்றால்
கிடைக்கும் இடம்தனை தேடிச்சென்று
இல்லாத தண்ணீருக்கு எந்தாயவளும்
இயன்றளவில் மணிக்கணக்கில் காத்திருந்து - எப்படியோ
தனியாக கொண்டு வந்திருப்பாள்...

பசி தீர்க்கும் கஞ்சியை
படி அளந்து கொடுக்கிறார்கள்
என்றோ வயிற்றில் சுமந்த
என்னையும் அவள் இடுப்பில் - சுமந்தபடி
இங்கே நீண்ட வரிசையில்...

Friday, March 16, 2012

நீயளிக்காத முத்தம்...



பெண்ணே!!!
உன் இதழ்களால்
என்னை தீண்டிடாதபோதும்..

வானமகள் எனக்கு
வாரியளித்த முத்தமோ?
மழையின் முதல்துளி
மண்ணில் விழும்முன்
என் மேனியில்
இன்று தொட்டது...

அதனால்..
உண்டாகும் உணர்வோ
உந்தன் முத்தங்கள்
கொடுக்கும் ஸ்பரிசத்தை
கொடுத்து மெல்ல
மயங்கவும் என்னை
மகிழவும் செய்கிறதடி...

Thursday, February 9, 2012

அது...


அது!!!
இருள்படர்ந்த வானம்
துணையற்ற முழுநிலவு
கூரையில்லா மேல்தளம்
யாருமற்ற தனிமை
நிலவின் துணைத்தேடி
அவனது மனமும்பயணம்
திகட்டாத இன்பமாய்
நாசியினை தீண்டாமல்
மேனியை வருடிமெல்ல
மயக்கும் இயற்கைக்காற்று...

அது?
நிலவொளியின் குளுமையோ?
ராப்பொழுதின் தன்மையோ?
குளிர்காலத்தின் சிலிர்(ற)ப்போ
மரங்களின் தாலாட்டோ?
என்றே அமைதியாய்
வானம் பார்த்து
சிந்தித்து தனிமையை
மறந்திட்ட இடைவேளை....
காற்றோடு கலந்து
இசையாக வெளிவரும்
சங்கீதமாய் செல்போனில்
அவனுக்கான அழைப்பு....

அது
தனிமையை போக்க
வந்திட்ட ஒன்றோ?
தனிமையை உணர்த்த
வந்திட்ட ஒன்றோ?
அக்கணத்தில் விடைத்தெரியாத
ஒன்றாய் மனதுக்குள்...
ஒற்றை நொடியில்
எத்தனையோ சிந்தனைகள்
வியப்பான ஒன்றாய்
உண்மையான ஒன்றாய்...

அது தொடரும்.....

Wednesday, January 25, 2012

நீவேண்டுவது நானா?


வாழ்வில் சந்திக்கும்
தோல்விகள் போதுமென்று
தோள்சாய்ந்து மனமழுதிட
நீவேண்டுவது நானா?

உன்னைவிட கொடுமைகளை
சந்திப்போர் கோடியென்று
வார்த்தைகளால் ஆறுதல்சொல்லிட
நீவேண்டுவது நானா?

சோகமெல்லாம் மாறிப்போகும்
நடப்பதை எதிர்கொள்ளென
விரல்பிடித்து சொல்லிநடந்திட
நீவேண்டுவது நானா?

என்னைபோல் உனக்கு
எத்தனையோ நட்பிருந்தும்
அதுநானாக முடியாதென
நீவேண்டுவது நானா?

Monday, January 23, 2012

அன்பின் பரிமாணம்...


நாட்களை பொழுதுகளாக வகைபடுத்தி
சொன்னார்கள் முன்னோர்...
அன்பினை பொழுதுகளாக பிரித்தெடுத்து
சொல்லமுடிந்தது உன்னால்..

வேண்டும் என்றால் நெருங்கி
பழகும் தருணம்!
வேண்டாம் என்றால் விலகி
செல்லும் தருணமென்று...

அன்பினை பொழுதாக பிரித்தலில்
துளியும் வருத்தம் இல்லை...
மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளம்தான்
ஏனெனில்
உள்ளம் கொண்ட அன்பினை
வெறும் பொழுதுபோக்கு தானென்று
சொல்லாமல் இருந்த வரையிலும்...

Friday, January 6, 2012

உன் வருகைக்காக...


நான் குறிப்பெடுக்கும்
வெள்ளை காகிதமும்
என் நூல்குறிப்புகளின்
அச்சிட்ட காகிதமும்

எதை பார்த்தாலும்
எதை படித்தாலும்
எனக்குள் வரிகளாக
உன்னை ஞாபகபடுத்துகிறதே...

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...

Wednesday, January 4, 2012

அவளோடு நான்....




உதட்டுக்கும் தொண்டைக்கும் 
இடையில் சிக்கிதவிக்கும்
நாழிகையை போல்
எந்தன் மனது....

வானமே பூமிக்கு
இறங்கி வந்ததோ?
நிலவின் காதலனாய்
என்னை காண்பதற்கு...

வானத்தை சேலையாக
கட்டிவந்த சிலையே
ஆனந்தத்தை சோலையாக
கூட்டிவந்த மாலையே...

வானத்தில் நொடியில்
தோன்றி மறையும்
மின்னலாய் அல்லாது

என்றும் பிரியாது
சேர்ந்தே இருக்கும்
அன்றில் பறவையாய்

என்கூடவே நடக்கும்
காண்பவரை மயக்கும் 
அன்னமாய் வந்தாய்...

விண்ணில் தோன்றும்
மின்னல் எப்படியோ
மண்ணில் தோன்றியது
என்னோடு கலப்பதற்கு

கண்ணில் மட்டுமே 
காணகூடிய மின்னலே!
நானோ.. இன்று
உன்னுடனே பயணிக்கிறேன்..


ஆவலோடு கைபிடித்தேன்
ஆனந்ததோடு கட்டியணைத்தேன்
ஆதரவாய் தோள்சாய்ந்தேன்
ஆசையாய் இடைகிள்ளினேன்...

மோகத்தோடு முத்தமிட்டேன்
மனத்தோடு ஒன்றிணைந்தேன்
தாகத்தோடு விட்டுபிரிந்தேன்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...

இறங்கிதானே நடந்தேன் 
மாடிபடியில் உன்னோடு
கிறங்கி போனதனாலோ 
மேலேறிகொண்டு உன்மையலில்

சொக்கிபோன உன்னழகில்
சொர்க்கத்தின் படியைகாணவோ
கண்மூடி காற்றில்
உன்னோடு பறந்துகொண்டு... 

Monday, January 2, 2012

மொபைல் சிணுங்கல்...


பெண்ணே!
இதுவரை அவன் தலையணைக்கு
அருகில் உறங்கிவந்த நான்
இப்பொழுது மஞ்சத்தில் அவன்
நெஞ்சத்தின் மீது பள்ளிக்கொண்டு...
எல்லாம் உன்னால்!!! உன்வருகையால்!!!
உன்னோடு போட்டிபோடும் எண்ணம்
எனக்குள் துளியும் இல்லை...
ஆனால் பொறாமையாக பெருமையுடன்
அவனின் அரவணைப்பில் இதமாக - எல்லாம்
நீயாக நீவரும்வரை நான்...