Sunday, February 28, 2010

சபிக்கின்றேன்...

 
இன்று...
உன் பெயரைமட்டும் ஜெபித்த
என் உதட்டாலே சபிக்கின்றேன்
உன்னை...
என்னவென்றால் வளமோடு வாழ
என் மனதாலும் சபிக்கின்றேன்...
ImageBoo Free Web Hosting

Saturday, February 27, 2010

சரணம் இல்லை மரணம்...



உன்னை காண
நான் வருகின்றேன்...

ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...

இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...

இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்... 


ImageBoo Free Web Hosting


                                                                                               

Friday, February 26, 2010

பிரியும் நேரம்...


என்று உன்னை சந்தித்தேனோ
அன்றிலிருந்தே என்னில் சிந்தித்தேன்
என்னவென்று சிந்தித்தேன் என்றால் - மீண்டும்
உன்னை  காணும் வழியெண்ணி...

நினைத்துபார்க்க நினைவு பரிசினை 
உனக்காக நான் அளித்தேனடி
எனக்காக நீகொடுக்க எதுவும் - இல்லையடி
உன்னையே என்னிடம் தந்தபிறகு ...

என்னைவிட்டு பிரியும் நேரம்
என்னை எண்ணி நீயிருக்க
என்னிடம் கொடுப்பதற்கு என்னுயிரும் - இல்லையடி
எந்தன்வசம் முத்தத்தை தவிர...
ImageBoo Free Web Hosting

Thursday, February 25, 2010

நட்பு


நொடிகள் கடந்து 
வினாடிகள் மலர்ந்தது.
வினாடிகள் கடந்து 
மணிதுளிகள் மலர்ந்தது.
மணிதுளிகள் கடந்து 
நாட்கள் மலர்ந்தது.
நாட்கள் கடந்து 
வாரங்கள் மலர்ந்தது.
வாரங்கள் கடந்து 
மாதங்கள் மலர்ந்தது.
மாதங்கள் கடந்து 
வருடமாய் மலர்ந்தது.
வருடங்கள் கடந்து 
ஆயுள் மலர்ந்தது.
ஆயுள்கள் கடந்தும் 
நட்பு மலர்ந்தது இன்றும்...

(என் கல்லூரி நாட்குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

Wednesday, February 24, 2010

தூக்கம்...

எனையேனடி இப்படி
தழுவ வருகின்றாய்
நான் வேண்டாமென்றும்
பணிபுரியும் நேரமென்றும்
இடமென்றும் கூறியும்
என்னிரு கண்களையும்
கலங்க செய்தாயடி.
உனைதடுக்க கண்களை
திறந்தே வைத்திருந்தேன்
நிமிடத்திற்கு பலமுறைகள்
கண்களை சிமிட்டினேன்.
அப்படியிருந்தும் எப்படியோ
என்னை அறியாமலே
என்னுள் புகுந்தாயடி.
சாமியின் அருள்போல்
உடலுக்குள் புகுந்து
தலையாட்ட வைத்தாய்.
உன்னிடமிருந்து விடைபெற
முகத்தினை கழுவினேன்
தேனீரும் அருந்தினேன் - ஆயினும்
எனைபிரிய மனமில்லாமல் நீ...

உன்னை எப்படியாவது
தழுவிட வந்தேனடி.
நான் படுக்கைக்கு
வந்ததுமே நீயென்னை
அடைந்து மெய்மறந்திட
செய்திடுவாய் என்று
உள்ளுக்குள் நினைத்தேன்.
வரமால் போனதேனோ?
உன்னை அழைக்கவும்
இறுக்க அணைக்கவும்
செயல்களை சிலசெய்தேன்.
மெல்லிசையும் கேட்டேன்
மஞ்சத்தில் புரண்டு
புரண்டும் படுத்தேன்
கண்களை மூடியே
திறக்காமல் தவமிருந்தேன்.
நீயென்னை தழுவிய
வேளைதனில் நான்
உன்னை வெறுத்ததனாலோ
என்மீது கோபம்
கொண்டாயோ? வரமறுக்கிறாயோ? - எப்படியும்
மனம்மாறி வருவாயென நான்...

Tuesday, February 23, 2010

உண்மை அறிந்துகொள்ளடி...


உன்மேல் காதல் அரும்பியதும் உண்மை
உன்னை நான் விரும்பியதும் உண்மை.
உன்னை மனதில் வெறுப்பதும் உண்மை
உன்னோடு இனியும் வாழ விருப்பமில்லை.
உன் நினைவு சுவடுகளோடு மட்டும்
உலகில் வாழ விரும்புவது உண்மை.
உன்னை என் உயிரென கொண்டேன்
உன் வார்த்தைக்கும் உயிர் கொடுத்தேன்
என்னை உன் உயிரென கொள்வாயென.
என்னையும் என் அன்பையும் உதறி
என்னை உயிரோடு கொன்றாயே ஏன்?

காதல் வாழ்வின் உ(து)யரமா?

வறுமையில் வாடிய போதும்
செழிப்பின் உயரத்தை அறிந்தேன்
காரணம் உன்னை என்
மனதில் சுமக்க நினைத்(திருந்)ததால்...


 


செல்வம் செழிக்கும் போதும்
வறுமையின் துயரத்தை உணர்கின்றேன்
காரணம் என்னை உன்
மனதில் இருந்து தூக்கியெறிந்ததால்...

என் கவிதைகள்


உன்நினைவாலே
என்நெஞ்சில்
நான்படும்
வதைப்பை
எழுத்தின் வழியாக
உள்ளத்தில் உள்ளதை
இங்கே வதைக்கின்றேன்...
உன்னை புண்படுத்தல்ல
என்பதனை புரிந்துக்கொள்
இதனைநீ படித்தால்...

Friday, February 19, 2010

காதலால் ஊனம்...



காதலில்
சரசம் கொள்ளும்
விரசத்தோடு என்னோடு
நீயே பழகியிருந்தாலும்
சல்லாபம் அடையும்
சலனத்தோடு உன்னோடு
நான் பழகி 
இருந்திருக்கமாட்டேன்.

தோள்களும் உடல்களும்
உரசுவதை எண்ணியிருந்தால்
உலகத்தில்
ஊதாரியாய் நானிருந்து
மகிழ்ச்சியோடு இன்றிருந்திருப்பேன்.

உள்ளங்களும் எண்ணங்களும்
ஒன்றாவதை கருதியதால் என்னவோ?
உள்ளம்
ஊனமாக்கபட்டு நான்
வேதனைகளோடு இன்றிருக்கின்றேன்.

Thursday, February 18, 2010

தேன்நிலவு கனவுகள் - 3



 


பெண்ணே! பயணத்தின்
இருக்கையில் உன்னோடு
அருகாமையில் அமர்ந்தும்
என்இடது கரத்தினால்
உனதுகழுத்தை சுற்றிவளைத்தும்
உன்னிருகரங்களின் விரல்களுக்கிடையே
என்கைவிரல்களை பிணைத்தும்
என்தோளினில் உனையள்ளி
சாய்த்தும் உச்சந்தலையினை
முகர்ந்தும் பார்த்திடவேண்டும்...
சன்னல்களின் வழியாக
இயற்கையையும் ரசித்தும்
உன்காதினில் ஏதோரகசியம்
கூறுவதைபோல் கூறியும்
கூறாமலும் மென்மையாய்
காதுமடலினை கடித்திடவேண்டும்
எதிர்பாராத தருணங்களில்
கன்னத்திலும் கழுத்திலும்
என்இதழ்களை சப்தமின்றி
பதித்திடும் நாள் எந்நாளோ?

Wednesday, February 17, 2010

தேன்நிலவு கனவுகள் - 2


காலையில் சூரியகதிர்கள்
மண்ணில் விழுவதற்குமுன்
உடலை பனியும்குளிரும்
வருடிடும் சமயத்தில்
இருவரும் ஒன்றாய்
ஒரே மிதிவண்டியில்
இருபுறமும் பசுமை
சூழ்ந்திருக்கும் பாதையினிலே
பேசிடும் வார்த்தைக்கும்
ஓசைக்கும் இசைக்கும்
சற்றே ஒய்வுகொடுத்து
கண்களின் கைகளின்
ஆசைக்கும் இச்சைக்கும்
அங்கே இடம்கொடுத்து
புதியபாஷைகள் பேசி
உலாவரும் நாள் எந்நாளோ?

Tuesday, February 16, 2010

தேன்நிலவு கனவுகள் - 1


மழைதுளிகள் வானிலிருந்து
முகத்தினை அடைந்து
பின்
மேனியை நனைத்திட்ட
சமயத்தில் ஈரஉடல்கள்
இரண்டும் ஓர்உடைக்குள்
ஒன்றாய் சங்கமித்தும்...
பின்
ஒரு கோப்பைக்குள்
இருக்கும் சூடான
தேனீருக்கு மேலும்
தேகத்தின் சூடுதனை
அதனுள் ஏற்றியும்
பின்
தேனீரை மாறிமாறி
அருந்தியும் அதன்
வழியாகவும் தேகத்தின்
மோகத்தை குறைத்தும்
களிப்பும் மகிழ்ச்சியும்
அடையும் நாள் எந்நாளோ?

Monday, February 15, 2010

15.10.2010 அன்று 6:30AM


வெண்ணிற மேகங்கள்
ஆனாலும்
சூரியனின் கதிரால்
தனனில் மின்னும்
சுத்தமான தங்கத்தை
சேலைக்கு ஜரிகையாய்
தைத்தாற்போல
கடலுக்கு அலையாய்
மலைக்கு முகடாய்
என்கண்களுக்கு ஜோதியாய்
நீலவானில் இயற்கையாய்
ஜொலித்திட்ட காட்சி.

Sunday, February 14, 2010

இதுதான் காதலர் தினமா?


உள்ளத்தில் காதலைகொண்டு சொல்லிட
தயங்கும் ஒருவனின் எண்ணத்தையும்
தைரியத்துடன் வெளிப்படுத்தும் ஒருநாளோ?


இதயத்தில் காதலியைகொண்டு மகிழ்வாய்
இயங்கும் ஒருவனின் செயல்களை
ஆனந்தத்துடன் பகிர்ந்துக்கொள்ளும் திருநாளோ?


வாழ்வில் அவளைகொண்டு பிரிந்து
துடிக்கும் ஒருவனின் நினைவுகளை
சோகத்துடன் அசைபோடும் மற்றொருநாளோ?



மனதில் இச்சைகளைகொண்டு காதலாய்
நடிக்கும் ஒருவனின் சில்மிஷ்ங்களை
கலவரத்துடன் தடைபடுத்தும் கருநாளோ?

காதலை சொல்வதற்கும்
கொண்ட காதலை மகிழ்வதற்கும்
காதலின் அடுத்த நிலையை அடைவதற்கும்
கொள்ளும் காதலையும் அடுத்த நிலைகளையும் தடுப்பதும்
இன்று ஒருநாளா? இந்த காதலர்தினம்.

Saturday, February 13, 2010

நான் தனியே...


நீ
கணிணிமையத்திற்கு வருவதற்கு முன்பும்
செல்வதற்கு முன்பும்
நான்தனியே எத்தனைமுறை உன்னோடுபேசும்
ஒத்திகையோடு பாதையை கடந்திருப்பேன்.

நீ
கிருஷ்ணன்கோவிலுக்கு வருவதற்கு முன்பும்
செல்வதற்கு முன்பும்
நான்தனியே அடுத்தமுறையாவது உன்னோடுசேர்ந்து
வரவேண்டுமென்று பிரகாரத்தை சுற்றிவந்திருப்பேன்

நீ
பேருந்தில்கல்லூரிக்கு செல்லும் போதும்
திரும்பி வரும்போதும்
நான்தனியே இன்றாவது உந்தன்பார்வை
என்மீதுவிழ படியில் தொற்றிபயணித்திருப்பேன்

நீ
பயிற்சிவகுப்புக்கு செல்லும் போதும்
திரும்பி வரும்போதும்
நான்தனியே என்றாவது உன்கரம்பிடித்து
ஒன்றாயிணைந்து வலம்வர எண்ணிமகிழ்ந்திருப்பேன்.

அன்று
உன்னோடு நான் வாழநினைத்த கனவுகள்
எல்லாம் நினைவாய் போனதடி

இன்று
என்னோடு நீ வாழ்ந்திட்ட நினைவுகள்
எல்லாம் கனவாய் போவதேன்

நான்தனியே
காதலின் வடிவில் கனவிலும் சரி
நினைவிலும் துடியாய் துடித்துக்கொண்டே...

Friday, February 12, 2010

உன் திருமண அழைப்பு...



சிவனே!
எத்தனையோ மனிதர்கள்
நெஞ்சத்தில் உனைவைத்து
நாள்தோறும் பூஜித்தபோதும்
கிடைக்காத வரத்தை...
எதிர்பாராமல்
உன்னருள் என்னவென்று
தெரியாமல் பிழைபோல்
வேடன்
செய்த்திட்ட செயல்தன்னில்
உள்ளம் குளிர்ந்தாய்
சிவராத்திரி எனும்நாளை
எங்களுக்கு வழங்கினாய்!




காதலியே!
எத்தனையோ ராத்திரிகள்
உள்ளத்தில் உனைநினைத்து
தினம் அன்பையாசித்தபோதும்
கிடைக்காத காதல்...
எதிர்பாராதபடி
உன்வாழ்கை அமைந்ததென
தெரிந்தே செய்தாய்
மனம்
செய்வது என்னவென்று
தெரியாமல் முடிவெடுத்தாய்
திருமணம் அழைப்பிதழை
எனக்கு அளித்தாயடி.

Thursday, February 11, 2010

ரம்மியமான காலைபொழுது (11/02/10, 9.00AM)


ரம்மியமான(வளே) 
காலைதன் வேலைதன்னை காட்டியது
மூடுபனியும் உடல்தன்னை வாட்டியது
சோகத்தின் வலித்தன்னை கூட்டியது
சூரியனும்தன் முகத்தினை மறைத்தது ஏனோ?
உந்தன் பார்வைபடாத காரணத்தினாலோ - அல்லது
உந்தன் வரவுதன்னை வரவேற்க எண்ணியோ!

Wednesday, February 10, 2010

என் இதயகோவில்...

என்இதயம் என்னும் கோவிலில்
இதயதுடிப்பும் என்னும் மந்திரம்கூட
உன்பெயர் சொல்லிதான் துடிக்கின்றது.
என்மனம் என்னும் விளக்கில்
ஆசை என்னும் திரியும்கூட
உன்நினைவு வடிவில்தான் ஒளிருகின்றது.

அங்கு அதில் அன்று,
நீசொன்ன பதில் வார்த்தைகளும்
காதலிக்கின்றேன் என்னும் சொல்லும்
காற்றாக என்மனதை அடைந்து
தென்றலாக மாறி இதயதீபத்தை
பிரகாசிக்க வைத்தது வாழ்கையாய்.

என் அன்பே இன்று,
பிரியும்முன் உன்னுடைய கண்ணீரும்
மறந்துவிடுவோம் என்னும் வார்த்தையும்
மழையாக என்மனதை வதைத்து
புயலாக மாறி இதயதீபத்தை
மட்டுமில்லை என்னையும் அழிக்கிறது.

Tuesday, February 9, 2010

என் தஞ்சையும் காதலியும்...

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி
விளையாடிடும் பசுமை தரணிபோல!
புன்னகையும் பொன்நகையும் கூடி
மின்னும் மங்கையைடி நீயெனக்கு.
 
பல்வேறு பூக்களின் கோர்வைசரமாய்
ஊரை மயக்கிடும் கதம்பம்போல!
உடல்பாகங்களின் தொகுப்பின் செறிவில்
வியக்க வைக்கும் அழகொனக்கு.

வர்ணங்களும் கற்களும் கலந்து
நெஞ்சை இழுக்கும் ஒவியம்போல!
தினம் நீயுடுத்தும் ஆடையினால்
நிறங்களும் காட்டிடுமே மேனியழகு.

உடைந்த வண்ணகண்ணாடி துண்டுகளால்
கண்ணை பறிக்கும் தட்டைபோல!
நெற்றியில் வண்ணவடிவ பொட்டும்
கண்ணின் கருமையும் ஈர்க்கும் முகமடி.

என்றும்கேட்டாலும் பார்த்தாலும் அழுக்காத
மேளகச்சேரியும் நாட்டுபுற கலைகளைபோல!
வைத்தகண்ணும் வாங்காமல் பார்க்கும்
கேட்கும் உந்தன்வரவும் குரலும்.

பெரியகோவில் கோபுர உயரம்போல!
என்மனதில் உதித்திடும் எண்ணங்கள்
தலையாட்டி பொம்மைபோல! - உன்நினைவால்
என்றும் ஆடும் எந்தன்இதயம்.

காதலென்று வந்தாலே எத்தனையோ ரகசியம்
அதனை கூறுவதற்கு இடம் பஞ்சம்....
தஞ்சையென்று சொன்னாலே எவ்வளவோ விசயம்
நான் சொல்லியது இங்கே கொஞ்சம்...



Monday, February 8, 2010

பயணம்...

என் ஊர்பயணத்தில்...
நான்சென்ற புகைவண்டி உண்மையாய்
எய்தஅம்பாக முன்னால் விரைந்தடி.
அப்பொழுது,
நான்கண்ட காட்சியெல்லாம் பொய்யாய்
நகராமலே பின்னால் நகர்ந்தடி - ஆனால்
நான்மட்டும் இருக்கையிலே அமர்ந்திருந்தேனடி.

என் வாழ்கைபயணத்தில்...
காதலித்த பெண்ணே நீமட்டும்
மணமேடையேறி சபையோர்முன் மகிழ்ந்தாயடி
இங்குநான்,
கொண்ட நினைவுகளும் வேதனைகளும்
எனைகொன்ற பின்னும் நடமாடுகின்றேனடி - என்றும்
காதலாவது அழியாமல் வாழ்ந்திடுமென.

Sunday, February 7, 2010

காதல் கரையான்...

ஒருவனின் இதயசோலையில் அரும்பானவளே
நீயின்று இடம்மாறி பூத்திருக்கின்றாய்
இளமையேட்டில் காதல்கவியை வடித்தேன்
இமைபோல் அதைநீ காப்பாயென்று
உன்கரத்தில் அள்ளி கொடுத்தேன் - ஆனால்
நீயோ கரையானாக்கி விட்டாய்
அரிக்கப்பட்டது காதல் மட்டுமல்ல
இங்கு நானும்கூட சேர்ந்துதான்.

அன்று நீயென்னை பார்த்து
என்உயிரே என்உறவே என்றெல்லாம்
சொன்ன வார்த்தைகள் யாவும்
சொட்டும் தேனாக இனித்தது - இன்று
கொட்டும் தேளாக மாறிவதைக்கின்றது.
காதல் பாதையில் கடைசிவரை
என்னோடு வருவேன் என்றாயடி
எங்கோ சென்றாய் இன்றுஏனடி?


என்னோடு கல்யாண பாதையில்
காலடி எடுத்து வைக்கவுமில்லை
உன்னுதட்டில் பூத்த வார்த்தையெனும்
பூக்கள் இதற்குள் உதிருந்து
வாடி மாயமாக போகுமென்று
எள்ளளவும் எண்ணவில்லை வாழ்வில்
மணமேடை ஏறாமலே என்னோடு
மனைவியை போல் வாழ்ந்தாய்.

கனவு கற்பனையென்று அவையில்லாமல்
உண்மையென்று உயிரென இருந்தேனடி
மாற்றானுக்கு மனைவியாய் மாலைசூடி
வாழ்வதற்கு என்னோடு நீநடத்தி
பார்த்திட்ட ஒத்திகை நாடகமா?
நீசெய்திட்ட செயல்கள் யாவும் - ஏனோ
நெஞ்சில் நினைவுகளாய் ஊஞ்சலாடுகிறது
என்னுயிரும் எனைபிரியாமல் ஊசலாடுகிறது.