இரத்ததின் சுவை இன்னதென்று தெரியாது
சிறுவயதில் பென்சில் சீவும்போது இடறவே
சீவியவிரலில் வடிந்த இரத்தத்தை உறிந்தேன்
அதன் சுவையென உவர்ப்பென அறிந்தேன்
இன்றுஏனோ இரத்தவாந்தி எடுத்தபோது சிறிது
அதனை தொண்டையில் விழுங்கிய சமயம்
இரத்தத்தின் சுவை இனிப்பென உணர்ந்தேன்
காரணம் என்உதிரத்தில் கலந்திருப்பது நீயல்லவா?
புகைபிடிக்கும் பழக்கமும் கிடையாது
புகையிலை போடுவதும் கிடையாது
அன்றாடம் குடிப்பதும் கிடையாது
இருப்பினும் பின்எப்படியோ புற்றுநோய்?
இவனுக்கு எவ்வாறென வைத்தியம்
பார்த்த மருத்துவனுக்கும் ஆச்சரியம்
வியாதிக்கு மூலகாரணம் அறியாமல்...
காரணம் என்உதிரத்தில் கலந்திருப்பது நீயல்லவா?
உன்னோடு பழகியதாலும்
உன்நினைவுகளை அசைபோடுவதாலும்
உன்இதழ்ரசம் அருந்தியதாலும்
என்உதிரத்தில் கலந்துநீ...
நம்மில் நிகழ்ந்திட்ட சிலநிகழ்வுகள் பெருகி
பல்லாயிரமாக என்னை உருக்கும் செல்லாய்
என்னோடு ஒன்றாக மாயையாய் இணைந்திருப்பதை - எவ்வாறு
மருத்துவனும் அறியமுடியும் அறிவியல் நுட்பத்தால்...
4 comments:
அசத்தல் கவிதை சூப்பர்....
அன்புள்ள மனோ,
மிக்க நன்றி நண்பா...
வடை உங்களுக்கு தான்...
அருமையான வரிகள்.. அழகு thanjai vasan..
அன்புள்ள தேனு,
மிக்க நன்றி...
தங்களின் இனிய வரவிற்கும் அழகிய பின்னூட்டத்திற்கும்...
Post a Comment