பெளர்ணமி நிலவே!!!
உன்னை நீயே
எனக்கு அறிமுகம்
செய்கிறாய்...
இன்று விண்ணைநோக்கு
உன்மனதில் இருக்கும்
என்னை காணலாம்
என்கிறாய்...
மொட்டைமாடியில் மதியை
இந்நாள்வரை நின்றுமட்டுமே
ரசித்திட்ட நான்...
முதல்முறையாய் வாழ்வில்
துகில்கொண்டே கண்டிட
எண்ணினேன் நான்...
வானத்து மங்கையே
உனக்கு துணையாக
நீயெனக்கு இணையாக
இருவரும் மகிழ்வோடு
கொஞ்சி மகிழ்ந்திடும்
நினைவுகளோடு நான்...
அரைநிர்வாண கோலமாய்
கைச்சட்டை இல்லாமல்
கையில் ஏடும்பேனாவும்
மனதில் கனவுகளையும்
கொண்டு காதல்புரிய
உன்னை காணவந்தேன்...
வெண்ணிலவே நீயும்
வெட்கம் கொண்டாயோ?
மேகமென்னும் சேலையின்
முந்தானையே எடுத்து
முகத்தினை மூடி
என்னைகாண மறுக்கிறாயே...
பாஞ்சாலியின் மானத்தை
காக்க சேலையை
கொடுத்தவன்...
உன்னுடைய நாணத்தை
மறைக்கவும் முகிலை
அனுப்புகிறானோ?
உனக்கு ஆடையை
வாரிதருவது அந்த
மாயகண்ணனின் லீலையோ?
என்மனத்துக்கு பிடித்த
பரந்தாமனும் இச்செயலால்
பிடிக்காமல் போகிறான்...
5 comments:
காதல் ததும்பும் வரிகள் ...
பாஞ்சாலியின் மானத்தை
காக்க சேலையை
கொடுத்தவன்...
உன்னுடைய நாணத்தை
மறைக்கவும் முகிலை
அனுப்புகிறானோ..arumai.. nalla vatikal.....
nalla varikal kadaisi vari touching
கண்ணா
உன்னை நான் அப்படி அழைத்தால்
உனக்குக் கோபம்வரக் கூடும்
எனினும் காதலுக்கும்
உனக்கும் கடின சம்பந்தம் இருப்பதால்
என்னால் வாழாவிருக்க முடியவில்லை.
நாணமும் ஒருவகைக் கவர்ச்சி என்பதை மறந்து விடாதே
- இப்படிக்கு நிலா -
பதில் நிலாக்காவிடமிருந்து
அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
Post a Comment