Wednesday, June 8, 2011

மழையின் முத்தம்...



இன்றைய பொழுதின்
முடிவோ?
இல்லை...
நாளைய பொழுதின்
தொடக்கமோ?
கேள்விக்கு விடைத்தெரியாத
நேரம்!
பயணமும் வாழ்க்கையும்
நள்ளிரவில்...

என்னை நனைப்பது
உந்தன் மொழியின்
வார்த்தைகளா?
இல்லை....
பெய்யும் மழையின்
பொழியும் சாரலின்
துளிகளா?
ஈரமும் கதகதப்பும்
என்னோடு...

கார்மேகம் தூவிடும்
பூவிதழ்களாய் தூறல்
என்மேனியை கொஞ்சம்
கொஞ்சமாய் தீண்டிட...
தேன்சொட்டாய் ஒவ்வொரு
துளியும் உன்னைபோல்
என்னையும் மண்ணையும்
ஆக்கிரமிக்க தொடங்கிட...

எங்கிருந்தோ குறிவைத்து
எய்யபட்ட அம்பாய்
எங்கிருந்தோ பிறந்து
என்னுதட்டில் விழுந்து
என்னை அதுவும்
ஏகாந்தத்தில் வீழ்த்தியது
எனக்கு நீயளிக்கும்
முத்தத்தினை போல....

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசததல் கவிதை...

Ranioye said...

வெக்கத்தில் இவள் இங்கே!

arasan said...

எழிலான கவிதையை வழங்கிய அண்ணாருக்கு இதயம் கனிந்த நன்றிகள் ...

maniajith007 said...

அட்டகாசம் ஜி செம கவிதை ரொம்ப ரொம்ப ரசிச்சேன் இந்த கவிதையை நான் பயன்படுத்தி கொள்ளலாமா