Saturday, June 11, 2011

மலர் பேசும் வார்த்தைகள்...


அழகிற்காக என்னை
இறைவனும் பெண்களும்
சூடிமகிழ்ந்தாலும் எந்தன்
வாசனையில் மட்டும்தான்
பெருமை தெரிகிறது...
அழகாய் பிறந்தநாங்கள்
அத்தனை பேரும்
இறைவனையும் சேருவதில்லை
பெண்களும் சூடுவதில்லை...
உன்கைகளில் என்னைநீ
ஏந்திரசிக்கவே ஒருஇரவு
மட்டும் உயிர்வாழ்ந்தாலும் - உனக்காக
மலர்ந்திட துடிக்கிறேன்...

8 comments:

தினேஷ்குமார் said...

இரண்டாவது வரியில்
"இறைவனும் பெண்களும்" என மாற்றினால் நன்று என நினைக்கிறேன் ...

மற்றும் மலரின் நிலையில் நின்று வரிதொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நண்பரே.....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தினேஷ்,

மிக்க நன்றி...

நீங்கள் சொன்னது போல் மாற்றத்தை செய்து இருக்கிறேன்...

என் மனதில் முதலில் வேறு விதமாக எண்ணினேன்.... பெண் ஒருத்தி என்னை பார்த்து சொல்வது போல்... அதில் ஏற்பட்ட குழப்பம்...

இராஜராஜேஸ்வரி said...

உன்கைகளில் என்னைநீ
ஏந்திரசிக்கவே ஒருஇரவு
மட்டும் உயிர்வாழ்ந்தாலும் - உனக்காக
மலர்ந்திட துடிக்கிறேன்...//

ஒரு நாள் மட்டுமே மலர்ந்திருக்கும் அந்த நிஷாகந்திப் பூவின் படமும்
கவிதையும் அழகு. அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஷ்வரி,

மிக்க நன்றி...

தங்களின் வரவிற்கும் மற்றும் வாழ்த்திற்கும்...

இதற்கு பிரம்ம கமலம் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது என நினைக்கிறேன்...

இரண்டு ஆண்டுகளாக எங்கள் வீட்டில் இருந்தும் முதல்முறையாக பூத்த பூ... அழகிலும் அதன் வாசத்திலும் எங்களை மிகவும் கவர்ந்தது...

இராஜராஜேஸ்வரி said...

@இதற்கு பிரம்ம கமலம் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது என நினைக்கிறேன்...

இரண்டு ஆண்டுகளாக எங்கள் வீட்டில் இருந்தும் முதல்முறையாக பூத்த பூ... அழகிலும் அதன் வாசத்திலும் எங்களை மிகவும் கவர்ந்தது...//

நன்றி.நன்றி. என் இல்லத்திலும் மலர்ந்த இந்தப் பூவைப்பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன். அனந்த சயனப்பூ என்றும் பெயர். நள்ளிருள் நாரியாக மனம் கவர்ந்தபூ.

இராஜராஜேஸ்வரி said...

http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_12.html
நிஷாகந்திப் பூ

பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள்.
உங்கள் கவிதை அந்தப் பூவைப் போலவே கவர்ந்தது.பாராட்டுக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

உங்களது பதிவினை பார்த்தேன். மலரினைப்பற்றி மேலும் பல தகவல் அறிந்ததில் மனம் மகிழ்ந்தேன்...

Ranioye said...

மலர்ந்திடத்தான் துடிக்கிறேன்
மலராக.....