Thursday, June 16, 2011

கிரகணம்.............



நிலாவாய் உனக்கு நானிருக்க
கதிரவனாய் எனக்கு நீயிருக்க
பூமியும் நம்மிடையே பூவாய்பூத்து
நெடுநேரம் நம்மைபிரிக்க எப்படிஇயலும்?

நம்மிருவருக்கு மட்டும் கிரகணம்
நமக்குநாமே பிடித்த கிரகம்
உன்னுள் நிரந்தரமாக நீயென்னை
விழுங்கியிருக்க பின்னெப்படி சாத்தியம்?

வஞ்சமின்றி நஞ்சை உமிழும்
அரவமென்னை கொஞ்ச கொஞ்சமாய்
வாயில் கவ்விபிடித்தாலும் உன்னால்
உயிர்பெறும் நான்எப்படி மறைவேன்?

9 comments:

arasan said...

நல்ல உவமை ..

கலக்கல் அண்ணே.. வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

உன்னுள் நிரந்தரமாக நீயென்னை
விழுங்கியிருக்க பின்னெப்படி சாத்தியம்?/

அருமையான வார்த்தைகள். பாராட்டுக்கள்.

அம்பாளடியாள் said...

கவிதை அருமை வாழ்த்துக்கள்
சகோதரரே!.....

Ranioye said...

நிலவு மறைவதில்லைதான்..

Anonymous said...

உன்னுள் நிரந்தரமாக நீயென்னை
விழுங்கியிருக்க பின்னெப்படி சாத்தியம்?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி தம்பி...

உவமை, உவமேயம் உருவக படுத்த எல்லாம் எனக்கு தெரியாது...

மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

தங்களின் பாராட்டில் மனம் மிகவும் மகிழ்கிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அம்பாளடியாள்,

மிக்க நன்றி சகோதரி...

தங்களின் வரவிலும் வாழ்த்து வடிவிலான பின்னூட்டத்திலும் மகிழ்ச்சி அடைகிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி....

நிலவு மறைவதில்லை... அதன் தன்மையும் விலகுவதில்லை.... என்னைவிட்டு..