Tuesday, June 21, 2011

என்னோடு நீ...



வான்மதியே!!!

என்னுடைய பகல்நேர
பேருந்து பயணங்களிலும்
என்னருகில் அமர்ந்து
எந்தன்தோள் சாய்ந்து
நீயில்லாத வானத்தை
என்னிடம் கண்ணில்காட்டி
காதில் ரகசியம்கூறி - விண்ணை
ரசிக்க சொல்ன்கிறாய்...

நான் நடந்துசெல்லும்
சாலையின் ஓரங்களிலும்
என்ஒற்றை விரல்பிடித்து
என்னோடு நடைபயில்கின்றாய்
சிலசமயம் உன்னிடையை
என்கைகள் வளைத்து
இதமாய் அரவணைத்து - நடக்கும்படி
என்னைநீயே மாற்றுகின்றாய்...

நான் உண்பதற்கு
செல்லும் உணவங்களுக்கு
எனக்கு முன்னால்
போட்டியிட்டு செல்ன்கிறாய்...
உனக்கு பிடித்ததை
எனக்கும்..
எனக்கு பிடித்ததை
உனக்கும்...
கொண்டுவர சொல்லி
அன்போடு உணவையும்
ஊட்டிவிட்டும் ஊட்டிவிட - வார்த்தையில்
சொல்லியும் மகிழ்கின்றாய்...

வான் தொலைவில்
நீயிருக்கும் போதே
இத்தனை மாற்றங்களை
என்னுள் புகுத்துகின்றாய்...
என்னை காண்பதற்கு
ஒருவேளை பூமிக்கு
இறங்கி வந்தால் - என்னவாகி
போவேன் உன்னால்?

6 comments:

Anonymous said...

என்னை காண்பதற்கு
ஒருவேளை பூமிக்கு
இறங்கி வந்தால் - என்னவாகி
போவேன் உன்னால்?
www.kovaikkavi.wordpress.com
Denmark.

தடம் மாறிய யாத்ரீகன் said...

சிலசமயம் உன்னிடையை
என்கைகள் வளைத்து
இதமாய் அரவணைத்து - நடக்கும்படி
என்னைநீயே மாற்றுகின்றாய்... //

வாசன் என்னையே நான் உணர்ந்தது போல் இருக்கிறது இந்த வரிகளில் ... அருமை.!!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவியே,

மிக்க நன்றி...

தங்களின் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

தங்களின் இனிய வரவிற்கு மிக்க நன்றி... மீண்டும் உங்கள் வரவினை நாடி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அசோக்,

மிக்க நன்றி...

உங்களை ஏதோ ஒருவகையில் நீங்கள் உணரும்படி எழுதியதில் எனக்கு மகிழ்ச்சி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜரஜேஸ்வரி,

மிக்க நன்றி...

வியக்கதகு வியாழனில் என்னுடைய வலைப்பக்கத்தையும் உங்களுடைய முத்தான ரசிப்பில் ஒன்றாக வெளியிட்டு என் வரிகளுக்கு அழகு சேர்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

Ranioye said...

எந்நாளோ அது
நாம் இணையும்
பொன்நாள்?
-வெண்ணிலா