இரயில் நிலையம் என்றாலே உந்தன் ஞாபகமே
இரயில் வண்டி பயணமென்றாலும் உந்தன் ஞாபகமே
இருக்கையில் சன்னலோரம் அமர்ந்தாலும் உந்தன் ஞாபகமே
இடமில்லாமல் கதவோரம் நின்றாலும் உந்தன் ஞாபகமே...
இருசக்கர வாகனம் என்றாலும் உந்தன் ஞாபகமே
இருவரும் ஒன்றாக பயணித்ததும் ஞாபகமே
இயற்கையை இருவர் ரசித்ததும் ஞாபகமே
இரவில் இன்னிசை கேட்டாலும் உந்தன் ஞாபகமே...
ஆலய தரிசனம் என்றாலும் உந்தன் ஞாபகமே
ஆலயத்தில் பிரகாரம் வலம்வந்தாலும் உந்தன் ஞாபகமே
ஆண்டவன் அருள் என்றாலும் உந்தன் ஞாபகமே
ஆன்மாவை ஒருநிலை படுத்தினாலும் உந்தன் ஞாபகமே...
அதிகாலை என்றாலும் உந்தன் ஞாபகமே
ஐந்துமணிக்கு எழுந்தாலும் உந்தன் ஞாபகமே
ஆதியை கண்டாலும் உந்தன் ஞாபகமே - எந்தன்
அருகினில் நீயில்லாவிடினும் உந்தன் ஞாபகமே...
ஞாபகங்கள் தொடரும்...
5 comments:
அழகு கவிதை.
இணைந்து இருக்கும்போது காதலர்களுக்கு எதுவுமே ஞாபகத்தில் இருப்பதில்லை. இணைபிரிந்துவிட்டாலும் காதலர்களுக்கு
அந்த ஞாபகங்களைத்தவிர வேறு எதுவுமே ஞாபகத்தில் இருப்பதில்லை. இதுதான் உண்மைக்காதலோ!!!!.....
அருமை!.... சகோ வாழ்த்துக்கள்.
ஒரு வரியில் கூறினால் - ஞாபகமே நீ தான்....இல்லையா!......
vetha.
http;//kovaikkavi.wordpress.com
Denmark.
எனது மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே.....
கனவாய் மறவாத நினைவுகளுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment