Monday, January 2, 2012

மொபைல் சிணுங்கல்...


பெண்ணே!
இதுவரை அவன் தலையணைக்கு
அருகில் உறங்கிவந்த நான்
இப்பொழுது மஞ்சத்தில் அவன்
நெஞ்சத்தின் மீது பள்ளிக்கொண்டு...
எல்லாம் உன்னால்!!! உன்வருகையால்!!!
உன்னோடு போட்டிபோடும் எண்ணம்
எனக்குள் துளியும் இல்லை...
ஆனால் பொறாமையாக பெருமையுடன்
அவனின் அரவணைப்பில் இதமாக - எல்லாம்
நீயாக நீவரும்வரை நான்...

20 comments:

இந்திரா said...

ஒண்ணுமே புரியல... இருங்க இன்னொரு தரம் படிச்சிட்டு வரேன்..

இந்திரா said...

வடை வாங்கிட்டேனா????

இந்திரா said...

எல்லாம் ஓகே...

ஆனா
//எல்லாம்
நீயாக நீவரும்வரை நான்...//

இது மட்டும் புரியல...
விளக்க முடியுமா???

இந்திரா said...

அட.. கடைப்பக்கம் யாருமே இல்லையா???

இந்திரா said...

அடப்போங்கப்பா...

இந்திரா said...

யார் கூடயாவது செல்போன்ல பேசிகிட்டு இருக்காரோ????

இந்திரா said...

எச்சூச்மி....

இந்திரா said...

எங்க பக்கம் வராதவங்க ப்ளாக்ல இப்டி தான் கும்மியடிப்போம்..

இந்திரா said...

கும்மியடிச்சுட்டேன்... வரேங்க.. அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க.. கும்மிட்றேன்..
(இதுக்கு மேலயும் நம்ம பக்கம் வராம இருக்கீங்களானு பாக்குறேன்...)

arasan said...

என்னமோ ஏதோ .. பாடல் நினைவுக்குள் வருது அண்ணே..
வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சிணுங்கிய செல்போன்

அவள் வரும் வரை தானே!

ad said...

ஆ,ஆ... புரியுது.. ஆனா.. புரியல.
வரிகள் நல்லாருக்கு.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

1. எத்தனை முறை படித்தீர்கள் ( எத்தனை முறை படித்தாலும் புரியாதே)
2. வடை உங்களுக்குதான்.. (இந்த வருடத்தின் முதல் வடை)
3. விளக்கம் அடுத்த மறுமொழியில்.. (யோசனை செய்து சொல்கிறேன்)
4. கடை..வேலை நேரம் முடிஞ்சுபோச்சு... எங்க கடை எப்ப வேணா திறப்போம் மூடுவோம்...
5. எங்க போவது... (உங்க கடைக்கா?)
6. ஆமாம்... எப்புடி கண்டுபிடிச்சிங்க. (நல்ல வேளை உங்களை மாதிரி தனியா பேசல..)
7. உள்ள வந்தாச்சு அப்புறம் என்ன கிச்சு கிச்சு... ( அடுத்த வீடு பாருங்க)
8. கும்மி அடிச்சாச்சா? ரம்மி ஆட ஒரு கை கம்மியா இருக்கு...( மம்மி மாதிரி ஆரம்பமா?)

சின்னபுள்ளனு பார்த்தா.. இம்புட்டு சீரியஸா இத்தனை பின்னூட்டமா???

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி தம்பி...

ஏன் அந்த நினைப்பு உங்களுக்கு??

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,

மிக்க நன்றி ஐயா...

தங்களின் வரவிற்கு மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

செல்போனின் சிணுங்கல்... அவள் வரும் வரை... மே 31ம் தேதி வரை இருக்கும்....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுவடுகள்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் பிறர் மனம் கோணாமல் அழகாக பின்னூட்டம் இட்டமைக்கும் மிக்க மகிழ்ச்சி..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அனைவருக்கும்...

(குறிப்பா சந்தேக சிகாமணி, பதிவர் உலக இம்சை ராணி, திருமதி. இந்திரா அவர்களுக்கு)

இது ஒரு செல்போன் பேசுவது போன்ற ஒரு வர்ணனை... இதில் குழப்பம் இருக்காது யாவருக்கும்...

கடைசி வரி மட்டும் குழப்பத்தை கொடுத்திருக்க கூடும்...

ஒருவருடைய மனைவி அவனோடு மஞ்சத்தில் நெஞ்சம் வைத்து தூங்கும் நாள்(கல்யாண நாள்) வரும்வரை ...
அவன் மனைவியாக அவள் வரும் வரை செல்போன் உறங்குவேன் என்று சொல்கிறது...

(மனைவி வரும் வரை மனைவியை போல் செல்போன் இருக்கும் அவனது இதயத்தில்)

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

மொபைல் சிணுங்கலுடன் வாசனின் சிணுங்கலும் ஒலித்துக்கொண்டே உள்ளது..அவர்களின் தலையணையில்..
அருமை..உங்கள் விளக்க உரையும்...

Unknown said...

Home appliances installed and whole house pitch protected for ourtechnicians. Our services of indoor and outdoor in under 2 hours, very clean, high professionals, and provided through our performance.
For further detail visit our locate please click here>>
24hours plumbing services in tamilnadu
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/