Friday, April 10, 2009

காகிதம் சொல்லும் காதல்

என்னவனின் கண்ணின் கருமணியே!
அவனின் இதயத்துடிப்பும் ஆ(ஒ)சையும் நீயே!!
என்னைவிட உனக்குஅதிகம் தெரிந்துஇருக்கும் - அவன்
அன்பும் அரவணைப்பும் பண்பும் பாசமும் என்னவென்று
அதனை உன்னிடம்கூற எங்களை
எத்தனைமுறை கசக்கி கிழித்திருப்பான்
அதனையும் மீறிஅவன் கைநழுவி மனதைகாட்ட - நான்
என்னை உன்கரம் தொட்டுவறுட வருகின்றேன் இன்று
அவன்போல் நீயும்என்னை கசக்கி
அவமதித்து மடியசெய்து விடாதே, வாழ்வுகொடு...

அவன் உன்னருகிலோ அல்லது
நீ அவனருகில் வரும் பொழுதெல்லாம்
வார்த்தையை மட்டும் அவன் மறக்கவில்லை
தன்னையே மெய்மறந்து விடுகின்றான்
உன் அழகில், உன் மூச்சிகாற்றில்...

ஆமாம்!
நீ ஒருநாள் நீலநிற சேலை உடுத்திவந்தாயோ
அன்று எங்களில் பலரை இழந்தோம்.
நீலவான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலாவை வர்ணித்த கவிஞர் பலகோடி
நீலவர்ண ஆடையில் உலாவந்த
உன்னைஅதிகம் ரசித்தவன் அவன் ஒருவன்தாண்டி

அவனது எழுத்தில் அறிந்தோம் அன்று - மீண்டும்
வந்து கொல்லாதே எங்களையும் அவனையும்.


ஏய் பெண்ணே!
இத்தனை ஆண்டுகளில்
எத்தனைமுறை அவனிடம்
ஊடல் கொண்டாய் - உன் மௌனத்தால்

பூக்கள் பூத்து மலர்ந்ததை கண்டிருப்பாய்
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டதுண்டோ!
ஆனால்!
அவன் காண்கின்றான் சிலநாட்கள்
உன்புன்னகை இல்லாத முகத்தை
என்று புலம்பி தீர்த்துவிடுவான் எங்களிடம் அவன் சோகத்தை...


நேற்று அவன்கண்ட பொருள் எல்லாம் அழகாம்
ஏனெனில் நீகண்ட பிறகு பார்த்ததனால்
அவனை சுற்றிலும் பல பூக்களின் வாசமாம்
உன்மேனி, கூந்தல் மற்றும் சூடிவந்த பூவென்று.
குயிலை கண்டதும் இல்லை பாட்டும் கேட்டதுமில்லை
உன்குரலை கேட்டபிறகு அதன் மயக்கத்தை உணர்கிறான்
உன்னை வர்ணிக்க
உன்இதயத்தை வருடிட
புதிய வார்த்தைகளை தேடி
புதைக்கிறான் எங்களை...

அவனுக்கு தோழிகள், தோழர்கள் பலர் இருக்கலாம்
அவர்களிடம் பழகும் பழக்கமும்
எண்ணும் எண்ணங்களும்
முறையற்று போகாது
உன்மீது கொண்ட பற்றும் பாசமும்
அன்புமும் அரவணைப்பும்
அவனால் சொல்லதெரியவில்லை
உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையோ!!!

அவனை போன்று என்னால் எழுதமுடியவில்லை
அவனிடம் சொல்லிவிடு உன்காதலை
சொல்லிவிடாதே நான் வந்ததை
மீண்டும் வருகின்றேன்
அவன்கரம் பட்டு
உன்கரம் பற்ற
மெல்ல பறந்துவருகின்றேன்
எனக்கும் அவனுக்கும் வாழ்வுகொடு!!!

1 comments:

Muruganandan M.K. said...

"பூக்கள் பூத்து மலர்ந்ததை கண்டிருப்பாய்
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டதுண்டோ!
ஆனால்!
அவன் காண்கின்றான் சிலநாட்கள்.."
அருமையான வரிகள் ரசித்தேன்.