Saturday, October 3, 2009

காதல்! காதல்!! காதல்!!!


காதலர்களை சேர்க்கவோ
பிரிக்கவோ முடியும் - ஆனால்
காதலை ஆக்கவோ
அழிக்கவோ முடியாது.

காதலெனும் போர்வையில்
ஊரைவிட்டு ஓடலாம் - ஆனால்
காதலெனும் உன்னதம்
உலகத்தைவிட்டு மறையாது.

காதலர்கள் மண்ணுக்குள்
செத்து அழியலாம் - ஆனால்
காதலர்கள் உடலைவிட்டாலும்
காதல் உள்ளங்களைவிட்டு அழியாது.

காதலர்களுக்கு வாழ்வில்
தோல்வி இருக்கலாம் - ஆனால்
காதலுக்கு தோல்வியில்லை
ஏனெனில் நம்உணர்வில் ஒன்று.

காதலர்களிடம் கண்கள்
என்று பரிமாற்றம் ஆனதோ
காதல்! வெற்றிக்கொடியை
நாட்டியது மண்ணில் அன்று.

காதலுக்கு கண்ணில்லை
என்பார்கள் காதலிக்காதவர்கள்
கண்ணில்லாதவருக்கும் காதல்வரும்
என்பார்கள் காதலை புரிந்தவர்கள்.

காத்திருத்தல், வித்தல்,
ல்லாமல் போவதல்ல காதல்
காலத்தினால் அழியாததும்
ன்நிகர் அற்றதும்
மனதிலும் மண்ணிலும்
நிலையாய் நிற்பதுவே காதல்...
காதல்! காதல்!! காதல்!!!

2 comments:

Sooriyan said...

kavithai ellam partha edho sontha anubavam irukkum polirukke ....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

காதலிக்காத மனிதன் இல்லை, காதலிக்காதவன் மனிதன் இல்லை.