ஏய் பெண்ணே!
நேற்று...
நீ என்னிடம்
கவிதை கேட்டாய்
நீயே ஒர் கவிதையென்று
எல்லாரும் கூறுவதுதான் - இயற்கைதான்.
ஆனால்...
நீ கேட்டது
புதுக்கவிதையோ அல்ல மரபுகவிதையோ என்று
எனக்கே தெரியவில்லை.
கன்னி...
எண்ணி உன்னை
எத்தனையோ கவிதையென்று
வடித்தேன் நீகேட்டதும்,
எங்கோ பறந்தேன்
என்னையே மறந்துதான் - செயற்கைதான்.ஆனால்...
எனக்கு இது
புதிதா அல்லது மரபா? என்று
எனக்கே தெரியவில்லை.கவிதை...
எதனையோ வாசித்தேன்
கேட்டதும் அருஞ்சுவையென்று
கூறியதுயுன் ரசனைதான் - பொய்தான்
ஆனால்...
நீ சொன்னது
புதுக்கவிதையோ அல்ல மரபுகவிதையோ என்று
எனக்கே தெரியவில்லை.காதலி...
என்னையே தந்துஎன்
வாழ்வின் ஆரூயிரென்று
கூறயென் வாஞ்சைதான் - மெய்தான்
ஆனால்...
எனக்கு இது
புதிதா அல்லது மரபா? என்று
எனக்கே தெரியவில்லை.
1 comments:
ஊட்டி வரை உரவு கவிதை அருமை அருமை அருமை...... மிகவும் அருமை... வாழ்த்துக்கள்....
Post a Comment