பதிவுசெய்யப்பட்ட உன்குரல்
அழைப்புமணியாய் செல்போனில்
என்பையிலும் என்கையிலும்
மெல்ல சிணுங்குபோதெல்லாம்
இரவினிலும் குயிலோசையை
கேட்டு மகிழ்கிறேன்…
காணாதது குயில்முகம்
மட்டுமில்லை உன்முகமும்தான்
குயில்பாட்டாய் உன்குரல்
நித்தம்கேட்டால் போதுமடி
உன்முகமும் தேவையில்லையடி
நான்பூமியில் வாழ்வதற்கு
உறவென்ற சொல்லில்
என்ஜென்மங்களும் நீளுமடி...
10 comments:
காதலியின் , காதலின் நினைவுகளை தூண்டுகிறது அண்ணே ....
மிகவும் ரசித்தேன் ...
நல்லா இருக்கு
அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...
யாருனு மட்டும் சொல்லவே இல்ல அண்ணனிடம்...
ம்... சென்னை வரேன்...
அன்புள்ள ஜெ.ஜெ,
மிக்க நன்றி...
Enjoyed reading!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...
யாருனு மட்டும் சொல்லவே இல்ல அண்ணனிடம்...
ம்... சென்னை வரேன்..//
வாருங்கள் அண்ணே .... வாருங்கள் ..
நேரில் பேசிக்கொள்ளலாம் ....
அட.. கலக்கல் கவிதையாயிருக்கிறதே.. அப்டினா உங்க கைபேசில அவங்ங்ங்ங்க குரல் இருக்குனு சொல்லுங்க.. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
//குயில்பாட்டாய் உன்குரல்
நித்தம்கேட்டால் போதுமடி
உன்முகமும் தேவையில்லையடி//
என்ன வாசன் இப்டி சொல்லிட்டீங்க.. நிஜம் இல்லாத நிழல் போதுமா???
அன்புள்ள ரவிகுமார்,
மிக்க நன்றி...
தங்களின் இனிய முதல் வரவிற்கும் மற்றும் மனதின் கருத்திற்கும் மிக்க நன்றி...
அன்புள்ள அரசன்,
//அரசன் said...
வாருங்கள் அண்ணே .... வாருங்கள் ..
நேரில் பேசிக்கொள்ளலாம் .... //
அண்ணன் வரமாட்டேனு ரொம்ப தீவிர நம்பிக்கையோ?
அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி...
// அட.. கலக்கல் கவிதையாயிருக்கிறதே.. //
உங்கள் பின்னூட்டமே எப்பொழுதும் கலக்கல்தான்...
// அப்டினா உங்க கைபேசில அவங்ங்ங்ங்க குரல் இருக்குனு சொல்லுங்க.. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.//
என்னோட கைபேசி டப்பா போனு உங்களுக்கு தெரிந்தும் இப்படி சொன்னா எப்படி?
//என்ன வாசன் இப்டி சொல்லிட்டீங்க.. நிஜம் இல்லாத நிழல் போதுமா???//
நிஜம் நிழலாய் மாறக்கூடும்.. நிழலை காதலித்தால் உருமாறாது என்ற நம்பிக்கையில்... நிஜமாக மாறினாலும் நல்லதுதானே...
Post a Comment