Wednesday, February 2, 2011

காதலென்ன கண்ணாம்பூச்சி ஆட்டமா?





நம்காதல் நாணயம் போன்றதோ?
ஒருபக்கம் நீ பூவாக
மறுபக்கம் நான் தலையாக
இருவரும் ஒருவராய் இணைந்தே
இருப்பினும் ஒருவரையொருவர் காணாமல் - நம்மில்
அன்பும் என்றும் குறையாமல்...




உலகத்தின் நிகழ்வுகளை கணினியில் காண்கிறேன்
எந்தன் கணினியில் உன்னை தேடுகிறேன்
எந்தன் கண்ணில் உன்னை பார்க்கிறேன்
உந்தன் கண்ணிலும் என்னை பார்க்கும்
நாளுக்காக தினம் காத்து இருக்கிறேன் - அதில்
உலகத்தை கண்டு மகிழும் ஏக்கத்தில்...




உன்தரிசனம் வேண்டி இறைவன்
சன்னதிக்கு தினம் வருகிறேன்
உன்னை மட்டும் காணவருவதனாலா
என்மேல் சாமிக்கும் கோபம்? - இன்றும்
உன்பார்வை என்மீது படவிடாமல்.

23 comments:

Anonymous said...

வடை வடை

Anonymous said...

//நம்காதல் நாணயம் போன்றதோ?
ஒருபக்கம் நீ பூவாக
மறுபக்கம் நான் தலையாக//


அது ஒரு ரூபாயா, ரெண்டு ரூபாயா இல்ல அஞ்சு ரூபாயா???

Anonymous said...

//இருவரும் ஒருவராய் இணைந்தே
இருப்பினும் ஒருவரையொருவர் காணாமல்//


கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்ல...

Anonymous said...

//உலகத்தின் நிகழ்வுகளை கணினியில் காண்கிறேன்
எந்தன் கணினியில் உன்னை தேடுகிறேன்//


எச்சூச்மி... கெடச்சதும் லிங்க் அனுப்ப முடியுமா??? நாங்களும் பாக்கணும்ல.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

உங்கள் வலைப்பக்கம் மாதிரி இங்கே மக்கள் கூட்டம் வராது... எப்ப வந்தாலும் உங்களுக்கு வடை... இல்லையில்லை.. பிசா கிடைக்கும்....

Anonymous said...

//எந்தன் கண்ணில் உன்னை பார்க்கிறேன்
உந்தன் கண்ணிலும் என்னை பார்க்கும்
நாளுக்காக தினம் காத்து இருக்கிறேன் //


உங்கள பாத்ததும் கண்ண மூடிக்கிட்டாங்களா???

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

புது பத்து ரூபாய் நாணயம்....

Anonymous said...

//உன்தரிசனம் வேண்டி இறைவன்
சன்னதிக்கு தினம் வருகிறேன்//


சைட் அடிக்க கோயிலுக்கு போறீங்கனு சொல்றீங்க.. ம்ம்..

Anonymous said...

//உன்னை மட்டும் காணவருவதனாலா
என்மேல் சாமிக்கும் கோபம்? - இன்றும்
உன்பார்வை என்மீது படவிடாமல்.//


கவலைப்படாதீங்க.. விடாம கோயிலுக்குப் போங்க. ஆல் த பெஸ்ட்.

Unknown said...

நம்காதல் நாணயம் போன்றதோ?
ஒருபக்கம் நீ பூவாக
மறுபக்கம் நான் தலையாக
இருவரும் ஒருவராய் இணைந்தே
இருப்பினும் ஒருவரையொருவர் காணாமல் - நம்மில்
அன்பும் என்றும் குறையாமல்...////

அருமையான வரிகள் வாசன்... மிகவும் ரசித்தேன்...

MANO நாஞ்சில் மனோ said...

/நம்காதல் நாணயம் போன்றதோ?
ஒருபக்கம் நீ பூவாக
மறுபக்கம் நான் தலையாக
இருவரும் ஒருவராய் இணைந்தே
இருப்பினும் ஒருவரையொருவர் காணாமல்//

அருமையான எழுத்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

//வடை வடை//

வடை ஒன்னுதானே.
அதெப்பிடி வடை வடைன்னு ரெண்டாச்சு...??
ஒருவேளை இந்த கடையில ரெண்டு வடை குடுப்பாங்களோ....?
அப்போ நாளையிலே இருந்து காத்து இருந்துர வேண்டியதுதான்.....

ரேவா said...

எந்தன் கணினியில் உன்னை தேடுகிறேன்
எந்தன் கண்ணில் உன்னை பார்க்கிறேன்
உந்தன் கண்ணிலும் என்னை பார்க்கும்
நாளுக்காக தினம் காத்து இருக்கிறேன்

வாழ்த்துக்கள் தோழா...கவிதை அருமை

arasan said...

அண்ணே அனைத்தும் அழகா இருக்கு அண்ணே ...

தமிழ்த்தோட்டம் said...

கலக்குறீங்க பாஸ்

aavee said...

//உன்னை மட்டும் காணவருவதனாலா
என்மேல் சாமிக்கும் கோபம்?//

நீங்களும் அப்படித்தானா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜெ.ஜெ,

மிக்க நன்றி...

மிகவும் உங்களை ரசிக்க வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி நண்பரே...

// அப்போ நாளையிலே இருந்து காத்து இருந்துர வேண்டியதுதான்...//

வாங்க கண்டிப்பா தரோம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரேவா,

மிக்க நன்றி...

தங்களின் வரவிற்கும் மற்றும் இனிய பின்னூட்டத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி...

எல்லாவற்றையும் ரசித்தமைக்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆவி,

மிக்க நன்றி வருகைக்கு...

நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா?

Unknown said...

எந்தன் கண்ணில் உன்னை பார்க்கிறேன்
உந்தன் கண்ணிலும் என்னை பார்க்கும்
நாளுக்காக தினம் காத்து இருக்கிறேன்...
nice lines....nanbare..!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சௌம்யா,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும்...