Tuesday, February 15, 2011

சங்கீத ஸ்வரங்கள்....

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா....

என்றால் இன்னும் இருக்கு
நீயென்னை அழைத்த மா,டா,பா
அதுவும் அதில் சேரும்...

ஏழு ஸ்வரங்களுக்கு
எத்தனை பாடல்

என்பதனை போல்

இம்மூன்று எழுத்துகளில்
எழும்ஓசைகளில் உலகத்தின்
இன்பத்தை அடைந்தேன்...


இல்லப்பா....
சாரிடா...
சொல்லுமா....

இவையெல்லாம் என்னோடு
இன்று இல்லாமல்போனாலும்
உள்ளத்தோடு உறவாடிக்கொண்டே...


பிறர்என்னை அழைக்கும்போது
உந்தன் அன்பினையெண்ணி
கிடைக்கவேண்டி ஏங்குகிறேன்....

என்றாவது ஒருநாள்
எந்தன் அன்பினை
நீயறிவாயென்ற உணர்வோடு...

7 comments:

Unknown said...

என்றாவது ஒருநாள்
எந்தன் அன்பினை
நீயறிவாயென்ற உணர்வோடு...///

உண்மையான அன்பை அனைவருமே தாமதமாகதான் புரிந்து கொள்வார்களோ?

Pranavam Ravikumar said...

>>என்றாவது ஒருநாள்
எந்தன் அன்பினை
நீயறிவாயென்ற உணர்வோடு...<<

Ver Nice.. My Wishes!

MANO நாஞ்சில் மனோ said...

//பிறர்என்னை அழைக்கும்போது
உந்தன் அன்பினையெண்ணி
கிடைக்கவேண்டி ஏங்குகிறேன்....//



அசத்தலா அசத்தி இருக்கீங்க...

arasan said...

நிச்சயமா புரிந்து விரைவில் வருவாங்க அண்ணே ...
ரொம்ப நல்லா இருக்குங்க அண்ணே

சமுத்ரா said...

GOOD ONE..

Anonymous said...

நிச்சயமா புரிந்து விரைவில் வருவாங்க அண்ணே ....

நிச்சயமாக...ஒருநாள் வேறொரு பாத்திரமாக...
அன்பெனும் அச்சயபாத்திரத்துடன்...பொன்.

ஆர்வா said...

அந்த மூணு எழுத்துக்கள்ல "டா" ரொம்ப ஸ்பெஷல் தானே..
நல்ல கவிதை நண்பா