Saturday, February 19, 2011

முத்தே முத்தம்மா.... முத்தமொன்று தரலாமா?


இங்கே நான்
எங்கேயோ நீ
முத்தங்களை நானுனக்கு
சத்தமின்றி வாரியிரைக்க
நித்தம் வேண்டுமென்று
மெளனத்தில் நீயுரைக்க...

உந்தன் நாணத்தில்
தோன்றிய சிவப்பினைக்கண்டு
ரோஜாவின் இதழ்களும் 
வெட்கத்தில் தலைகவிழ்ந்திட...
உன்முகம் மட்டுமென்ன
என்கண்களை பார்த்திடுமோ?...

சிவந்தது உன்கன்னங்கள்
மட்டுமில்லையடி பெண்ணே
என்கரங்களும்தான் எப்படியென்று
என்னுள்நான் எண்ணிக்கொண்டு...

உதட்டில் பூத்திடும்
முத்தமலரை இடைவெளியில்லாமல்
உள்ளங்கையில் முத்தாயேந்தி
உன்னுள்ளதை அடைந்திட
ஊதிவிட்டேன் காற்றினிலே
அதனால் என்னவோ?

உன்சிவந்த கன்னங்களை
என்னிரு கரங்களால்
தாங்கி பிடித்திட
எண்ணி ஏங்கியோ
உதிரமெல்லாம் ஒன்றுகூடி
கைகளையும் துடிக்கசெய்வதனாலோ?

16 comments:

நட்புடன் சௌம்யா.. said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸ்ஸாலி said...

நண்பரே உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது வருகை தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/6-sunday-in-valaichcharam-rahim-gazali.html

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான கவிதை...

ஆர்வா said...

பறக்கும் முத்தத்தை பற்றி அவ்வளவாக கவிதைகள் வருவதில்லை. ஆனால் அவர் கொடுக்கும் பறக்கும் முத்தத்தை வரிகளாக மாற்றி, வார்த்தைகளாக கோர்த்து, கவிதையாக நீங்கள் வடித்திருப்பது, சூப்பர்ப்.. புகைப்படத்திற்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்தக்கவிதையின் வீச்சு இன்னும் கூடி இருக்கும்..

எஸ்.கே said...

மன்னிக்கவும் நண்பரே! வேலைப்பளு மிகுதி! சரியாக கமெண்ட் போட முடியவில்லை. ரீடரில் எல்லாவற்றையும் படித்தேன்!
தொடரட்டும் உங்கள் பணி!

Unknown said...

முத்தத்தை மொத்தமாக கொடுப்பதை விட அழகாய் இருக்கிறது...
பறக்கும் முத்தம்...!!!
"இங்கே நான்
எங்கேயோ நீ"...
நித்தம் வேண்டுமென்று கேட்பது மட்டும் காதில் விழுமோ...??
"வெட்கத்தில் தலைகவிழ்ந்திட...
உன்முகம் மட்டுமென்ன
என்கண்களை பார்த்திடுமோ?"
அட அவங்களே வெட்கத்தில் இருக்காங்க...ஏன் சார் தொந்தரவு..??
"சிவந்தது உன்கன்னங்கள்
மட்டுமில்லை..
என்கரங்களும்தான்"..
ஒரு வேளை மருதாணி போட்டு இருந்திருப்பாங்க...
கடைசில காற்றில் ஊதினது காதலோடு கலந்ததா..??

arasan said...

அண்ணே மிக மிக மிக ரசித்தேன் ....
சிறப்பான கவி படைத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும்
தெரிவித்து கொள்கிறேன் ...

arasan said...

முத்தம் என்றாலே ஒரு கிறக்கம் வருவது சகஜம் தான் ...
அதுவும் இந்த பறக்கும் முத்தம் சொல்லவே தேவையில்லை ...
ம்ம்ம் நடக்கட்டும் ... நடக்கட்டும் ....

Anonymous said...

முத்தக் கவிதை அருமை..

இன்னும் இதைவிட சிறப்பான புகைப்படத்தை வைத்திருந்தால் கவிதைக்கு கூடுதல் அழகு சேர்ந்திருக்குமே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரஹீம்,

மிக்க நன்றி நண்பா...

வலைச்சரத்தில் நீங்களும் என்னை அறிமுகபடுத்தி சிறப்பித்தமைக்கு...

என்றும் உங்கள் வரவினை நாடி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சரவணன்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மணி,

மிக்க நன்றி....

உள்ளத்தின் உணர்வுகள் உடலின் செயல்கள் இங்கே வரிகளாய்...

தங்களின் இனிய வரவிற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி...

புகைப்படத்திற்கு என்று நேரம் செலவிடாமல், செலவிட மனமில்லாமல் கிடைத்த இதனை உபயோகபடுத்தினேன்...

மாற்ற முயல்கிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள எஸ்.கே,

மிக்க நன்றி நண்பா...

மிக்க மகிழ்ச்சி எப்படியோ என்னோடு இணைந்திருப்பதில்....

Pranavam Ravikumar said...

அருமை! Waiting for the next one!