சிலசமயம் என்னருகினில் நீ!!!
உறங்கிட அன்போடு சாய்கின்றாய் என்தோளினில்
உறங்குவது என்னவோ முதலில் என்னிதயம்
என்கண்களை மூடிமெளனமாய் கூடுவிட்டு கூடுபாய்ந்து
உன்னோடு மணிகணக்கில் கனவில்பேசி மகிழ்ந்துக்கொண்டு...
உறங்கிட அன்போடு சாய்கின்றாய் என்தோளினில்
உறங்குவது என்னவோ முதலில் என்னிதயம்
என்கண்களை மூடிமெளனமாய் கூடுவிட்டு கூடுபாய்ந்து
உன்னோடு மணிகணக்கில் கனவில்பேசி மகிழ்ந்துக்கொண்டு...
நீண்டநாளுக்குபின் என் அலைபேசியில்!!!
ஒளிருகிறது உன்பெயர்
மிளிருகிறது என்கண்கள்
குளிருகிறது என்னிதயம் - எல்லாம்
மறைகிறது கனவாய்...
ஓர்இனிய அதிகாலைபொழுது!!!
மரங்கள் நிறைந்தசாலையில் தனியாக
உன்நினைவுகளை அசைபோட்டு நடந்துசென்றேன்
தலையில் எங்கிருந்தோ வந்துவிழுந்தது
காய்ந்துபோன உதிர்ந்த இலையொன்று
மரத்தின்மீது சற்றேமிகையாய் கோபம்கொண்டேன்
உன்நினைவுகளை என்னிடமிருந்து பிரித்ததற்கல்ல
மரமே! என்மீது நீவிழுந்திருக்ககூடாதா? - உயிரேபிரிந்து
காற்றில் கலந்திருப்பேன் கனவாயென கனைத்தேன்....
14 comments:
>>ஒளிருகிறது உன்பெயர்
மிளிருகிறது என்கண்கள்
குளிருகிறது என்னிதயம் - எல்லாம்
மறைகிறது கனவாய்<<
Very Nice Lines... Even the rhythm too... My Wishes!
மூன்றாம் பகிர்வு நல்லாயிருந்ததுங்க.... தொடர்ந்து எழுதுங்க..... பாராட்டுக்கள்.
மூன்றுமே முத்துக்கள்
மிக மிக ரசித்தேன் அண்ணே ...
தொடர்ந்து வழங்குங்க ...
ரசிக்க நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம்
//மரமே! என்மீது நீவிழுந்திருக்ககூடாதா? - உயிரேபிரிந்து
காற்றில் கலந்திருப்பேன் கனவாயென கனைத்தேன்//
அருமை அருமை ரசித்தேன்....
காதலின் வலி கொண்ட வரிகள் அருமை..
"மரமே! என்மீது நீவிழுந்திருக்ககூடாதா? - உயிரேபிரிந்து
காற்றில் கலந்திருப்பேன் கனவாயென கனைத்தேன்.."
ரசித்து மகிழ்ந்த வரிகள்.... அருமை நண்பா.!!
கலையாத கனவிலே..
தொலைந்ததே என் இதயமும்..
விட்டுச் செல்கிறேன் என் ரசனைகளை...
உன் கனவு தேசத்தில்...
சொல்லிவிடு கனவிடம்..!!
"கனவே... கனவே... கலையாதே..." என்று..!!!
அன்புள்ள ரவிகுமார்,
மிக்க நன்றி... தங்களின் வரவிற்கும் தரும் ஊக்கத்திற்கும்...
அன்புள்ள கருணாகரசு,
மிக்க நன்றி
தங்களின் வருகைக்கும் மற்றும் என்னை ஊக்கப்படுத்தி ஆதரவு அளிக்கும் உள்ளத்திற்கும்...
அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி...
மிக்க மகிழ்ச்சி தம்பி... உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு...
அன்புள்ள மனோ,
மிக்க நன்றி...
தங்களின் தொடர்ச்சியான வரவிற்கும், வாழ்த்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி
அன்புள்ள ஜெ.ஜெ,
மிக்க நன்றி,
சகோ நலமா? சில நாட்களாக காண இயலவில்லை....
காதல் வலி, வரிகளாக இங்கே....
அன்புள்ள செளம்யா,
மிக்க நன்றி தோழி...
ரசித்து மகிழ்ந்தமைக்கு...
கண்டிப்பாக சொல்கிறேன்...
மினியின் சொல் கனவு தேசத்தில் ஒலிக்கும்
விட்டு செல்லும் ரசனை அங்கேயும் வாழும்....
சற்றேமிகையாய் கோபம்கொண்டேன்
உன்நினைவுகளை என்னிடமிருந்து பிரித்ததற்கல்ல
மரமே! என்மீது நீவிழுந்திருக்ககூடாதா? - உயிரேபிரிந்து
காற்றில் கலந்திருப்பேன் கனவாயென கனைத்தேன்....
----------------------
வலிகள் மிக்க வைர வரிகள் - காதல்
வீரியத்தின் வார்த்தை வார்ப்புகள்..
Post a Comment