Wednesday, July 6, 2011

இரயில் பயணத்தில் அவள்.... (1)


கடலில் பிறக்கும்
ஒவ்வொரு சிப்பிக்குள்ளும்
ஒரேயொரு முத்துதான்
இருக்க இயலும்...

உன்னிதழ் என்னும்
சிப்பியோ ஒவ்வொருமுறை
திறக்கும் போது
எத்தனையோ முத்துகள்...

நிலத்தில் சிந்தவில்லை
ஆனாலும் ஒலிக்கின்றது
கையில் ஏந்தமுடியவில்லை - நான்
அதனாலும் வியந்துகொண்டு...

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

உன்னிதழ் என்னும்
சிப்பியோ ஒவ்வொருமுறை
திறக்கும் போது
எத்தனையோ முத்துகள்...//

முத்துக்களை வடித்தெடுத்த
கவிதைச் சிற்பிக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

தடம் மாறிய யாத்ரீகன் said...

ஐயோ வாசன் பின்னிடிங்க போங்க .. அபாரம்

ezhilan said...

நல்ல கவிதை நண்பரே.தொடரட்டும் தஞ்சையின் தமிழ்ப் பணி.சுப்ரமனியன் கலிங்கராயர்.

nithubaby said...

நல்ல அருமையான வரிகள் வாசன் :) உன் இதழ் திறக்கும் போது மிகவும் அருமை :)

மேலும் தொடர்ந்து இது போன்று எழுதிட வாழ்த்துக்கள் !

தங்கள் வரிகள் ஒவ்வொன்றும் தங்க வரிகளில் வைரம் பதித்த வார்த்தைகளாய் மிக அற்புதம் தோழரே :)

அன்புடன்
நித்யா