Tuesday, July 12, 2011

இரயில் பயணத்தில் அவள்.... (3)


காற்றும் உன்மீது கொண்ட
மோகத்தில் கூந்தல் முடியை
முகத்தில் அலைபாய செய்கிறது...

பறக்கும் ஒற்றைக்குழலை உன்னிரு
விரல்களோ பிடித்து பின்னந்தலைக்குள்
மெல்ல மெல்ல சிறைபிடிக்கின்றது...

என்கண்களோ அதனை மனத்துக்குள் 
மின்னலைபோல் தொடர்ந்து படம்பிடித்து
ஒருபுறம் சேமித்து அடைக்கின்றது...

என்கைகளோ உன்னை ஏட்டில்வரைய
கவிதையாய் வர்ணிக்க வார்த்தைகிடங்கில்
மறுபுறம் சேமிப்பின்றி தவிக்கின்றது...

5 comments:

Pranavam Ravikumar said...

Nice thoughts.. Do you travel a lot? May be you derived the spirit for this poem from that. I loved it. Have a good day!

ஆர்வா said...

வாசன் கலக்குறீங்க போங்க... அருமையா இருக்கு

vidivelli said...

சகோ உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
காதல் கவிதைகள் மட்டும் தானா பகிர்வீங்கள்...
பதிவிற்கு வாழ்த்துக்கள்..



!!உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ/////

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள செம்பகம் (விடிவெள்ளி),

மிக்க நன்றி... தங்களின் அன்பான வரவிற்கும் மற்றும் கருத்திற்கும்...

இவனுக்கு காதல் கவிவரிகள் மட்டும்தான் பாடதெரியும் என்பதில்லை... காதல் மீது ஏனோ ஓர் ஈர்ப்பு அவ்வளவுதான்... எழுதுவதற்கு எளிதாக அமைகிறது... நாட்டு நடப்புகளை எழுதவேண்டும்... நாட்டு மக்களின் துயர் துடைக்க ஏதாவது செய்ய வேண்டும்... வான் அளவு இல்லாவிடினும் எள் அளவு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உண்டு...

மாய உலகம் said...

(அவளுடைய நிறுத்தத்தில் அவள் இறங்கி சென்றுவிட நான்மட்டும் அவள் அமர்ந்த இருக்கையை பார்த்துகொண்டே...)

இதை அனுபவித்தவர்களுக்கே அந்த சுக வலி தெரியும்...