கன்னத்தில் கைவைத்து நீபார்க்கிறாய்
கள்ளமில்லாமல் பிறரோடு பேசுகிறாய்
கணத்தில் என்மீதுவிழும் இந்நிகழ்வில் - நானே
கப்பல் கவிழ்ந்ததுபோல் மூழ்கிபோகிறேன்
கண்ணிற்கும் நெற்றிக்கும் இடையே
வரைப்படத்தில் வரையபடும் நீர்நிலை
வரைகோடுகளாய் இமைகள் பிரித்துகொண்டு - அவையே
உன்னிடம் என்னை இணைத்துகொண்டு...
உந்தன் நொடிபொழுது கண்சிமிட்டலில்
எந்தன் உலகம் இருண்டுபோகிறது...
உந்தன் சிலவினாடி பார்வையில்
எந்தன் இதயம் நின்றுபோகிறது...
உலகமொரு மிகச்சிறிய உருண்டைதான்
உன்முகத்தை பார்த்தபின்பு மீண்டுமறிந்தேன்
எங்கோ அதில்என்னை தொலைத்துவிட்டு
என்னைநான் தேடிக்கொண்டே காணாமல்...
(அவளுடைய நிறுத்தத்தில் அவள் இறங்கி சென்றுவிட நான்மட்டும் அவள் அமர்ந்த இருக்கையை பார்த்துகொண்டே...)
3 comments:
கணத்தில் என்மீதுவிழும் இந்நிகழ்வில் - நானே
கப்பல் கவிழ்ந்ததுபோல் மூழ்கிபோகிறேன்//
அருமையான பகிர்விற்குப்பாராட்டுக்கள்.
supper poem...
congratulation"
Post a Comment