Saturday, October 8, 2011

நீ!!!


பசுமை நிறைந்த வயல்வெளியில்
கருந்தோகை விரித்த வண்ணமயில்...

பசுமை நிறைந்த சோலைக்குள்
சேலை கட்டிவந்த சொர்ணசிலை...

பசுமை நிறைந்த தோட்டத்திற்குள்
பூக்கள் சூடிவந்த தொங்கும்தோட்டம்...

பசுமை நிறைந்த மண்ணிற்கு
தண்ணீர் பாய்ச்சவந்த ம(க)ங்கை...

பசுமை நிறைய மனதிற்கு
மயக்கம்தர பூமிக்குவந்த முழுமதி...

12 comments:

SURYAJEEVA said...

முழு மதி... முமு மதி என்று எழுத்து பிழையாகி உள்ளது

Ranioye said...

vennilaa yaro??

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சூர்யஜீவா,

மிக்க நன்றி தோழரே...

பிழையை திருத்தம் செய்துவிட்டேன்....

இராஜராஜேஸ்வரி said...

பசுமை நிறைந்த தோட்டத்திற்குள்
பூக்கள் சூடிவந்த தொங்கும்தோட்டம்...


மிக அழாகாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.

நாவலந்தீவு said...

பசுமை நிறைந்த கவிதை.
அருமை.

Unknown said...

அழகான பசுமையான கவிதை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...

வான்மேகத்தின் ராணி அந்த வெண்ணிலா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முத்தரசு,

மிக்க நன்றி....

பசுமையான நினைவுகள் கூட...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சதிஷ்,

மிக்க நன்றி...

பசுமை என்றும் நிறைந்திருக்கட்டும் அனைவர் வாழ்விலும்..

அ.முத்து பிரகாஷ் said...

தங்கள் தோழியின் புகைப்படம் கண்டு மகிழ்ந்தேன்..
திருமண நாள் தகவல் சொல்ல மறந்து விடாதீர்கள் தோழர்..

வயலும் வாழ்வும் போல உங்களுடையது வயலும் காதலும் ..
மகிழ்ச்சி தோழர் :))

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

மிக்க நன்றி தோழரே..

மனைவியின் புகைப்படத்துடன் திருமண மடலை அனுப்புகிறேன்.. மனைவி என்ற இடத்திற்கு வரப்போகும் பெண்ணை வீட்டில் நிச்சயத்தவுடன்...

இன்னும் யாரும் சிக்கவில்லை....