Monday, October 10, 2011

அலைபேசியின் - கோபமோ? நாணமோ?



அன்பே!
என்னருகினில் இல்லாமல்
தொலைவிலிருந்து என்னோடு
நீபேசும் காதல்மொழி
அத்தனையும் ரகசியமாய்
கேட்டு மகிழ்ந்தவன்...

என்னருகில் இன்றுநீ
நாசிக்குள் நுழைய
முற்படும் தூசியாய்
புல்லாங்குழல் எழுப்பும்
இன்னிசை கீதமாய்...

காதோடு எந்தன் பெயரினை
கனிவோடு செவ்விதழில் நீயழைக்க
அதனைக்கேளாது கோபம் கொண்டோ?
அதனைக்கேட்டு நாணம் கொண்டோ
தன்னுயிரை தானே மாய்த்துக்கொண்டு.

19 comments:

Ranioye said...

kovamum alla
nanamum alla
ellam
ekkam
enodu konjiya
un ithazhkal
inru avalodu enre!! ;)

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...

இப்படியும் இருக்குமோ? இருக்கலாம்...

அவன் ஏக்கம் தீர்க்க அவள்...
அதன் ஏக்கம் தீர்க்க அவர்கள்...

நாவலந்தீவு said...

கவிதை அருமை. சூப்பர்.

Unknown said...

கவிதை சூப்பர் பாஸ்

இராஜராஜேஸ்வரி said...

அருமையான அலைபேசிக்கவிதை..

இந்திரா said...

//நாசிக்குள் நுழைய
முற்படும் தூசியாய்//


அட அட..
கவித கவித..

இந்திரா said...

//தன்னுயிரை தானே மாய்த்துக்கொண்டு.//


இது கொஞ்சம் புரியல..
போன் செத்துப் போகுதுனு சொல்றீங்களா???
ஐ வான்ட் விளக்கம் யுவரானர்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,

மிக்க நன்றி ஐயா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முத்தரசு,

மிக்க நன்றி தோழரே....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சதிஷ்,

மிக்க நன்றி நண்பரே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி..

வாம்மா மின்னல். ரொம்ப நாள் ஆச்சு இந்தபக்கம் வந்து..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

//இது கொஞ்சம் புரியல..
போன் செத்துப் போகுதுனு சொல்றீங்களா???
ஐ வான்ட் விளக்கம் யுவரானர்.. //

எதாச்சும் எழுதினா ரசிக்கனும்... இப்படி குண்டக்க மண்டக்க கேட்ககூடாது... என்னைக்காவது ஒருநாள் வரது... வரப்ப இப்படி ஏடாகூடாமா கேள்வி கேட்கிறது... இதுவே பொழப்பா போச்சி பையபுள்ள உனக்கு...

போன் செத்துபோகலம்மா...தூங்கி போச்சு... சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகிவிட்டது.. அதுக்கு ஆப்பு வைச்சுடாங்க....

இருவர் ஒருவராய் மாற
உலகம் மறக்க...
அலைபேசிக்கு உயிர்வூட்டம்
மறந்துபோய் அவர்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

என்ன கண்ணு, இந்த விளக்கம் போதுமா? இன்னும் கேட்டு சொல்லவா?

ஆர் யூ கெட்டிங் மை பதில்...

இந்திரா said...

ம்ம்ம் புரிஞ்சிடுச்சு..

(விளக்கமெல்லாம் நல்லாதான் இருக்கு.. போதும் போதும்.. ஏய் இந்திரா.. இனிமே டவுட்டுனு வாசன்கிட்ட கேப்ப???)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

கோழிக்குஞ்சு.. அடிக்கடி இந்த பக்கம் வரனும்... டவுட்டுனு ஏதாச்சும் கேட்கனும்... அப்பதான் நாங்களும் ஏதாச்சும் யோசிப்போம்...

வரனும்.. வராட்டி.. நாங்க உங்க வூட்டுக்கு வந்து கேள்வி கேட்போம்... சண்டை போடுவோம்...

இந்திரா said...

வாசன் வலைப்பக்கம் வர எண்ணமே.. என்ன செய்றது?? பிஸியோ பிஸி..
(நாங்க வெட்டியா இருந்தாலும் சீன் போடுவோம்ல..)
இனி கண்டிப்பா அடிக்கடி மொக்கை பின்னூட்டம் வரும்... டோன்ட் வொர்ரி..
கேள்வி மேல கேள்வி கேட்டு கொன்னெடுத்துடுவோம்ல...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

உங்கள் வரவினை என்றும் எதிர்நோக்கி...