பழகிபோன வாழ்க்கையாய் ஆகிவிட்டதால்
பலநேரம் அதற்குள் என்னை
பதுக்கிகொள்ள ஆரம்பித்து விட்டேன் - மகிழ்ச்சியாய்
பட்டாம்பூச்சியென பறக்க முடியாவிட்டாலும்...
புளித்துவிட்டது வாழ்க்கை போதுமென
பாகம்பேசி அதனிலிருந்து என்னால்
வில(க்)கிகொள்ள முடியாமலும் தவிக்கிறேன் - போராட்டமாய்
பட்டுபுழுபோல் நெளிந்துக்கொண்டே என்நாட்கள்
பிறப்பதற்கு முன்பே என்விதி
அப்போதே தெரிந்திருந்தால் ஒருவேளை
கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேன் - கரைக்கும்
வைரமுத்துவின் வைரவரிகளை போன்று...
மணப்பதற்கு முன்னாவது என்விதி
நான் அறிந்திருந்தால் ஒருவேளை
உந்தன் கர்ப்பத்தையாவது சுமக்காமல் - கரையாமல்
எந்தன் காலத்தை தள்ளியிருப்பேன்...
வாழ்வில் உண்டாகிய இக்கதி
இறைவன் செய்திட்ட சதியோ?
எனக்கும் எழுதபடாத விதியோ? - என்னவோ?
மதியிருந்தும் மிதிபடுகிறேன் வழியில்லாமல்...
10 comments:
பெண் பாவபட்டவளா?
இல்லை
விதியை நொந்து
வாழ பழக்கபட்டவளா?
பெண்ணாய் பிறப்பதே
பெரும் தவம்
பிறந்து விட்டாள்
அதுவே
பெரிய பாவம் !!!
பெண்கள் திறமைசாலிகள், அதனாலேயே அடக்கி வைக்கப் பட்டிருக்கிறார்கள்... பிடிவாதம் என்ற குணம் மட்டும் இல்லை என்றால் இன்று பெண்கள் தான் குடும்ப தலைவராய் வாழ்க்கை ஓட்டி கொண்டிருப்பார்கள்
இல்லை அனைத்தையும் துடைத்திட்டு இதமாக ஒரு வாழ்வைத் தேடலாம் பெண் பாவப்பட்டவள் என்று கூறிக் கொண்டு பெண்கள் தம் வாழ்வைச் சிறைப் படுத்துவது ஏற்க முடியாதது.
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
pen enpaval oru ellakku utpattu vaalnthu kondu iruukiraal.entha oru nerathilum pennay pirantharkka varutham adaiya vaikkamal irukkum nabargal kidaithuvittal.....pen endrum inbathai tharubaval.
அன்புள்ள ராணி,
மிக்க நன்றி...
இறைவன் எழுதும் மனித காவியத்தில் உண்டாகும் எழுத்துபிழைகள் வேண்டுமென்றாலும் ஆதரவற்றோர்கள் (அநாதை) என்று சொல்லக்கூடும்...
இறைவனின் படைப்பில் பெண்கள் பாவப்பட்டவர்கள் அல்ல...
ஆனால் அப்படி மாற்றப்படுகிறார்கள்...
பெண்ணாய் பிறப்பது பெருந்தவம்... ஆனால் அவர்கள் வாழ்க்கை வதைக்கப்படுகிறது... இதற்கு காரணம் ஆண்கள் மட்டுமல்ல...
அன்புள்ள சூர்யஜீவா,
மிக்க நன்றி தோழரே...
// பெண்கள் திறமைசாலிகள்... //
அதனால் தான் மதியிருந்தும் என்ற சொல்லை சொன்னேன்...
பிடிவாதம் என்பதால் மட்டுமில்லை வேறு சில பெண்களுக்கே உண்டான குணங்களும் உண்டு...
அன்புள்ள இலங்காதிலகம்,
மிக்க நன்றி...
அனைத்தையும் துடைத்துவிட்டு இதமாக வாழ்வை தேடவிடுமா இந்த உலகம்.... இதமான வாழ்வு இதுதான் என்று பெண்ணால் எதையும் வரையறுத்து கொள்ளவும் முடிவதில்லையே...
தம் வாழ்வு என்று எதையும் தனியாக முடிவெடுத்து செயல்பட முடியாத நிலையில் இன்னும் எத்தனையோ இந்திய பெண்கள்...
சிறைபடுத்தி கொள்ளவும் வேண்டாம்... சிறகு இருக்கிறது என்று வானம் தாண்டி பறக்கவும் வேண்டாம்..
பிறந்த இவ்வாழ்க்கையை மகிழ்வித்து அனுபவிக்கட்டும்... குறைந்தபட்சம் நித்தமும் மடியாமல்...
அன்புள்ள உமா ஐயர்,
மிக்க நன்றி...
தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி...
பெண் என்பவள் இன்பமே.... தாய், சகோதரி, தோழி, காதலி மற்றும் மனைவி என்று எவ்வடிவத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்பும், உறுதுணையுமாக வாழ்க்கை முழுதும்...
பெண்கள் ஒரு எல்லைக்குள் இருக்கலாம்... ஆனால் தொல்லைகளுக்குள் இருக்ககூடாது...
நான், ஒரு சிலருக்கு நல்ல நண்பனாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே என்னால் இவ்வரிகளை எழுதமுடிந்தது...
பழகிபோன வாழ்க்கையாய் ஆகிவிட்டதால்
பலநேரம் அதற்குள் என்னை
பதுக்கிகொள்ள ஆரம்பித்து விட்டேன் ///என்ன அற்புத உண்மை வரிகள்
அன்புள்ள அருள்மொழி,
மிக்க நன்றி...
தங்களின் கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி தோழி...
Post a Comment