Tuesday, October 25, 2011

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்... அனைவருக்கும்....




 தீபாவளி பண்டிகை வேண்டாமென சொல்லவில்லை.... கொண்டாட கூடாதென சொல்லிய ஒரு நபருக்கு அளித்த பதில்.. அதுவும் அவருடைய கேள்விக்கு...

// இராவணனைக் கொன்றதற்காக எடுக்கப்படுகின்ற விழா தீபாவளியானால்,

அந்த விழாவினைத் தமிழர் கொண்டாடலாமா?

தமிழனைக் கொன்ற ஆரியனை வணங்கலாமா?

தமிழனுக்குச் சுய உணர்வு எனவொன்று இருக்க வேண்டுமல்லவா?? //

இது எனக்கு ஒரு நண்பர்... தீபாவளி வாழ்த்திற்கு கூறியது... அதன் விளைவாக இதனை எழுதுகிறேன்...


எந்தவொரு மதமும்
எதற்கும் இழிவில்லை
எந்தவொரு மொழியும்
எதற்கும் கீழில்லை
எத்தனையோ வேதாந்தம்
சொல்லும் மனிதா
எல்லாம் வார்த்தைதானோ?

இன்று ஏனோ
இனம் பிரித்து
தமக்குள் பார்க்கின்றாயே?
தமிழ் இனத்தை
சேர்ந்த ஒருவனை(இராவணனை)
கொன்ற செயலுக்கு
ஆரிய இனத்தலைவனுக்கு(இராமனுக்கு)
விழாவா? இதுதேவையா?
தீபாவளி நமக்கில்லையென்று
காவியம் சொல்கிறாய்...
நியாயம் பேசுகிறாய்
இறக்கும் தமிழன்மீது
இருக்கும் தமிழன்மீது
இல்லாத அக்கறை???
இறந்த தமிழன்மீது!!!
வாழ்க நீகொண்டிருக்கும்
தமிழன் மீதான
தன்னிகரற்ற அன்பு...

இருக்கும் தமிழனுக்காக
இறக்கும் தமிழனுக்காக
உரிமைபெற வேண்டுமெனில்
தீபாவளி வேண்டாமென
உரக்கச்சொல் நாடறிய
உன்னோடு நானும்
தோளோடு தோளாக
சேர்கிறேன் ஒன்றாக...

சிந்திப்போம்... செயல்படுவோம்.... செயல்படுத்துவோம்...

11 comments:

Anonymous said...

stupid writing

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள Anonymous,

மிக்க நன்றி...

அ.முத்து பிரகாஷ் said...

ஒரு பக்கச் சார்பின்றி இடித்துரைக்கும் வார்த்தைகள் யோசிக்க வைக்கின்றன நெடிய மூச்சுடன்..

நலம் தானே தோழர் :))

வெகு காலமாயிற்று..
சூழ்நிலை தான் வேறென்ன..

எனதன்புகள்!

நெல்லை கபே said...

இது குறித்து மாற்றுக்கருத்தாக நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் இங்கே!
http://ahamumpuramum.blogspot.com/2011/10/blog-post_24.html

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள லியோ,

மிக்க நன்றி தோழரே...

நான் நலம்... நீங்கள்?

மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவிற்கு.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மாயன்,

மிக்க நன்றி தோழரே...

தங்களின் இனிய வரவிற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

// இராவணனைக் கொன்றதற்காக எடுக்கப்படுகின்ற விழா தீபாவளியானால், அந்த விழாவினைத்
தமிழர் கொண்டாடலாமா?

தமிழனைக் கொன்ற ஆரியனை வணங்கலாமா?

தமிழனுக்குச் சுய உணர்வு எனவொன்று இருக்க வேண்டுமல்லவா?? //

இதற்கு தான் நான் எழுதியது...
பண்டிகை கொண்டாட வேண்டாமென சொல்லவில்லை. அப்படி சொல்வதற்கு சரியான காரணம் இருந்தால் அதனை ஆதரிக்க சரியென்று சொல்கிறேன்...

என் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...

SURYAJEEVA said...

தீபாவளி கொண்டாடாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் உள்ளன, கொண்டாட ஆயிரம் காரணங்கள் உள்ளன, அவர் அவர் கருத்து அவர் அவருக்கே

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சூர்யஜீவா,

மிக்க நன்றி தோழரே...

நீங்கள் சொல்வது சரிதான் 100%... ஒருவர் கருத்தை மற்றவர் மீது திணிப்பது என்பதும், மனம் வருந்த பதில் அளிப்பதும் ஒருவகையில் குறை தான்...

இது ஒரு உதாரணம் மட்டுமே தோழரே கீழ் வருபது...

நான் தீபாவளியை கொண்டாடுபவன் எனில், உங்களுக்கு வாழ்த்து சொல்லும்போது பிடித்து இருந்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள்... எனக்கும் மீண்டும் சொல்லுங்கள்...

தீபாவளி கொண்டாடுவது பிடிக்கவில்லை என்றால் எனக்கு வாழ்த்தினை சொல்லுங்கள்.... இல்லை என்றால் சொன்னதற்கு நன்றி சொல்லிவிட்டு செல்லலாம்... இல்லையென்றால் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு செல்லலாம்...

ஆனால் நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக எனக்கு தீபாவளி பிடிக்காது... நீ கொண்டாடுவது சரியா? நீ தமிழனா என்று என்னை கேட்டால் என் மனம் எப்படி வருந்தக்கூடும்.... யோசிக்க வேண்டாமா? சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தாலும் பரவாயில்லை.... அவர் கூறிய இத்தகைய பதிலை ஏற்க கூடுமா?

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,

மிக்க நன்றி ஐயா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சதிஸ்,

மிக்க நன்றி நண்பா...

தங்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.