Monday, January 23, 2012

அன்பின் பரிமாணம்...


நாட்களை பொழுதுகளாக வகைபடுத்தி
சொன்னார்கள் முன்னோர்...
அன்பினை பொழுதுகளாக பிரித்தெடுத்து
சொல்லமுடிந்தது உன்னால்..

வேண்டும் என்றால் நெருங்கி
பழகும் தருணம்!
வேண்டாம் என்றால் விலகி
செல்லும் தருணமென்று...

அன்பினை பொழுதாக பிரித்தலில்
துளியும் வருத்தம் இல்லை...
மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளம்தான்
ஏனெனில்
உள்ளம் கொண்ட அன்பினை
வெறும் பொழுதுபோக்கு தானென்று
சொல்லாமல் இருந்த வரையிலும்...

4 comments:

arasan said...

என்ன ஆச்சு அண்ணே ..
கவிதையில் யாரையோ சொல்றமாதிரி இருக்கு ..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி தம்பி வருகைக்கு...

ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு???

Thava said...

மென்மையான கவிதை..வருடுகிறது மனதை..ஏதோ இனம் புரியாத ஏக்கங்கள் தங்கள் கவிதையில்..என்னை கவர்கிறது,நன்றி.

சைக்கோ திரை விமர்சனம்

Anonymous said...

அன்பினை பொழுதாக பிரித்தலில்
துளியும் வருத்தம் இல்லை...
மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளம்தான்
ஏனெனில்
உள்ளம் கொண்ட அன்பினை
வெறும் பொழுதுபோக்கு தானென்று
சொல்லாமல் இருந்த வரையிலும்...

NICCE........