Thursday, April 15, 2010

விலைமகள் (தெரு ஓரங்களில்)

கண்ணில் காந்தம் கொண்டு
மனதில் காமம் கொண்டு...
உள்ளத்தில் சோகமும் கொண்டு
உடலில் ரோகமும் கொண்டு..
பையில் காண்டமும் கொண்டு
கையில் ரொக்கம் வேண்டி...

16 comments:

Anonymous said...

சீ....இப்படியும் ஒருவாழ்க்கையா வலி இல்லாமல் பிறக்கும் வார்த்தைகள் மனிதர்களிடமிருந்து....இப்படியும் பொலைக்கனுமா...வேலைசெய்து பிழைத்தால்தான் என்ன...மானம் கெட்ட பொழைப்பு...என்செய்ய...மானம் என்பது மனுசிக்கு மட்டுமே என்றாகிவிட்ட சமுதாயத்தில் சேர்ந்தே தப்புசெய்த அவனுக்கு.. அவன் ஆம்பளைடா....எத்தனை பேர்.....சமாளிப்பான்டா...இப்படியான புகழ்வார்த்தைகள்...

கண்ணில் காந்தம் கொண்டு.....நீங்க‌ளே சொல்லிவிட்டீர்க‌ள் க்ண்ணில் காந்த‌ம் கொண்டு என்று....இந்த‌ காந்த‌ம் எங்கு சென்றாலும் உங்க‌ளை சுண்டி இழுத்து சாய்க்கும்போது....நான் ப‌த்தினியாய் எப்ப‌டிடாவாழ்வ‌து....விட்டுவிடுவீர்க‌ளா...ஆபிஸ், வீட்டு வேல‌...எங்கு என்றால் என்ன‌...நாங்க‌ள் பெண்க‌ள்...உங்க‌ளுக்கு சுக‌ம் அளித்து, எங்க‌ளை அழித்துக்கொள்ளும் பாவிக‌ள்...எத்தனைக் கால‌ம் மாறினாலும்...மாறாது தொட‌ரும் அதே ந‌ர‌க‌ங்க‌ள்தான் பெண்டீர்...என்று தாயைப்போல‌, ச‌கோத‌ரியைப்பொல‌ எண்ணிப்பார்க்கும் ஆண்க‌ள் பிற‌க்கிறார்க‌ள்ளோ அன்று நாங்க‌ள் உழைத்து பிழைக்க‌லாம்...எங்கே...தனது தாய், சாகோதரி, ம‌னைவி பத்தினி...பிற பெண்டிர் தன் மோகம் தனிய பிறப்பெடுத்த வேசைகள்தானே...ந‌ம்பிக்கைத்தானே வாழ்க்கை...வ‌ருமா கால‌ம்...எழுத்தால‌ரே சொல்லும்....

vicky said...

nice to seen that........by thambi vettothi sundaram...&..v.c.vadivudaiyan.

thambi vettothi sundaram said...

Thambi vettothi sundaram:


this film story based on real story....i.e. 10 years back story directed by v.c.vadivudaiyan...actress are karan,anjali,saravanan,kanja karrupu......music composed by vidhya sagar and lyrics writtend by vairamuthu.........


vist at www.vettothi.com

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள தோழா/தோழி,

தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்திற்கும் என் நன்றிகள்...

எலும்பில்லாத நாக்கு என்பதனாலோ எப்படிவேண்டுமென்றாலும் புரண்டு பேசிக்கொண்டு...

இதுபோன்ற நிலையில் உள்ளதற்கு பெண்களை மட்டும் குறைச்சொல்லவில்லை. என் போன்ற ஆண் வர்கங்களையும் முதலில் உரக்கவும் உறைக்கவும் குறைச்சொல்லவேண்டும் .

பெற்றெடுத்த பிள்ளைகளிடமும், சிறுமிகளிடமும் பாலியல் வன்முறைகள் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தாய், சகோதரி உறவு முறைகள் கூட அழிந்துவிடும் அவலத்தில் நாடு இன்று.

இத்தகைய சமுதாய அவலங்கள் அழிந்து நாடு சிறப்பு பெறும் என்பது என் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்கை....

(நிறைய எழுத கருத்தும் மனமிருந்தும் நேரமின்மையாய் சில வரிகளோடு மட்டும்)

1. இக்கவிதை யாருடைய மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதியது அல்ல... புண்படுத்துமேயானால் என்னை மன்னிக்கவும்.
2. நான் சிறந்த கவிஞனோ எழுத்தாளனோ இல்லை. நானும் தங்களை போன்ற ஒர் இனிய வாசகனாய். ஆனால் எழுத்தின் வழியே மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்.

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள விக்கி,

நன்றி....

Anonymous said...

ஆனால் எழுத்தின் வழியே மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்.

definitely....lets hope best...

பெற்றெடுத்த பிள்ளைகளிடமும், சிறுமிகளிடமும் பாலியல் வன்முறைகள் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தாய், சகோதரி உறவு முறைகள் கூட அழிந்துவிடும் அவலத்தில் நாடு இன்று.

ஆம் நண்பரே..அன்றய காலகட்டத்தில் வளர்ந்த பெண்பிள்ளைகலை உடன்பிறந்த சகோதரனே ஆனாலும் தொடமுடியாது...அருகில் நெருங்கி பழக அனுமதி இல்லை..அதேப்போலத்தான் தகப்பனிடமும்..பெண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளிடமே பழகி கொண்டனர்...எதுவானாலும் தாயிடம் மட்டுமே பகிர்தல்..இன்றய கல்ச்சர் அப்படி இல்லையே...எல்லோரும் நண்பர்கள் இங்கு...உணர்ச்சிவசப்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..உங்கள் கருத்தை வரவேற்க்கிறேன்...சீரியசாக பதில் இட்டதுக்கு நன்றி..

வைகறை நிலா said...

அந்த பெண்களின் வருத்தங்களை சொல்லும் வகையில் எழுதியிருந்தால் இன்னும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்..

வைகறை நிலா said...

//ஆம் நண்பரே..அன்றய காலகட்டத்தில் வளர்ந்த பெண்பிள்ளைகலை உடன்பிறந்த சகோதரனே ஆனாலும் தொடமுடியாது...அருகில் நெருங்கி பழக அனுமதி இல்லை..அதேப்போலத்தான் தகப்பனிடமும்..பெண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளிடமே
பழகி கொண்டனர்...//

15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்களைத் தொட்டு பேசும் பழக்கம் இருக்க கூடாது என்று சொல்வார்கள்..
அந்த காலத்தில் பெரியவர்கள் சொல்லியது எல்லாமே நன்மைக்காகவே..


எனினும் "ரக்ஷா பந்தன்" என்ற சகோதரருக்கான விழா கொண்டாடப்படுவது நம் நாட்டில்தான்.

எல்லா உறவும் அதனதன் புனிதத் தன்மையோடு எப்போதும் இருந்தால் அதுவே இந்தியாவுக்கு, (இந்திய கலாச்சாரத்திற்கு) சிறப்பு..

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள நிலா,

தங்களின் கருத்தை இங்கே வெளிப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் என் நன்றியும் தங்களுக்கு...

முடிந்தால் இதனை மாற்றுக்கின்றேன் இல்லையேல் மற்றொரு பதிவில் தொடர்கின்றேன்.

இந்தியாவின் கலாச்சாரம் இன்று நம்மிடையே வெறும் வார்த்தைகளில் மட்டும் பேச்சிலும் மற்றும் எழுத்திலும்.

இந்திய கலாச்சாரம் மேன்மை நிலைத்திட முயல்வோம் மற்றும் கடைப்பிடிப்போம். முடிந்தவரை மேற்கத்திய கலாச்சாரத்தை கைவிடுவோம்.

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள தோழா/தோழி (Anonymous),

தங்களின் மறுபார்வைக்கும் மற்றும் பதிப்பிற்கு மிக்க நன்றி...

கலாச்சார சீரழிவு என்பது இன்று நம்மை மெல்ல கொன்று கொண்டு இருக்கும் அமிர்தம்...அதுவே நமக்கு அளவுக்கு மீறும்போது நஞ்சு ஆகும்.

//எல்லோரும் நண்பர்கள் இங்கு...உணர்ச்சிவசப்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...//

வலைத்தளங்களின் மூலம் நட்புறவு ஒருபுறம் பெருக்கிகொண்டு இருந்தாலும்... மறுபுறம் குடும்ப உறவுகள் குறைந்து / சிதைந்து கொண்டு.

கவிதன் said...

அன்புள்ள நண்பர் வாசன் .... தங்களுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களும் அதற்கான தங்களின் பணிவான பதில்களும் மனதை தொடுகின்றன.... கவிதை வெறும் வார்த்தைகளாய் இல்லாமல் மனதை தொடுகின்றது...

தாய்மையை உள்ளடக்கிய இந்த பெண்மைக்கு என்றும் சிரம் தாழ்த்தும் உங்களுடன் கரம் கோர்க்கிறேன் ....

அன்புடன் , கவிதன்.

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள கவிதன்,

தங்களை போன்ற நல்ல இதயங்களை காற்றினை போல வரிகளில் வருடியதில் மிக்க மகிழ்ச்சி.

ஒருவர் நம்மின் கவிதைக்கு பின்னூட்டம் இடுகின்றார் என்றால் அது அவருக்கு பிடித்தோ அல்லது மறுத்தோ கருத்து இருக்கலாம். அவர்களுடைய மனதிற்கும் (பதிவிற்கும்) பதில் இடுவதில் நமக்கும் மகிழ்ச்சி அவருக்கும் மகிழ்ச்சி.தாங்களும் செய்துகொண்டு இருப்பதுதானே...

கவிதன்,தோழமையுடன் கைகோர்ப்போம். நாமும் நல்ல உறவுமுறைகளை நாளும் வளர்ப்போம்.

நட்புடன்,
தஞ்சை.வாசன்.

ஆதிரா said...

ஒன்றே ஒன்றை விலைக்குக் கொடுத்துவிட்டு பலவற்றை விலையாகப் பெறும் புண்ணியவதிகள் (ஊர் ஏச்சுகளையும் சேர்த்துதான். கவிதையின் கருத்தால் நைந்த மனதுடன்.. வாழ்த்துக்கள் இது போன்ற சிந்தனைகளை விதைக்க...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள ஆதிரா,

இன்று விலைக்கு அழிப்பது, விற்கபடுவது உடல்... ஆனால் நாளை விலைமதிக்க முடியாத உடலும் உயிரும் இலவசமாக அழிக்கப்படுவதை தெரிந்தும் தெரியாமலும்... விடுபடமுடியாமல்...

தங்களின் பார்வைக்கும், பதிவிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

vasan said...

கண்ணில் காம‌ம் கொண்டு
மனதில் க‌வ‌லை கொண்டு...
உள்ளத்தில் சோகம் கொண்டு
உடலில் ரோகம் கொண்டு..
பையில் காண்டம் கொண்டு
கையில் ரொக்கம் கொள்ள‌...

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள வாசன்,

தங்களின் வருகையில் மிக்க மகிழ்ச்சி...

வாசனின் வலைப்பக்கத்தில் இன்னொரு வாசன் என்பதும்...

வார்த்தையினை திருத்தம் செய்து வெளியிட்டமைக்கும்..

மிக்க நன்றி... தொடர்ந்து தங்களின் வரவையும் கருத்தையும் எதிர்நோக்கி...