Sunday, April 18, 2010

நீர்நிலைகள்...


ஜாதிகளை பெருக்க தெரிந்த மனிதா
நதிகளை பெருக்க மறந்தது ஏனோ?

அரசியல்வாதியே!
ஆற்றில் மணலை கொள்ளைக்கொண்டும்
நாட்டில் மக்களை சுரண்டிக்கொண்டும்
உன்பெயரை நிலைநாட்டும் நினைவாலும்
பணத்தாலும் வாழ்ந்துக்கொண்டு நீ....
என்னை தூர்வார நினைக்காமலும்
மறந்ததாலும் அழிந்துக்கொண்டு நான்...

மனிதர்களே!!
நீங்களே ஒற்றுமையுடன் இல்லாதபோது
எங்களை இணைக்கும் எண்ணம் சாத்தியமோ?
உங்களில் ஊடுருவியிருக்கும் அவலங்களை
நீங்களே களையெடுக்க முடியாதநிலையில்
பின்னர் எப்படி என்னில் கல(ந்திரு)க்கும்
குப்பைகளை அகற்ற இயலும்?

என்கரையின் ஓரங்களில் அமர்ந்து
பொங்கிவரும் ஓசையிலும் இசை
பாட்டின் ஜதிபாடிய காலம் அ(ஒ)ழிந்து.
என்பாதையின் வழிகளில் அமர்ந்து
போதைதரும் வஸ்துகளும் மது
பாட்டிலின் சுதிசேர்த்து கொண்டு இன்று.

கண்கவர் காட்சியாய் காடு களனி
வயல் குளமென எல்லாகளங்களும் 
பாய்ந்தவன் வறண்டு போனேன்
மீன்பிடித்தலும் நீச்சலும் மாறி
ஆடுகளம் சீட்டாடகளம் என்றென
வாழ்கையில் உருமாறி போனேன் இன்று

என்னை மூடிமறைத்து
உனக்கு அடுக்குமாடி
கட்டிடம் பலகட்டி
வளமாய் வாழ்கின்றாய்
என்னின் சோகங்கள் மறை(ற)ந்து
உங்களுடன் சுகமாய் தோன்றும் நாள் எந்நாளோ?

12 comments:

அஹமது இர்ஷாத் said...

Nice...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள அஹமது,

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...

அண்ணாமலை..!! said...

சரியா சொன்னீங்க வாசன்.
நியாயமான கவலை..
நதிகளெல்லாம் இனி..
நாட்டின் வரைபடங்களில் மட்டும்தான் போல..!

வைகறை நிலா said...

இன்றைய நாட்டின் நிலையில் அவசியமான ஒன்றை கவிதையில் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

நீர்நிலையே ஒர் நாட்டின் வளம்.
பொருளாதாரத்தில் பின்னடைந்த நிலையில் உள்ள மனிதர்களும் நலமடைய வேண்டுமென்றால் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த நிலையை மாற்றவேண்டும்..
பிறகு இந்தியா , அழகான, வளமான நாடாக மாறிவிடும்..

பாலன் said...

விழிப்புணர்வான கவிதை அருமை வாசன்

அன்புடன் மலிக்கா said...

வாசன் அழகாய் ஆழமாய் கருத்துகள் பொதிந்த கவிதை..

ஆதிரா said...

இந்திர விழா கொண்டாடிய இந்திய நதிகள் இன்று கானல் வரி மட்டுமே பாடிக்கொண்டு இருப்பது நம்மவர்களின் தன்னலம் மற்றும் ஒற்றுமை மனப்பானமை இல்லாமையால் என்பதை அழக்காக அரைந்துள்ளீர்கள் வாசன்.. திருந்துவார் யார்? நற்சிந்தனைக் கவிதைக்கு நன்றி...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள அண்ணாமலை,

உங்களின் கருத்தும் மிகவும் சரியானது.

வரைபடங்களிலிருந்தும் அகன்று விடும்... நம்மின் அடுத்த வம்சத்தினருக்கு இறந்த கால வரைபடமாய் ஒர் வரலாற்று பாடமாய் மட்டும் பாடபுத்தகத்தில் இருக்கும்...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள நிலா,

தங்களின் கூற்று மிகவும் நிதர்சனமானது. வளமான, வலமான இந்தியாவாக மாற நாட்டின் நீர்வளம் மிகவும் இன்றியமையாதது...

சிந்திப்போம்... செயல்படுவோம்...
நம்மால் முடிந்தவரை...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள பாலன்,

விழிப்புணர்வாக என்னதான் நாம் எழுதினாலும் அடைய வேண்டியவர்களை அடைந்து மாற வேண்டியவை மாற வேண்டும்...

சிந்திப்போம்... செயல்படுவோம்...
நம்மால் முடிந்தவரை...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புடன் மலிக்கா,

தங்களின் நீண்ட நாளுக்கு பிறகான வரவிற்கும் தங்களின் கருத்தினை தெரிவித்தமைக்கும் என் நன்றியும் வணக்கமும்...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள ஆதிரா,

ஆயிரம் கெட்டவர்கள் இருந்தாலும் ஒரு நல்லவர்களுக்காக பெய்யும் மழை...

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடகூடாது போல்.

ஆயிரம் மக்கள் இதனை மிதித்தாலும்
ஒருவன் மதித்தால் மாறும் என்ற நம்பிக்கையுடன்...

தன்னலம் அழியவும்... ஒற்றுமை ஓங்கவும் குரல் கொடுப்போம்...

சிந்திப்போம்... செயல்படுவோம்...
நம்மால் முடிந்தவரை...