Friday, April 29, 2011

மழை... நீ... நான்...


மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கேன்
நீ என்னை
காணவராமால் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்ககூடும்...

நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமால்
இன்றுவரை என்னுள்
இருக்ககூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சிக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்ககூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?

18 comments:

Dharshi said...

கவிதை நல்லா இருக்கு..

காதல் இல்லாம ஒருகவிதை எழுதுங்களேன்..

இந்திரா said...

//மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...//

இத நேரடியா சொல்ல வேண்டியது தானே.. பாவம் அந்த மழையை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க????

இந்திரா said...

//என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...//


இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா???
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

S.KALAIKOVAN said...

kalakkal ponga nanbaaaaaaaa

நியோ(அ.முத்து பிரகாஷ்) said...

பெய்யாமல் போகாது ...

வான் மழையும் காதல் மழையும் ...

நனைந்து நனைத்து களிப்புறும் நாள் வருமே ..

நலம் தானே தோழர்!!!

நியோ(அ.முத்து பிரகாஷ்) said...

தர்ஷி .. வாழும் மன்மதனிடம் இப்படியொரு வேண்டுகோளா!?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தர்ஷி,

மிக்க நன்றி...


எதன் மீதாவது காதல் கொண்டால் தானே கவிதை பிறக்கிறது...

அவளை காதலிக்க தொடங்கிய பின்பு...கவிதையை காதலிக்க தொடங்கினேன்...

கவிதையை காதலிக்க தொடங்கிய பின்பு... உலகை காதலிக்க தொடங்கிவிட்டேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

எதையும் நேரடியா சொன்னா பொண்ணுங்க எங்க ஏற்றுகொள்கின்றீர்கள்... இப்படி எதாவது செய்தாள் தானே வம்புக்காவது வரீங்க...

பில்டப் இல்லனா... ஆள் ஒல்டு அப்பு என்று ஓரம் இல்ல கட்டுறீங்க...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரத்னவேல்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி...

மீண்டும் உங்கள் வரவை நாடி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கலைகோவன்,

மிக்க நன்றி...

தங்களின் வருகையும் மற்றும் பின்னூட்டம் காண்பதிலும் மிக்க மகிழ்ச்சி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

மிக்க நன்றி...

நீண்ட நாட்களுக்கு பிறகான ஓர் வரவு... மனதிற்கு ஓர் மகிழ்ச்சியை அள்ளி தருகின்றது...


நான் நலம்... நீங்கள் நலமா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

// தர்ஷி .. வாழும் மன்மதனிடம் இப்படியொரு வேண்டுகோளா!? //


யாரது? வாழும் மன்மதன்....? உங்களுக்கு வேண்டிய உறவா?

சிவகுமாரன் said...

முத்தமழை அருமை.
மழை கொட்டட்டும் கோடையிலும் .

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிவகுமாரன்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும்... சாரலாய் வந்து வாழ்த்தியமைக்கும்..

நிலா said...

சுற்றி வளைக்கும் போது புரிந்து கொண்டேன்...........இது மழைக்காக அல்ல...மங்கைக்காகத் தான் என்று..........வாசன். வாழ்த்துக்கள் தம்பி!

nithubaby said...

நிச்சயம் நனைக்கும் ஒருநாள் அன்பின் மழையும் முத்த மழையும் ! உங்கள் காதல் தொடர்ந்து நீடித்தால் நண்பரே ! கவலை கொள்ள வேண்டாம் அது வரையிலும் ஆறுதலாய் நல்ல தோழி நான் இருக்கிறேன் !

nithubaby said...

கவிதை வரிகள் மிகவும் அருமை வாசன் ! உங்கள் காதலி விரைவில் வர எனது வாழ்த்துக்கள் ! நானுமே காத்திருக்கிறேன் என் {தோழி} மழையின் வருகைக்காக !