மனிதா!
உன் தாயும் அன்று
என்னை உனக்கு காட்டி
உணவினை வாயில் ஊட்டியிருப்பாள்
எனக்கும் சேர்த்து இட்டிருப்பாள்
அதில் அவள் சொன்ன
கருத்து உனக்கு புரிந்ததா?
இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து
உண்ண வேண்டும் என்பதனை நானறிந்தேன்.
உன் வீட்டின் விட்டத்தில் கூடுகட்டி
உன் கண்முன்னே வாழ்ந்தவன் அன்று...
மிருககாட்சி சாலைகளில் கூண்டிற்குள் - நாங்கள்
காணும்காட்சி பொருளாய் இன்று...
என்னை நாளை உன்வம்சத்திடம்
அடையாளம் காட்ட நானிருக்கமாட்டேன்...
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா....
ஏய் குருவி! சிட்டுக்குருவி ...
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட...
சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுபாடு...
திரைபாடல்களிலும் நீயும் மகிழ்ந்து நானும்
மகிழ்ந்திட்ட நாள்கள் வாழ்வில் இனிவருமோ?
நீங்கள் மகிழ்வாய் ஒருபுறம் வாழ்ந்திட
வேடர்களின் செயல்களில் கொஞ்சமும்
மரங்களை அழித்ததில் அதிகமும்
நச்சுபொருள்களின் கலப்பில் இன்னுமும்
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சில் - இன்று
மொத்த இனமும் நாங்கள் அழிந்துகொண்டு...
காலத்தின் மாறுதலாய் சுழற்சியாய் இருக்கலாம்
நேற்று அழிந்துபோன உயிரனங்கள் பலவுண்டு
இன்று அழிந்துபோகும் உயிரனங்களும் பலவுண்டு
நாளை அழிந்துபோகும் உயிரனங்களில் நீயுமுண்டு...
(இருக்கின்ற எல்லா உயிரனங்களை பாதுகாப்பது எப்படி?
நம்மை நாமே பாதுகாத்துகொள்ள இயலாத இந்த உலகில் மற்ற உயிரனங்களை பற்றி சிந்திக்க செயல்பட நேரமிருக்காது. ஆனால் அவைகளை போன்று நாமும் அழிந்துவிடுவோம் என்ற கோணத்தில் சற்றே சிந்திப்போம் செயல்படுவோம்... இருக்கின்ற எல்லா உயிரனங்களை பாதுகாப்போம்.)
12 comments:
உயிர்களின் அழிவை எண்ணி ஏக்கம் ஒருபுறம் உன் கவியின் வரிகளில் உள்ள ஆக்கச் சிந்தனையை எண்ணி இதற்கு நம்மால் எதாவது செய்ய முடியுமா என்ற் கவித்தாக்கம் ஒரு புறம்...இருந்தாலும் மனம் ரெக்கைக் கட்டி பறக்கிறது சிட்டுக்குருவியாய்.... அருமை வாசன்... சிந்தனைச் சிறிபியே...
அன்புடன்
ஆதிரா..
அன்புள்ள ஆதிரா,
தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் மற்றும் வாழ்த்துகளுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்...
நண்பரே...
அருமையாக உள்ளது. வாழ்த்துகள்
ungal samudhaya nokkam ungal kavidhaikalil prthipalikirathu
அன்புள்ள ஷம்மி,
மிக்க நன்றி...
உங்களிடமும் இல்லாத சமுதாய கண்ணோட்டமா என்ன என்னிடமிருப்பது...?
naam enna solliyum maarathu intha suyanala ulagam!!!!!... ungal kavithai kal arumai.....
சமூக அக்கறையுடன் ஒரு அருமையான படைப்பு.....!
சிந்தனைச் சிற்பி என்று ஆதிரா அவர்கள் தங்களுக்கு பட்டமளித்தது மிகச்சரியே!
வாழ்த்துக்கள் வாசன்!
அன்புள்ள புஷ்பா,
தங்களின் வருகைக்கும், சமூகம் குறித்த கருத்திற்கும் மற்றும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
மாறுவது, மாறாமல் போவது பற்றி கவலைபடாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதனை பற்றி சிந்திப்போம் செயல்படுவோம்...
அன்புள்ள கவிதன்,
தங்களின் வருகைக்கும்மற்றும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
ஆதிரா எனக்கு பட்டங்கள் நிறையா தந்திருக்காங்க அவர்களை விடுங்க உங்களை போன்றவர்களின் வரிகளுக்கும் வார்த்தைகளுக்கும் என் சிரம் தாழ்த்தி தலை வணங்குகின்றேன்.
அன்புள்ள திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர்,
மிக்க நன்றி...
மிக்க மகிழ்ச்சி என்னையும் என் வரிகளையும் உலகிற்கு எடுத்துகாட்டி சிறக்க செய்தமைக்கு...
நல்ல கருத்து.. ஆனால் இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி தேவை... அலைபேசி கோபுரங்களால் சிட்டு குருவி அழிந்தது என்ற பொதுவான கருத்து உங்கள் கவிதைகளிலும் பிரதி பலிக்கிறது... அதற்க்கான ஆதாரங்கள் எங்கும் காணவில்லை.. வெறும் ஊகமாகவே திரிகின்றது... சிட்டு குருவியை விட சிறிய தேன் சிட்டுக்களை இன்னும் என் வீட்டருகே பார்க்க முடிகிறது... வேறு எதோ காரணங்கள் இருக்கின்றன... சரியான ஆராய்ச்சி இல்லாமல் சிட்டு குருவி தானே என்ற அலட்சியம் ஊக செய்திகளுக்கு வழி வகுக்கிறது... என்னை பொறுத்தவரை மனிதனுக்கே உணவில்லாமல் வருந்தும் பொழுது சிட்டு குருவிக்கு உணவு இல்லாமல் இறந்திருக்குமோ என்பது தான்... இதுவும் ஊகம் தான், ஏனெனில் நான் ஆராய்ச்சி ஆலன் இல்லை
அன்புள்ள சூர்யா ஜீவா,
மிக்க நன்றி...
தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் மேலான கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி...
நானும் ஒரு ஆராய்ச்சியாளன் இல்லை தங்களை போலவே... ஆனால் ஊடகங்கள் கூறும் சில செய்திகளை மனதில் கொண்டே எழுதியது... நீங்கள் கூறுவதை போல அலைபேசி கோபுரங்களால் மட்டும் அழிந்து இருக்க வாய்ப்பு இல்லை...
நானும் அதுபோல் சொல்லவில்லை... ஆனால் அதுவும் ஒரு காரணம் பறவைகள் இனம் அழிந்து வருபதற்கு... ஊடகம் கூறும் யாவும் யூகம் என்று விட்டுவிடவும் இயலாது...
உண்ண உணவில்லாமல்
இருக்க இடமில்லாமல்
சுவாசிக்க நல்லகாற்றுமில்லாமல்
இறந்திருக்க கூடும்
சரிதான்.. ஆனால்
உலகத்தின் எல்லாமூலையிலுமா?
http://www.natureforever.org/node/6
Post a Comment